Saturday, May 15, 2010

ஹாரி பாட்டர் புத்தகம்1 - ஹாரி பாட்டர் மற்றும் மந்திரகல் [பதிவு 10]

ஹாரி பாட்டர் புத்தகம்1 - ஹாரி பாட்டர் மற்றும் மந்திரகல் [பதிவு 10 ]

அத்தியாயம் 6 – ஒன்பதே முக்கால் பிளாட்பார்மில் இருந்து பயணம்

ஹாரியின் சென்ற மாதம் அவ்வளவு சிறப்பாக இல்லை. டட்லி ஹாரியை பார்த்து பயப்படுகிறான். அவன் சித்தியும் சித்தப்பாவும் அவன் இல்லாதது போல் நடந்து கொள்கிறார்கள்.

அதனால், ஹாரி தன் அறையிலேயே தன் ஆந்தையுடன் இருந்தான். அந்த ஆந்தைக்கு ஹெட்விக் என பெயர் சூட்டினான். அவன் இரவெல்லாம் கண் விழித்து படித்து கொண்டிருப்பான். ஹெட்விக் ஜன்னல் வழியாக தன் இஷ்டம் போல் சென்று வந்தது. நல்ல வேளை அவன் சித்தி இப்போதெல்லாம் அவன் அறைக்கு வருவது கிடையாது. இல்லையென்றால் ஹெட்விக் அவ்வப்போது கொண்டு வரும் இறந்த எலிகளால் நிறைய பிரச்சனை வந்து இருக்கும்.

ஆகஸ்டின் கடைசி நாளன்று, அவன் சித்தப்பாவிடம் நான் நாளைக்கு ஹாக்வாட்ஸ் பள்ளிக்கு செல்ல கிங் கிராஸ் ரயில் நிலையத்திற்கு செல்ல வேண்டும். என்னை அங்கே உங்க காரில் இறக்கி விட முடியுமா? என்று ஹாரி கேட்டான்.

சரி என்றார். பின்னர், மந்திர பள்ளிக்கு செல்ல ரயிலா? பறக்கும் கம்பளம் இல்லையா? என்று கேலியாக கேட்டார்.

ஹாரி எதுவும் பதில் சொல்லவில்லை.

சரி, உன் பள்ளி எங்கே இருக்கிறது? என்றார் அவன் சித்தப்பா.

”எனக்கு தெரியாது”, என்று ஹாரி கூறி, ஹாக்ரிட் கொடுத்த டிக்கெட்டை முதல் முறையாக பார்த்தான்.

”நான் சரியாக பதினொரு மணிக்கு ஓன்பதே முக்கால் ப்ளாட்பாரத்திலிருந்து ரயில் ஏற வேண்டும் என்று போட்டு இருக்கிறது”, என்றான்.

எந்த ப்ளாட்பாரம்?

ஓன்பதே முக்கால் ப்ளாட்பாரம்.

முட்டாள் மாதிரி பேசாதே…. ஓன்பதே முக்கால் ப்ளாட்பாரம் என்று எதுவும் கிடையாது, என்றார் அவன் சித்த்ப்பா.

ஆனால் என் டிக்கெட்டில் போட்டு உள்ளதே, என்றான் ஹாரி.

நாளைக்கு அங்கு போகும் போது உனக்கே தெரியும். எப்படியும் நாங்க நாளைக்கு லண்டன் போகும் போது உன்னை அங்கே விட்டுட்டு போறோம், என்றார்.

அடுத்த நாள், அவர்கள் ரயில் நிலையத்திற்கு 10.30 க்கு வந்து சேர்ந்தனர்.

அங்கே பார்த்தியா…. ப்ளாட்பாரம் 9 மற்றும் 10. உன்னோட ப்ளாட்பாரம் இதுக்கு நடுவில எங்கயாவது இருக்கும் போயி தேடு… என்று கூறி விட்டு அவர்கள் கிளம்பி சென்று விட்டனர்.

ஆனால், 9வது ப்ளாட்பாரம்க்கும் 10வது ப்ளாட்பாரம்க்கும் இடையில் ஒன்றுமே இல்லை. எல்லோரும் அவனையும் அவன் ஆந்தையும் பார்த்து கொண்டு சென்றனர்.

ஹாரி அங்கு நின்ற ரயில் காவலரை பார்த்து இங்கு ஓன்பதே முக்கால் ப்ளாட்பாரம் எங்குள்ளது, என்று கேட்க நினைத்தான். ஆனால் தன்னை பைத்தியம் என்று அவர் நினைப்பாறோ என்று எண்ணினான்.

கண்டிப்பாக ஹாக்ரிட் தன்னிடம் எப்படி 9 மற்றும் 10 ப்ளாட்பாரம் நடுவில் எப்படி நுழைவது என்று சொல்லாமல் சென்று விட்டார். மணி வேற 11 நெருங்கி கொண்டு இருந்தது.

ஹாரி பாட்டர் புத்தகம்1 - ஹாரி பாட்டர் மற்றும் மந்திரகல் [பதிவு 9 ]

ஹாரி பாட்டர் புத்தகம்1 - ஹாரி பாட்டர் மற்றும் மந்திரகல் [பதிவு 9 ]


அத்தியாயம் 5 : கோண வழிபாதை[Diagon Alley] [தொடர்ச்சி ]


பின்னர் அவர்கள் ஹாரிக்கு வேண்டிய பொருட்களை வாங்க புறப்பட்டனர்.
"உனக்கு முதலில் சீருடை வாங்க வேண்டும்", என்றார் ஹாக்ரிட். அவர்களுக்கு எதிரில் இருந்த கடையை பார்த்து ஹாரி நீ போயி மேடம் மால்கின்ஸ் துணிகடையில் உனக்கு வேண்டிய சீருடையை வாங்கு நான் அந்த ஒழுகும் கொப்பரை கடை வரை சென்று வருகிறேன் என்றார்.

மேடம் மால்கின் ஒரு குள்ளமான, சிரித்த முகம் கொண்ட சூனியகாரியாக இருந்தாள்.

ஹாரியை பார்த்தவுடன் "ஹாக்வாட்ஸ் தானே", என்றாள். "இங்கேயிரு உன்னுடைய அளவுக்கு உள்ள உடையை எடுத்து வருகிறேன்", என்று கூறி கடையின் பின்மூலைக்கு சென்றாள்.

அந்த கடையின் இன்னொரு பக்கம் கூர்மையான நாடியும், வெளிறிய முகமும் உடைய ஒரு பையனின் உடைக்கு ஒரு சூனியக்காரி அளவு எடுத்து கொண்டிருந்தாள்.

"ஹலோ, நீயும் ஹாக்வாட்ஸ் தானே", என்றான் அவன்.

ஆமாம் என்றான் ஹாரி.

என் அப்பா பக்கத்துக்கு கடையில் எனக்கு புத்தகம் வாங்கி கொண்டிருக்கிறார்.என் அம்மா எனக்கான மந்திரகோலை வாங்க சென்றுள்ளனர், என்றான். பின்னர்,"நான் அவர்களை கண்டிப்பாக ஒரு வேகமாக செல்லும் துடைப்பகட்டையை வாங்க வைக்க போகிறேன். ஏன் முதல் வருட மாணவர்கள் தங்கள் சொந்த துடைப்பகட்டையை எடுத்து வர கூடாது என்று சொல்கிறார்களோ, நான் எப்படியாவது என்னுடைய துடைப்பகட்டையை ஹாக்வாட்சுகுள் கொண்டு வரபோகிறேன்", என்றான்.

ஹாரிக்கு இவன் பேசியதை கேட்டதும் டட்லி தான் நினைவுக்கு வந்தான்.

"உனக்கு சொந்தமாக துடைப்பம் இருக்கிறதா", என்றான்.

"இல்லை", என்றான் ஹாரி.

"குயூடிச்[Qudditch] விளையாடிறிக்கியா", என்றான்.

"இல்லை", என்றான் ஹாரி.

"நான் விளையாடி இருக்கிறேன் - நம்முடைய குழுவிற்காக குயூடிச் விளையாட தேர்வாகவிட்டால் பெருத்த அவமானம் என்று என் தந்தை கூறியுள்ளார். நானும் அதற்க்கு ஒத்துக்கொண்டு தான் ஆக வேண்டும்.............. எந்த குழுவில் நீ இருப்பாய் என்று உனக்கு தெரியுமா", என்றான்.

தெரியாது என்றான் ஹாரி.

"ம்ம், யார்க்கும் தெரியாது, அங்கே போன பிறகு தான் தெரியும். ஆனால் எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது, நான் கண்டிப்பாக சிலிதரின்[Slytherin] ஹவுசில் தான் இருப்பேன். என் குடும்பத்தில் உள்ள அனைவரும் அதில் தான் இருந்தார்கள். ஹப்பில்பப்[Hufflebuff] ஹவுசில் ஒருவேளை சேரும் நிலைமை வந்தால் நான் பள்ளியை விட்டே நின்று விடுவேன்", என்றான்.

ஹாரியும் இதை போல எதாவது தனக்கு தெரிந்தையும் கூற வேண்டும் நினைத்தான். ஆனால் அவனுக்கு ஹாக்வாட்சை பத்தி எதுவும் தெரியாதே.

கதவை பார்த்து, "அங்கே பார்த்தாயா, அது ஹாக்ரிட் தானே, அவர் ஒரு வேலைக்காரன் தானே", என்றான்.

"இல்லை, அவர் பாதுகாவலர்", என்றான் ஹாரி.

"ஆமாம் அதை தான் நானும் கூறினேன். பள்ளிக்கு வெளியில் உள்ள காலி நிலத்தில் ஒரு குடிசையில் இருப்பார். எப்பொழுதும் குடித்து கொண்டு, மாயம் செய்கிறேன் என்று கூறி முட்டாள் தனமாக எதாவது செய்து தன் குடிசையை தீப்பிடிக்க வைப்பார்", என்றான்.

"அதெல்லாம் இல்லை, அவர் மிக சிறப்பானவர்", என்றான் ஹாரி.

"ஏன், அவருடன் நீ வந்துள்ளாய். எங்கே உனது பெற்றோர்", என்றான் அவன்.

"அவர்கள் இறந்துவிட்டனர்", என்றான் ஹாரி.

"வருத்தபடுகிறேன், அவர்களும் நம்ம வகையை சேர்ந்தவர்கள் தானே?", என்றான் அவன்.

"அவர்கள் சூனியக்காரி மற்றும் சூனியக்காரன் தான், இதை தானே கேட்கிறாய் ", என்றான் ஹாரி.

"ஆமாம், பிற வகையினரை பள்ளிக்குள் அனுமதிக்க கூடாது என்று நான் நினைக்கிறேன். அவர்களுக்கு மந்திரம் கற்று கொடுக்கவே கூடாது. சிலர் அவர்களுக்கு கடிதம் கிடைக்கும் வரை ஹாக்வாட்சை பற்றி தெரியாமல் இருப்பார்கள். சரி உன்னுடைய முழு பெயர் என்ன?", என்றான் அவன்.

ஹாரி பதில் சொல்லும் முன்,"உன்னுடைய துணி தயாராகி விட்டது", என்றாள் மேடம் மால்கின். ஹாரி துணியை வாங்கி கொண்டான்.

சரி, உன்னை ஹாக்வாட்சில் சந்திக்கிறேன்", என்றான் அவன்.

ஹாரி அமைதியாக ஹாக்ரிட் வாங்கி வந்த ஐஸ் கிரீமை சாப்பிட்டான். என்னவாயிற்று என்று ஹாரி முகத்தை பார்த்து ஹாக்ரிட் கேட்டார்.

"ஒன்றும் இல்லை", என்று பொய் கூறினான். பின்னர் ஒரு கடையில் இருந்த பேனா எழுதும் போதே நிறம் மாறியதை பார்த்து மகிழ்ச்சி அடைந்தான். பின்னர் ஹாக்ரிடிடம், "குயூடிச் என்றால் என்ன?", என்றான் ஹாரி.

"குயூடிச், என்பது சூனியகாரர்களின் விளையாட்டு. இது மக்கில்சின் கால்பந்தாட்டம் போன்றது. இதை துடைப்பத்தின் மேல் அமர்ந்து அதன் மூலம் பறந்து கொண்டே விளையாடுவது. அதில் நான்கு பந்துகள் இருக்கும். அதன் அனைத்து விதிகளையும் கூறுவது கடினம் ஹாரி", என்றார் ஹாக்ரிட். பிறகு, "சிலிதரின் மற்றும் ஹப்பில்பப் என்றால் என்ன?", என்றான்.

அது "ஸ்கூல் ஹவுஸ்கள்". மொத்தம் நான்கு இருக்கின்றன. ஹப்பில்பப் தான் திறமை குறைந்தவர்கள் உள்ள ஹவுஸ் என்று எல்லோரும் கூறுகிறார்கள்", என்றார்.

"நான் கண்டிப்பாக ஹப்பில்பப் தான்", என்றான் ஹாரி விரக்தியாக.

"சிலிதரின் போவதற்கு ஹப்பில்பப்பே சிறந்தது", என்றார் ஹாக்ரிட். "தீய வழியில் சென்ற சூனியக்காரர்கள் மற்றும் சூனியக்காரிகள் கண்டிப்பாக சிலிதரினில் இருந்து தான் வந்து இருப்பார்கள், பெயர்-உச்சரிக்க-கூடாதவனும் அந்த ஹவுஸ் தான்".

"வால்-மன்னிக்கவும் - பெயர்-உச்சரிக்க-கூடாதவன் ஹாக்வாட்சில் இருந்தானா?".

"பல வருடங்களுக்கு முன்னால்", என்றார் ஹாக்ரிட்.

ஹாரிக்கு புத்தகங்களை ஒரு புத்தக கடையில் வாங்கினர். ஹாக்ரிட் ஹாரியை சாபங்கள் மற்றும் எதிர்சாபங்கள் புத்தகத்தை வாங்க விடாமல் வெளியே இழுத்து வந்தார்.

"நான் டட்லியை எப்படி சபிப்பது என்று பார்த்து கொண்டிருந்தேன்", என்றான் ஹாரி.

"அது சரியான யோசனை இல்லை. நீ பள்ளிக்கு வெளியே மக்கில் உலகத்தில் சில தவிர்க்க முடியாத சமயங்கள் தவிர பிற நேரத்தில் மந்திரங்கள் உபயோகிக்க கூடாது", என்றார் ஹாக்ரிட்.

ஹாக்ரிட் அந்த பொருட்களின் பட்டியலை பார்த்து, இன்னும் மந்திரகோல் மட்டும் பாக்கி இருக்கிறது என்றார். "உனக்கு பிறந்த நாள் பரிசும் நான் வாங்க வேண்டும். நான் சென்று உனக்கு ஆந்தை வாங்கி வருகிறேன். அது உனக்கு மிகவும் உதவியாக இருக்கும். கடிதங்களை எடுத்து செல்லவும் உதவும். நீ எதிரில் உள்ள ஆளிவந்தர் கடைக்கு சென்று மந்திரகோல் வாங்கு", என்றார் ஹாக்ரிட்.

அந்த கடை பழமையாகவும், குறுகலாகவும் இருந்தது. அந்த கடையின் கதவில் ஆளிவந்தர்: மிக சிறந்த மந்திரகோல் செய்பவர் 382 BC -யிலிருந்து என்று போட்டிருந்தது.

அதன் உள்ளே ஹாரி சென்றதும், "மதிய வணக்கம்", என்று ஒரு குரல் கேட்டது. ஒரு வயதானவர் ஹாரியின் முன்னால் நின்று கொண்டிருந்தார்.

"ஹலோ", என்றான் ஹாரி.

"உன்னை மிக விரைவில் பார்ப்பேன் என்று தெரியும் ஹாரி பாட்டர். அப்படியே உன் அம்மாவின் கண் உனக்கு. நேற்று தான் உன் அம்மா வந்து அவர்களின் முதல் மந்திரக்கோலை வாங்கியது போலிருக்கிறது", என்றார் ஆளிவந்தர்.

உன் அப்பா மகோனி மரத்தில் செய்த 11 இன்ச் மந்திர கோலையே விரும்பினார். மிக அதிக சக்திக்கும் மற்றும் உருமாற்றத்திற்கும் மிக உதவியாக இருக்கும். உன் அப்பா மிகவும் அதை விரும்பினார். ஆனால் மந்திரகோல் தான் மந்திரவாதியை தேர்ந்தெடுக்கிறது என்பது தான் உண்மை.

ஆளிவந்தர் ஹாரியின் மிக அருகில் வந்து அவன் முன் நெற்றியில் உள்ள தழும்பை உற்று நோக்கினார்.

”என்னை மன்னிக்கவும் ஹாரி, நான் விற்ற ஒரு மந்திரகோல் தான் இதை செய்துள்ளது”, என்றார். “பதிமூன்றரை இன்ச் அடி நீளம், மிக சக்தி வாய்ந்தது, ஆனால் தவறானவனின் கையில்……. ம்ம்ம்….. அந்த மந்திரகோல் என்ன செய்ய போகிறது என்று முன்பே எனக்கு தெரிந்திருந்தால்….”

மிக கவலையில் தன் தலையை ஆட்டி கொண்டு ஹாகிரிட்டை பார்த்தார்.

ரூபியஸ் ஹாக்ரிட், ஓக் மர மந்திரகோல், பதினாறு இன்ச் அல்லவா?, என்றார், ஆளிவந்தர்.

ஆமாம், என்றார், ஹாக்ரிட்.

நல்ல மந்திரகோல், அது. நீ பள்ளியை விட்டு நீக்கப்படும் போது உடைந்து விட்டதல்லவா, என்றார் ஹாக்ரிட்.

ஆமாம், அதன் துண்டுகளை இன்னும் வைத்துள்ளேன், என்றார் ஹாக்ரிட். அதை உபயோகிக்கப்பதில்லையே.. என்றார் ஆளிவந்தர்.

இல்லையே, என்றார் ஹாக்ரிட். அப்போது அவர் தன் குடையை இறுக பிடித்து கொண்டு இருப்பதை ஹாரி கவனித்தான்.

ம்ம்ம்ம், என்று கூறி ஹாக்ரிடை ஊடுருவி பார்த்தார் ஆளிவந்தர். பின்னர், ஹாரியை நோக்கி தன் மிக பெரிய அளவுகோலை எடுத்து, எந்த கையில் மந்திரகோலை உபயோகிப்பாய் என்றார்.

“அது…. வலது கை”, என்றான் ஹாரி.

அந்த கையை நீட்டு ஹாரி, என்றார். அவன் கையை அளவு எடுத்து கொண்டு, ஆளிவந்தரின் மந்திரகோல் ஒவ்வொன்றும் தனிதன்மையான மந்திர தன்மை கொண்ட பொருட்களானது. இதில் ஒற்றை கொம்பு குதிரை கேசம், பீனிக்ஸின் இறகுகள், மற்றும் டிராகனின் இதய நரம்புகள் போன்ற பொருட்களை கொண்டு உருவாக்கியுள்ளேன். எவ்வாறு இரண்டு ஒற்றை கொம்பு குதிரை அல்லது டிராகன் அல்லது பீனிக்ஸ் ஒன்றாக இருக்காதோ அதை போல, ஆளிவந்தரின் இரண்டு மந்திரகோல் ஒன்றாக இருக்காது. நீ பிற மந்திரவாதியின் கோலில் இருந்து உன்னுடைய முழு சக்தியை வெளிப்படுத்த இயலாது, என்றார்.

ஹாரி, பீச்மர மந்திரகோல் மற்றும் டிராகனின் இதய நரம்பு கொண்டது, ஒன்பது இன்ச்… முயற்சி செய்து பார் என்றார். ஹாரி அதை முயற்சிக்கும் முன் அதை பறித்து கொண்டு, மாப்பிள் மர, பீனிக்ஸ் இறகுகள் மந்திரகோல் ஏழு இன்ச், ம்ம் பார் என்றார்.

ஹாரி மந்திரகோலுடன் தன் கையை தூக்கினான். அதையும் ஆளிவந்தர் பறித்து கொண்டார். பிறகு வந்த ஒவ்வொரு மந்திரகோலையும் ஹாரி முயற்சி செய்ய ஆளிவந்தர் பறித்து வைப்பது நடந்து கொண்டு இருந்தது.ஆளிவந்தர் என்ன எதிர்ப்பாக்கிறார் என்று ஹாரியால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஒதுக்கப்பட்ட மந்திரகோல் மலை போல் குவிந்து கொண்டே சென்றது.

மிக சிக்கலான வாடிக்கையாளர், கவலைபடாதீர்கள். மிக பொருத்தமான மந்திரகோலை கண்டுகொள்ளலாம் என்றார். ஆமாம், ஏன் கூடாது------மிக விசித்திர பொருத்தம்----------- புனிதமான மற்றும் பீனிக்ஸ் இறகுகள் மந்திர கோல், பதினோறு இன்ச் நீளம்.



ஹாரி, தன் கையில் அந்த மந்திரகோலை எடுத்தான். அவனை சுற்றி பிரகாசமான ஒளி தோன்றியது. ஆளிவந்தர் மிக சந்தோசத்தில், “ சிறப்பு, மிக சிறப்பு, என்ன ஒரு ஆச்சரியம், “, என்றார்.



”என்ன அது?, என்றான் ஹாரி.

நான் விற்ற ஒவ்வொரு மந்திரகோலும் எனக்கு நினைவு இருக்கிறது. உன்னிடம் உள்ள மந்திரகோலில் பீனிக்ஸ் இறகு உள்ளது. அந்த பீனிக்ஸ் இன்னும் ஒரே ஒரு இறகு தான் தந்தது. அது இந்த தழும்பு உனக்கு தந்தவனின் மந்திரகோலில் உள்ளது, என்றார்.

ஹாரி, உன்னிடம் இருந்து மிக சிறப்பான விடயங்களை எதிர்பார்க்கிறேன். மந்திரகோல் தான் மந்திரவாதியை தேர்ந்தெடுக்கிறது. பெயர்-உச்சரிக்க-கூடாதவன் மிக கொடுமையான விடயங்களை செய்து இருந்தாலும், அவன் செய்தெல்லாம் மிக சிறப்பானவை, என்றார்.



பின்னர், ஹாரியும் ஹாக்ரிடும் அந்த கடையில் இருந்து புறப்பட்டு ரயில் நிலையத்துக்கு வந்தனர்.



எல்லோரும் என்னை மிக புகழ் வாய்ந்தவனாக பார்க்கிறார்கள். ஆனால், என் பெற்றோர்கள் இறந்த இரவில் என்ன நடந்தது என்றே எனக்கு நினைவில்லை என்றான் ஹாரி.

கவலைப்படாதே… ஹாரி… ஹாக்வாட்ஸ் ஆரம்பிக்கும் போது இது அனைத்தும் உனக்கு புரியும்., என்றார் ஹாக்ரிட். பின்னர் ரயிலில் ஏறி அவர்கள் டர்ஸ்லியின் வீட்டிற்கு புறப்பட்டனர்.

”இது தான் டிக்கெட், ஹாரி. செப்டம்பர் முதல் தேதி --- மகாராஜா குறுக்கு சாலை, டிக்கெட்டில் அனைத்து விவரமும் இருக்கிறது, ஹாரி, டர்ஸ்லியிடம் எதவாவது பிரச்சனை என்றால் எனக்கு கடிதம் அனுப்பு. அந்த ஆந்தைக்கு நான் எங்கே இருப்பேன் என்று தெரியும், என்று சொல்லி விட்டு, ரயில் நின்ற அடுத்த நிலையத்தில் இறங்கி ஹாக்ரிட் புறப்பட்டார்.

ஹாக்ரிட் செல்வதை ஹாரி ஜன்னல் வழியாக அவர் தன் கண் பார்வையில் இருந்து மறையும் வரை பார்த்து கொண்டே இருந்தான்.



[தொடரும் – அத்தியாயம் 6 – ஒன்பதே முக்கால் பிளாட்பார்மில் இருந்து பயணம்]

Tuesday, February 9, 2010

ஹாரி பாட்டர் புத்தகம்1 - ஹாரி பாட்டர் மற்றும் மந்திரகல் [பதிவு 8 ]

ஹாரி பாட்டர் புத்தகம்1 - ஹாரி பாட்டர் மற்றும் மந்திரகல் [பதிவு 8 ]

அத்தியாயம் 5 : கோண வழிபாதை[Diagon Alley] [தொடர்ச்சி]

ஹாக்ரிட் தின தகவல் நாளிதழை படித்து கொண்டு இருந்தார். ஹாரியின் மனத்தில் ஆயிரமாயிரம் கேள்விகள் இருந்தது. அவர் நாளிதழை படிக்கும் வரை அமைதியாக இருக்க முயற்ச்சி செய்து கொண்டிருந்தான்.

“வழக்கம் போல் சூனியக்காரர்களின் அமைச்சரவை எல்லாவற்றிலும் பிரச்சனை பண்ணி கொண்டிருக்கிறார்கள்”, என்று நாளிதழின் பக்கங்களை திருப்பி கொண்டு ஹாக்ரிட் முணுமுணுத்தார்.

“சூனியக்காரர்களுக்கு அமைச்சரவை எல்லாம் இருக்கிறதா?, என்று ஹாரி கேட்டான்.

“ஆமாம், அவர்கள் டம்பிள்டோரை அமைச்சராக்க முயற்ச்சி செய்தனர். ஆனால் அவர் ஹாக்வார்ட்ஷை விட்டு போக விரும்பாததால் அந்த வயதான் கார்னெலியஷ் பட்ச் அமைச்சரானார். சரியான முட்டாள்… எப்பொதும் எதவாது செய்து விட்டு தினமும் டம்பிள்டோருக்கு ஆந்தை அனுப்பி அறிவுரை கேட்டு கொண்டிருப்பார்.”, என்றார் ஹாக்ரிட்.

“ஆனால் சூனியக்காரர்களின் அமைச்சரவையின் பணி என்ன?”

“அவர்களின் முக்கிய பணி இந்த மாயலோகத்தை சாதாரண மக்களின் பார்வையில் இருந்து மறைப்பது தான்.”

“எதற்க்காக?”

“எதற்க்காகவா? எல்லோருக்கும் தங்களது பிரச்சனைகளை தீர்ப்பதற்கு மந்திர தீர்வு தேவைபடுக்கிறது. நாம் தனியாக இருப்பதே நல்லது.

அப்போது படகு துறைமுகத்தின் சுவரை தட்டி கொண்டு நின்றது, ஹாக்ரிட் செய்திதாளை சுருட்டி வைத்து கொண்டு தெருவில் இறங்கி நடக்க ஆரம்பித்தார்.

தெருவில் செல்வோரெல்லாம் ஹாக்ரிடை விடாமல் பார்த்து கொண்டே சென்றனர். ஹாக்ரிட் அவர்களை போல் இரு மடங்கு உயரம் இருந்தார். அது மட்டும் இல்லாமல் தெருவிலுள்ள சாதாரண பொருட்களை பார்த்து உரத்த குரலில்,“பார்த்தாயா ஹாரி, மக்கிள்ஸின் [மேஜிக் தெரியாதவர்கள்] கண்டுபிடிப்பை”, என்று கூறி கொண்டிருந்தார்.

“ஹாக்ரிட், க்ரிங்காட்ஸில் டிராகன் நிஜமாகவே உள்ளதா?”, என்று கேட்டான் ஹாரி.

“அவ்வாறு தான் எல்லாரும் கூறுகிறார்கள், சிறு வயதில் இருந்தே ஒரு டிராகன் வளர்க்க வேண்டும் என்று எனக்கு ஆசை”, என்றார் ஹாக்ரிட்.

அவர்கள் புகைவண்டி நிலையத்திற்கு வந்து சேர்ந்தனர். லண்டனுக்கு இன்னும் ஐந்து நிமிடத்தில் புறப்பட ரயில் ஒன்று தயாராக இருந்தது. ஹாக்ரிட் மக்கிள்ஸ் பணத்தை ஹாரியிடம் கொடுத்து டிக்கெட் வாங்கி வர வைத்தார்.

ஹாக்ரிட் இரு சீட்டில் ஒன்றாக அமர்ந்தார். அவர் அமர்ந்திருந்ததை பார்ப்பதற்க்கு ஒரு சர்க்கஸ் கூடாரம் போல் இருந்தது.

ஹாரி, கடிதத்தை வைத்துள்ளாய் அல்லவா?, அதில் உனக்கு என்னென்ன வாங்க வேண்டும் என்று போட்டுள்ளது”, என்றார் ஹாக்ரிட்.

ஹாரி கடித்தை திறந்தான். அதில்,

-----------------------------------------------------------------------------------------------------------------------------------
ஹாக்வாட்ஸ் – சூனியக்காரர் மற்றும் சூனியக்காரிகளுக்கான் பள்ளி சீருடை.

முதல் வருட மாணவர்களுக்கு தேவையானவை:

1: மூன்று முழு நீள மேலங்கி [கருப்பு}

2: ஒரு கூர் முனை கொண்ட தொப்பி [கருப்பு] பகலில் போடுவதற்கு

3: ஒரு ஜோடி பாதுகாப்பு கையுறை [டிராகன் தோலினாலானது அல்லது அதை போல்]

4: ஒரு குளிர்கால உடை [கருப்பு, வெள்ளி நிற கச்சை]

கவனிக்க: ஒவ்வொருவரின் உடையிலும் அவர்களின் பெயர் இருக்க வேண்டும்.

பாட புத்தகங்கள்:

எல்ல மாணவர்களும் பின்வரும் புத்தகங்களை வைத்திருக்க வேண்டும்.

1: மந்திரங்களின் பொதுவான புத்தகம் - மிராண்டா கோசாக்

2: மேஜிக்கின் வரலாறு – பாத்தில்லா பேக்சாட்

2: மந்திர கோட்பாடு – அடல்பெர்ட் வாப்லிங்

3: உருமாற்றம் – புதிதாக தொடங்குபவர்களின் வழிகாட்டி - எம்டிக் ஸ்விட்ச்

4: ஒராயிரம் மந்திர மூலிகைகள் – பிலிடியா ஸ்போர்

5: மந்திர பானங்கள் மற்றும் அதன் மாற்றங்கள் – அர்சீனியஸ் ஜிக்கர்

6: அருமையான மிருகங்கள் மற்றும் எங்கு அதை காண முடியும் – நியுட் சாமண்டர்

7: இருள் சக்திகள்: தற்காப்புக்கான வழிகாட்டி – குயிந்தின் ட்ரிம்பிள்

பிற பொருட்கள்:

1: மந்திரகோல் [அளவு 2]

2: கண்ணாடி அல்லது மந்திர படிகம்

3: தொலைநோக்கி

4: பித்தளை அளவுகோல்

மாணவர்கள் அவர்களுடன் ஆந்தை அல்லது பூனை அல்லது தேரை கொண்டு வரலாம்.

முதல் வருட மாணவர்கள் அவர்களின் சொந்த துடைப்பகட்டை எடுத்து வர அனுமதியில்லை என்பதை பெற்றோர்களுக்கு நினைவுபடுத்தி கொள்கிறோம்.

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இதை எல்லாம் லண்டனில் வாங்க முடியுமா என்று ஹாரி கேட்டான்.

“எங்கே செல்ல வேண்டும் என்று உனக்கு தெரிந்திருந்தால் கண்டிப்பாக வாங்க முடியும்”, என்றார் ஹாக்ரிட்.

ஹாக்ரிட் லண்டன் தெருவில் நடந்து கொண்டிருந்தார். ஹாரியும் அவரை பின்பற்றி நடந்து கொண்டிருந்தான். அங்கு பற்பல கடைகள் இருந்தது. ஆனால் எந்த ஒரு கடையும் மந்திர புத்தகங்களோ அல்லது மந்திரகோல் விற்கும் கடை போல் இல்லை.

“இது தான்”, என்றார் ஹாக்ரிட். “ஒழுகும் கொப்பரை, இது மிகவும் பிரசித்தியான இடம்”.

அது ஒரு சிறிய மதுகடை. ஹாக்ரிட் காட்டியிருக்காவிட்டால் ஹாரி அந்த கடையை கவனித்து கூட இருக்கமாட்டான். அங்கு தெருவில் சென்றவர்கள் எல்லாம் அந்த கடையை கவனிக்க கூட இல்லை. அவனும் ஹாக்ரிட் மட்டும் தான் அந்த பார்க்க முடிகிறதா என்று கூட அவன் எண்ணினான்.

அந்த இடதிற்க்குள் சென்றனர். அந்த இடம் இருட்டாக இருந்தது. அதில் சில வயதான பெண்மணிகள் உக்கார்ந்து ஆம்பல் நிற திராட்சைரசத்தை குடித்து கொண்டு இருந்தனர். ஒரு குள்ள மனிதன் கடையில் வேலை செய்பவரிடம் பேசி கொண்டிருந்தார். அவர்கள் அனைவரும் ஹாக்ரிடை அறிந்திருந்தனர். அவர்கள் ஹாக்ரிடை பார்த்து கையசைத்தனர். கடையில் வேலை செய்பவர் ஒரு கையில் மது கோப்பையை கொண்டு வந்து “வழக்கம் போல தானே ஹாக்ரிட்” என்றார்.

“இல்லை, டாம், நான் இங்கு ஹாக்வாட்ஸ் வேலையாக வந்துள்ளேன்”, என்றார் ஹாக்ரிட்.

“கடவுளே, இது…… இவன் தானே”, என்றார் பாரில் வேலை செய்பவர் ஹாரியை பார்த்து.

“ஒழுகும் கொப்பரை மதுக்கடை முழுவதும் தீடிரென்று முழு அமைதியானது”.

ஹாரி பாட்டர் நீங்கள் இங்கே வந்தது என்ன ஒரு கெளரவம்., என்றார் அவர்.

எல்லோரும், ஹாரி பாட்டர் உங்களை வரவேற்கிறோம் என்றனர்.

எல்லோரும் ஹாரி பாட்ட்ருக்கு கை கொடுக்க முயற்சி செய்தனர். ஹாரிக்கு என்ன செய்வது என்றே புரியவில்லை.

ஒரு வயதானவர் வந்து கை கொடுத்து, “மிக சந்தோஷம் பாட்டர், என் பெயர் டிகிள், டட்லஸ் டிகிள்”, என்றார்.

“எனக்கு உங்களை நினைவு இருக்கிறது, நீங்கள் தானே ஒரு நாள் கடைக்கு முன்னால் எனக்கு தலை வணங்கியது”, என்றான் ஹாரி. “அவர் என்னை நினைவு வைத்துள்ளார்” என்று பெருமையாக கூறிகொண்டு சென்றார். .

ஒரு இளைஞன் மிக நடுக்கமாக அங்கு அமர்திருந்தான். அவனது ஒரு கண் சிமிட்டி கொண்டேயிருந்தது.

“பேராசிரியர் கொரில்”, என்றார் ஹாக்ரிட். “ஹாரி, பேராசிரியர் கொரில், ஹாக்வாட்ஸில் உன்னுடைய ஆசிரியர்களில் ஒருவர்”, என்று அறிமுகபடுத்தினார்.

“ப-ப-பாட்ட்ர்”, என்று திக்கினார் கொரில். “உ-உ-உன்னை சந்தித்ததில் எனக்கு அள்வில்லாத ம-ம-மகிழ்ச்சி”, என்றார்.

“எந்த மாதிரியான மந்திரங்கள் நீங்கள் ஹாக்வாட்சில் கற்று கொடுக்கிறீர்கள்”, என்று ஹாரி கேட்டான்.

“இருள் கலைகளுக்கு எதிரான தற்காப்பு”.


“போக வேண்டும் ஹாரி, கிளம்பு” என்றார் ஹாக்ரிட்

ஹாக்ரிட் அந்த கடையில் உள்ள ஒரு சுவருக்கு அருகில் நின்று தன் குடையால் அந்த சுவரில் உள்ள செங்கலை எண்ணி கொண்டிருந்தார்.

“மூன்றாவதுக்கு மேல் இரண்டாவது” என்று முணுமுணுத்தார் ஹாக்ரிட். “ ஹாரி பின்னாடி தள்ளி நில்”, என்றார்.

அவர் தன்னுடைய குடையால் அந்த சுவரை மூன்று முறை தட்டினார். அந்த செங்கல் எல்லாம் பிறிந்து அந்த சுவருக்கு இடையில் ஒரு வழி தோன்றியது. அந்த வழியில் பார்த்தால் மக்கள் நடமாடுவது தெரிந்தது.

“கோண வழிபாதைக்கு உன்னை வரவேற்கிறேன், ஹாரி”, என்றார் ஹாக்ரிட்.

[தொடரும் – அத்தியாயம் 5]

Sunday, February 7, 2010

ஹாரி பாட்டர் புத்தகம்1 - ஹாரி பாட்டர் மற்றும் மந்திரகல் [பதிவு 7 ]

ஹாரி பாட்டர் புத்தகம்1 - ஹாரி பாட்டர் மற்றும் மந்திரகல் [பதிவு 7 ]

அத்தியாயம் 5 : கோண வழிபாதை[Diagon Alley]

ஹாரி அடுத்த நாள் காலை கண்விழித்தான். சூரிய வெளிச்சம் அவன் கண்ணில் பட்டது. அவன் கண்ணை இறுக மூடி கொண்டான்.

"இது வெறும் கனவு தான்,", தன்னிடம் கூறி கொண்டான். "ஹாக்ரிட் என்ற ஒருவர் வந்து என்னிடம் நீ சூனியகாரர்களின் பள்ளியில் படிக்க போகிறாய் என்று கூறியதாக நான் கனவு கண்டேன். என் கண்ணை திறக்கும் போது நான் மறுபடியும் பழைய கப்போர்டில் தூங்கி கொண்டிருப்பேன்", என்று நினைத்தான்.

கதவு தட்டும் சத்தம் கேட்டது. அது பெட்டுனியா தான். ஹாரி கண்ணை திறக்க வில்லை. அது ஒரு நல்ல கனவாக இருந்தது. அதை விட்டு வெளியே வர அவனுக்கு விருப்பம் இல்லை.

"டப் டப் டப்", மீண்டும் கதவு தட்டும் சத்தம்.

சரி சரி நான் எழுந்திருக்கிறேன் என்றான் ஹாரி.

ஹாரி எழுந்து உக்கார்ந்ததும் கீழே ஹாக்ரிட் கருப்பு மேலங்கி இருப்பதை கவனித்தான். ஹாக்ரிட் அங்குள்ள சோபாவில் தூங்கி கொண்டு இருந்தார். ஜன்னலுக்கு வெளியே ஒரு ஆந்தை ஒன்று செய்திதாளுடன் உள்ளே வர முயற்சி செய்து கொண்டிருந்தது.

ஹாரி சென்று ஜன்னல் கதவை திறந்தான். ஆந்தை உள்ளே வந்து செய்தித்தாளை ஹாக்ரிட் மேல் போட்டது. அப்போதும் ஹாக்ரிட் எழுதிரிக்கவில்லை. ஆந்தை நேராக சென்று ஹாக்ரிடின் கீழே கிடந்த கோட்டை கொத்த ஆரம்பித்தது.

ஹாரி அந்த ஆந்தையை துரத்த முயற்சி செய்தான். ஆனால் அது தொடர்ந்து கோட்டை கொத்தி கொண்டு இருந்தது.

"ஹாக்ரிட்", என்று கத்தினான் ஹாரி. "இந்த ஆந்தை"....

காசு கொடு அதற்க்கு என்றார் ஹாக்ரிட்.

என்ன?

ஆந்தைக்கு செய்தித்தாளை கொண்டு வந்ததிற்கு காசு கொடுக்க வேண்டும். என்னுடைய கோட் பாக்கெட்டில் பார் என்றார். அதில் உள்ள மற்ற பொருட்களுடன் சில நாணயங்களும் இருந்தது அது வித்தியாசமாகவும் இருந்தது.

அதற்க்கு ஐந்து நட்ஸ்[knuts] கொடு ஹாரி என்று ஹாக்ரிட் தூங்கி கொண்டே கூறினார்.

"நட்ஸ்?"

அந்த சிறிய வெண்கல நாணயங்கள்.

ஹாரி ஐந்து நாணயங்கள் எண்ணி கொடுத்தான். அந்த ஆந்தை அதன் காலில் அதை வாங்கி தன் சிறிய பையில் போட்டு கொண்டு மீண்டும் பறந்து சென்றது.

ஹாக்ரிட் கொட்டாவி விட்டு கொண்டு, "இன்று உனக்கு புத்தகங்கள் லண்டன் சென்று வாங்க வேண்டும் என்றார்".

"ஹாக்ரிட் என்னிடம் பணம் இல்லை, என் சித்தப்பாவும் பணம் கொடுக்க முடியாது என்று கூறிவிட்டனர்", என்று கூறினான் ஹாரி.

"அதை பற்றி கவலை பட வேண்டாம்", என்றார் ஹாக்ரிட். உன் பெற்றோர் உனக்காக எதையும் விட்டுவிட்டு போகவில்லை என்று நினைத்தாயா...என்றார்.

ஆனால் வீடு அழிந்து விட்டது என்றீர்களே....

அவர்கள் வீட்டில் தங்கத்தை வைக்க வில்லை. முதலில் நாம் கிரிங்காட்ஸ், சூனியகாரர்களின் வங்கிக்கு நாம் செல்ல வேண்டும் என்றார்.

சூனியகாரர்களுக்கு வங்கியும் இருக்கிறதா என்றான் ஹாரி.

ஒன்றே ஒன்று இருக்கிறது. கிரிங்காட்ஸ், காப்ளின் நடத்துகிறார்கள்.

காப்ளின்ஸ்?

ஆமாம், அவர்களிடம் இருந்து எதையாவது திருட முயற்சி செய்தால் அவர்கள் மிக பொல்லதவதர்லாக மாறிவிடுவார்கள். எப்போதும் காப்ளின்சிடம் விரோதம் வைத்து கொள்ளாதே ஹாரி. கிரிங்காட்ஸ் மிக பாதுகாப்பான இடம் பொருட்களை வைப்பதற்கு. நானும் அங்கு செல்ல வேண்டும், டம்பில்டோருக்காக, ஹாக்வாட்ஸ் வேலை. அங்கு இருக்கிற முக முக்கிய பொருளை எடுத்து வர வேண்டும். அவர் முக முக்கியமான இந்த விசயங்களில் என்னை நம்புவார் என்ன பெருமையாக கூறி கொண்டார்.

ஹாரி பாட்டர் புத்தகம்1 - ஹாரி பாட்டர் மற்றும் மந்திரகல் [பதிவு 6 ]

ஹாரி பாட்டர் புத்தகம்1 - ஹாரி பாட்டர் மற்றும் மந்திரகல் [பதிவு 6 ]

அத்தியாயம் 4 : ரகசியங்களின் பாதுகாவலர் [தொடர்ச்சி]

உன்னோடைய பெற்றோர்கள் வேறெங்கு அதை எல்லாம் கற்று கொண்டு இருப்பார்கள் என்று உனக்கு தோன்றவில்லையா?".

"எதை எல்லாம்?", என்றான் ஹாரி.

ஹாக்ரிட், டர்ஸ்லியை பார்த்து, " நீங்கள் ஹாரியிடம் எதுவும் கூறவில்லையா, அவனுக்கு எதுவும் தெரியாதா?", என்று கேட்டார்.

"எனக்கு சில தெரியும்.... எனக்கு கணிதம் தெரியும்" , என்றான் ஹாரி. ஆனால் ஹாக்ரிட்," அது இல்லை, நம் உலகத்தை பற்றி, அதாவது உன்னுடைய உலகம்,என்னுடைய உலகம், உன் பெற்றோருடைய உலகத்தை பற்றி எதுவும் அவர்கள் சொல்ல வில்லையா?", என்றார்.

"எந்த உலகம்" என்றான் ஹாரி.

ஹாக்ரிட் மிக கோபத்தில், "டர்ஸ்லி", என்று கத்தினார்.

பின்னர் ஹாரியை பார்த்து உன் பெற்றோர் மிக பிரபலமானவர்கள். நீயும் தான், என்றார்.

என்னது? பிரபலமானவர்களா? என்றான் ஹாரி.

அப்போது வெர்னான், " நிறுத்து" என்றார். போதும் இதற்க்கு மேல் எதையும் அவனிடம் நீ கூற கூடாது", என்றார்.

ஹாக்ரிட் அவரை முறைத்து பார்த்தார். அவனிடம் எதுவும் நீங்கள் சொல்லவில்லை. டம்பிள்டோர் விட்டு சென்ற கடித்ததில் என்ன இருந்தது என்பதை நீங்கள் மறைத்து விட்டீர்கள், என்றார்.

எதை மறைத்து விட்டார்கள், என்றான் ஹாரி.

"போதும் அதை அவனிடம் சொல்ல கூடாது", என்று பயத்தில் கத்தினார் வெர்னான்.

அவர்களை முறைத்து பார்த்து விட்டு, " ஹாரி நீ ஒரு மந்திரவாதி", என்றார்.

"என்ன மந்திரவாதியா?", என்று அதிர்ச்சியில் உறைந்தான் ஹாரி.

"ஆமாம், உன் பெற்றோர் இருந்தால் இந்நேரம் நீ சிறிது பயிற்சியும் பெற்று இருப்பாய், ம்ம் இப்போதாவது உனக்கு வந்த கடிதத்தை படி", என்று கூறி அந்த கடிதத்தை ஹாரியிடம் கொடுத்தார் ஹாக்ரிட்.

அந்த கடிதத்தில்,
Mr. H போட்டர்
தரைபடுக்கை,
படகு வீடு,
கடல்.

என்று விலாசம் இருந்தது. ஹாரி அந்த கடிதத்தை திறந்தான்.

ஹாக்வாட்ஸ் - சூனியகாரர்கள் மற்றும் சூனியகாரிகளுக்கான பள்ளி

தலைமையாசிரியர்: ஆல்பஸ் டம்பிள்டோர்
[ மெர்லின் குழு, முதல் தரம், தலை சிறந்த சூனியக்காரர், சூனியகாரர்களின் உலக கூட்டமைப்பின் தலைமை பொறுப்பாளர்]

Mr பாட்டர்,

நீங்கள் ஹாக்வாட்ஸ் - சூனியகாரர்கள் மற்றும் சூனியகாரிகளுக்கான பள்ளியில் நீங்கள் சேர அனுமதிக்கபட்டீர்கள் என்பதை மிக மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம். இதனுடன் நீங்கள் கொண்டு வர வேண்டிய புத்தகங்கள் மற்றும் பொருட்கள் என்னென்ன என்பது இணைக்கப்பட்டுள்ளது

பள்ளி செப்டம்பர் 1 - ஆம் தேதி ஆரம்பிக்கிறது. உங்களின் ஆந்தைக்காக ஜுலை 31 - ஆம் தேதிவரை காத்து இருப்போம்.

இப்படிக்கு,
மினர்வா மெக்கொனல்.
துணை தலைமை ஆசிரியை.


இதை படித்த பின் ஹாரியின் மனதில் ஏகப்பட்ட கேள்விகள் முளைத்தது. எதை முதலில் கேட்பது என்று தெரியாமல் குழம்பினான். சிறிது நேரம் கழித்து, " என் ஆந்தைக்காக காத்து இருப்பார்களா?, அப்படி என்றாள் என்ன அர்த்தம்?", என்றான் ஹாரி.

"ஆஆ... மறந்துவிட்டேன்..." என்று கூறி தன்னுடைய சட்டை பையில் இருந்து ஒரு உயிருள்ள ஆந்தை ஒன்றை ஹாக்ரிட் எடுத்தார். பின்னர் ஒரு ஓலையில் பின்வருமாறு எழுதினார்.

பேராசிரியர் டம்பிள்டோர்,

ஹாரியிடம் கடிதத்தை சேர்து விட்டேன்.

அவனை அழைத்து கொண்டு பொருட்களை வாங்க நாளை புறப்படுகிறேன்.

இங்கு வானிலை சரியில்லை. நீங்கள் நலமாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

ஹாக்ரிட்.


அந்த ஆந்தையின் வாயில் இந்த ஓலையை சுருட்டி வைத்தார். பின்னர் கதவின் வெளியே சென்று அந்த புயலுக்கு நடுவே அந்த ஆந்தையை பறக்க விட்டுவிட்டு மீண்டும் தன் இடத்தில் வந்தமர்ந்தார்.

ஹாரி அதை ஆச்சர்யமாக பார்த்து கொண்டு இருந்தான்.

"எங்கே விட்டேன்?", என்று கேட்டார் ஹாக்ரிட்.

அப்போது வெர்னான் கோபத்தில், இவன் அங்கே போக மாட்டான்", என்றார்.

ஹாக்ரிட் முறைத்தார், " உன்னை போன்ற ஒரு மகில்[Muggle] இவனை தடுத்து நிறுத்த முடியுமா?, என்றார்.

"என்ன அது?", என்றான் ஹாரி.

" மகில் [muggle]", என்றார் ஹாக்ரிட். " மந்திரம் தெரியாத மக்களை மகில் என்று அழைப்பார்கள்", என்றார்.

இவனை எடுத்து வளர்க்கும் போதே இவன் மந்திரவாதி ஆக கூடாது என்று நாங்கள் முடிவு செய்து விட்டோம் என்றார் வெர்னான்.

" அப்போ உங்களுக்கு தெரியும் நான் ஒரு சூனியக்காரன் என்று", என்றான் ஹாரி.

"தெரியும்", என்று கத்தினாள் பெட்டுனியா...... என் தங்கை எவ்வாறனவள் என்று எனக்கு தெரியும். தீடிரென்று அவளுக்கு ஒரு கடிதம் வந்ததும் அவள் மாயமாய் மறைந்து விட்டாள். பின்னர் அவள் அந்த பள்ளியில் இருந்து விடுமுறைக்கு மட்டுமே வீடிற்கு வருவாள். அவள் வரும்போதெல்லாம் அவள் பாக்கெட்டில் தவளைகளை வர வைப்பதும் , டீ கப்பை எலியாகவும் மாற்றுவதும் செய்து கொண்டு இருப்பாள். நான் ஒருத்தி மட்டும் தான் அவள் ஒரு பைத்தியம் என்பதை அறிந்து கொண்டு இருந்தேன். ஆனால் என் பெற்றோர் லில்லியை தலை மேல் வைத்து கொண்டாடினார்கள். அவர்களுக்கு தன் குடும்பத்தில் ஒரு சூனியக்காரி இருப்பது மிக பெருமையாக இருந்தது.

பின்னர் தன் பேச்சை நிறுத்தி மூச்சு வாங்கி கொண்டாள். இதை சொல்வதற்க்காக பல வருடங்கள் காத்து இருந்தது போல அவள் மொத்தத்தையும் கொட்டி தீர்த்தாள்.

"அதன் பின் என் தங்கை பாட்டர் என்பவனை பள்ளியில் சந்தித்து திருமணம் செய்து கொண்டு உன்னை பெற்றாள், நீயும் அவர்களை மாதிரி ஒரு முட்டாள் தான். பின்னர் அவள் கொலை செய்யப்பட்டதால் நீ இங்கு வந்து தொலைந்தாய்", என்றாள்.

கொலை செய்யபட்டார்களா? நீங்கள் கார் விபத்தில் அவர்கள் இறந்தாக தானே முதலில் சொன்னீர்கள்", என்றான் ஹாரி.

" கார் விபத்தா? லில்லி மற்றும் ஜேம்ஸ் பாட்டரை கார் விபத்து எப்படி கொள்ள முடியும்", என்று கத்தினார் ஹாக்ரிட்.

ஹாரி நீ இப்படி ஒன்றும் தெரியாமல் பள்ளிக்கு வரகூடாது. நானே நடந்ததது அனைத்தையும் உன்னிடம் கூறுகிறேன்", என்றார் ஹாக்ரிட்.

பின்னர் ஹாக்ரிட் அங்கு எரிந்த நெருப்பை சில வினாடிகள் அமைதியாக இருந்தார். பின்னர்,

" அது ஆரம்பித்தது ஒருவனால், அவன் பெயர் என்ன என்பது எனக்கு தெரியாது. ஆனால் நம் உலகத்தில் இருப்பவர்கள் அவனை...... அவன் பெயரை உச்ச்சர்க்க கூட முடியவில்லை.... அவனை வால்டர்மோர்ட் என்று அழைப்பார்கள். என்னை மறுபடியும் இந்த பெயர் சொல்ல வைக்காதே... இந்த சூனியக்காரன் இருபது வருடங்களுக்கு முன்னால் தனக்கு ஆள் சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தான். சிலரையும் அவனுடன் சேர்த்தான். அவன் சக்தி வளர்ந்து கொண்டு இருந்தது. அது கருப்பு நாட்கள் ஹாரி. அவன் வழியில் குறுக்கே வந்தவர்களை எல்லாம் கொன்றான். அவனை யாராலும் தடுத்து நிறுத்த முடியவில்லை. அப்போது இருந்த ஒரே ஒரு பாதுகாப்பான இடம் ஹாக்வாட்ஸ் பள்ளி தான். டம்பில்டோருக்கு மட்டும் தான் பெயர்-உச்சரிக்க-கூடாதவன் பயந்தான்.

உன் பெற்றோர் மிக நல்ல சூனியக்காரர்கள். அவர்கள் ஹாக்வாட்ஸ் பள்ளியில் தலைமை மாணவன் மற்றும் மாணவி ஆக இருந்தவர்கள். பெயர்-உச்சரிக்க-கூடாதவன் ஏன் முன்னதாகவே அவர்களை அவன் அணியில் ஏன் சேர்க்க முயற்ச்சிக வில்லை என்று யாருக்கும் தெரியாது. அவர்கள் டம்பில்டோருக்கு நெருக்கமாக இருந்தததும் ஒரு காரணமாக இருக்கலாம்.

அவன் ஒரு நாள் நீங்கள் இருந்த கிராமத்திற்கு வந்தான். அது சரியாக பத்து வருடங்களுக்கு முன்னால் அப்போது உனக்கு ஒரு வயது இருக்கும். பெயர்-உச்சரிக்க-கூடாதவன் உன் பெற்றோரை கொன்றான். உன்னையும் கொல்ல முயற்சி செய்தான். ஆனால் உன்னை கொல்ல அவனால் முடிய வில்லை. அந்த முயற்சியில் தான் உனக்கு அந்த மின்னல் வடிவ தழும்பு ஏற்பட்டது. அது சாதாரண தழும்பு கிடையாது. ஒரு மிக சக்தி வாய்ந்த கொடுமையான சாபம் தாக்கியதால் வந்தது. மிக சிறந்த சூனியக்காரர்கள் எல்லாம் அவன் சாபத்திற்கு முன்னால் நிற்க முடிய வில்லை ஆனால் நீ மட்டும் தான் உயிரோடு இருந்தாய்." என்றார் ஹாக்ரிட்.

ஹாரிக்கு இப்போது அந்த பச்சை நிற ஒளி ஞாபகத்திற்கு வந்தது. முதல் முறையாக ஒரு குரூர சிரிப்பு அவனுக்கு ஞாபகத்திற்கு வந்தது.

நான் உன்னை அந்த சிதைந்த வீட்டில் இருந்து எடுத்து கொண்டு வந்தேன். டம்பிள்டோர் கூறிய படி உன்னை இங்கு கொண்டு வந்து சேர்த்தேன், என்றார் ஹாக்ரிட்.

ஹாரி, "ஆனால் வால்... மன்னிக்கவும் பெயர்-உச்சரிக்க-கூடாதவன் என்ன ஆனான்?, என்று கேட்டான்.

"சிலர் அவன் இறந்து விட்டதாக கூறுகிறார்கள். சிலர் அவன் சரியான தருணத்திற்காக ஒளிந்து காத்து கொண்டு இருக்கிறான் என்கிறார்கள். சிலர் அவன் திரும்பி வரமாட்டான் என்கிறார்கள். ஆனால் பலர் இன்னமும் அவன் இருக்கிறான் அவன் தன் சக்தியை இழந்து விட்டான் என்கிறனர். உன்னை கொல்ல முயற்சி செய்த போது ஏதோ நடந்து இருக்கிறது அது தான் அவனை அழித்திருக்கிறது. அது என்ன என்பது யார்க்கும் தெரியாது", என்றார் ஹாக்ரிட்.

ஆனால் ஹாரிக்கு அதற்க்கு பெருமைபட முடிய வில்லை. நான் சூனியக்காரன் என்றால் ஏன் என்னால் மந்திரம் கூற முடிய வில்லை. டட்லி என்னை தாக்கும் போது ஏன் என்னால் பாதுகாத்து கொள்ள முடியவில்லை, என்று எண்ணினான்.

"ஹாக்ரிட், நான் சூனியகாரனாக இருக்க முடியாது", என்றான் ஹாரி.

ஹாக்ரிட் அவனை ஆச்சரயதுடன் பார்த்து, " நீ கோபமாக அல்லது பயந்து இருந்த போது வியாசமான நிகளிசிகள் நடக்க வில்லையா?", என்று கேட்டார்.

ஹாரி, "தன் தலை முடி, அந்த மிருக காட்சி சாலை கண்ணாடி மற்றும் பல நிகழ்ச்சிகளை நினைத்து பார்த்தான். அவை எல்லாம் இவன் பயந்த அல்லது கோபமாக இருந்த போது நடந்தது.

ஹாக்ரிட் அவனை பார்த்து, " நீ ஒரு தலைசிறந்த சூனியகாரனாக ஹாக்வாட்ஸ் பள்ளியில் மாறுவாய், பொறுத்து இருந்து பார்", என்றார் ஹாக்ரிட்.

வெர்னான்,"அவன் எங்கும் போக மாட்டான் என்று நான் முதலே சொல்லவில்லை, அவன் கல்சுவரு[stonewall] பள்ளிக்கு தான் போக போகிறான். அவனுக்கு மந்திர புத்தகங்கள், மந்திரகோல் போன்றவை தேவையில்லை", என்றார்.

ஹாக்வாட்ஸ் பள்ளியில் அவன் பெயர் பிறந்தஹ்டு முதல் இருக்கிறது. அது மிக சிறந்த பள்ளி, அங்கு ஏழு வருடங்கள் ஹாரி படித்தால் அவன் தலை சிறந்த சூனியகாரகளில் ஒருவனாக மாறுவான். அதுவும் சிறந்த தலைமை ஆசிரியர் ஆல்பஸ் டம்பிள்டோர் அங்கு இருக்கிறார்....

"ஒரு வயதான முட்டாள் கிழவன் மந்திரதந்திரங்கள் சொல்லி தருவதற்கு நான் காசு கொடுக்க மாட்டேன்", என்றார் வெர்னான்.

ஹாக்ரிட் தன் குடை எடுத்து அவர் முன்னால் நீட்டி, "நான் உன்னை எச்சரிக்கிறேன். இன்னொரு முறை என்முன்னால் டம்பில்டோரை மரியாதை இல்லாமல் பேசினால் அவ்வளவு தான்", என்றார்.

வெர்னான் முறைத்தார். பின் தனது மகன் மற்றும் மனைவியை கூட்டி கொண்டு தன் அறைக்கு சென்றார். பின்னர் ஹாக்ரிட் ஹாரியை பார்த்து, " அவனை பன்றியாக மாற்றி இருக்க வேண்டும். ம்ம் அவன் ஏற்கனவே பன்றி போல தான் இருக்கிறான். அதனால் ஒன்றும் செய்வதற்கு இல்லை", என்றார்.

"ஹாக்வாட்சில் நான் இவ்வாறு கூறியதாக யாரிடமும் சொல்லி விடாதே, நான் மந்திரங்களை உபோயோகிக்க கூடாது", என்றார் ஹாக்ரிட்.

"நீங்கள் ஏன் மந்திரங்களை உபயோகிக்க கூடாது", என்று கேட்டான் ஹாரி.

" என்னை ஹாக்வாட்ஸ் பள்ளியில் இருந்து நீக்கி விட்டார்கள். டம்பிள்டோர் தான் என்னை பாதுகாவலராக நியமித்து என்னை அங்கே தங்க வைத்தார், சிறந்த மனிதர் டம்பிள்டோர்", என்றார் ஹாக்ரிட். "எதற்காக உங்களை பள்ளியில் இருந்து நீக்கினார்கள்", என்றான் ஹாரி.

"ஹாரி, இன்று மிக நேரமாகி விட்டது. நாளை நிறைய வேலை இருக்கிறது. உனக்கு வேண்டிய புத்தகங்களை வாங்க வேண்டும், இப்போது சென்று உறங்கு", என்று கூறி தன்னுடைய கருப்பு மேலங்கியை கழட்டி அதை விரித்து கொள்ள கூறி விட்டு அவரும் உறங்க ஆரம்பித்தார்.

[தொடரும் - அடுத்தது அத்தியாயம் 5 - கோணல் தெரு]

Saturday, February 6, 2010

ஹாரி பாட்டர் புத்தகம்1 - ஹாரி பாட்டர் மற்றும் மந்திரகல் [பதிவு 5]

ஹாரி பாட்டர் புத்தகம்1 - ஹாரி பாட்டர் மற்றும் மந்திரகல் [பதிவு 5 ]

அத்தியாயம் 4 : ரகசியங்களின் பாதுகாவலர்

பூம்... கதவு மீண்டும் தட்டப்பட்டது. டட்லி அதிரிந்து எழுந்தான். வெர்னான் மற்றும் அவர் மனைவியும் அந்த அறைக்கு வந்தனர். அவர் கையில் நீண்ட ரைபில் இருந்தது.

யார் அது என்றார் வெர்னான். நான் உன்னை எச்சரிக்கிறேன் , என் கையில் துப்பாக்கி உள்ளது, என்றார் வெர்னான்.

ஒரு சிறிய அமைதி. அதன் பின்...

"டமால்".

கடவு உடைந்து உள்ளே தரையில் விழுந்தது. மிக பெரிய ஒரு உருவம் ஒன்று அவர்களின் கதவு இருந்த இடத்தில் இருந்தது. அந்த உருவத்தின் முகம் பெரும்பாலும் நீண்டு வளர்ந்து இருந்த தலை முடினாலும், அவரது தாடியினாலும் மறைந்து இருந்தது.

அவர் அந்த அறைக்குள் வந்த போது அவர் தலை அந்த கூரையை தட்டியது. அவர் கிட்டத்தட்ட 9 அடி உயரம் இருந்தார். அவர் உள்ளே வந்து, கீழே விழுந்து கிடந்த கதவை எளிதாக எடுத்து மீண்டும் அது இருந்த இடத்தில் நிறுத்தினார். அப்போது புயல் சற்று ஓயிந்து இருந்தது. அவர் திரும்பி மற்றவர்களை பார்த்தார்.

"ஒரு டீ தயார் பண்ணி தரமாட்டீர்களா, இது மிக எளிதான பயணம் அல்ல ", என்று கூறினார்.

அவர் அங்கு சோபாவில் பயத்தில் உறைந்து போய் உக்கார்ந்திருந்த டட்லியின் அருகில் சென்று அமர்ந்தார்.

"ம்ம் சீக்கிரமா தயார் செய்யுடா புளிமூட்டை" என்று வேர்நானை பார்த்து கூறினார் புதிதாக வந்தவர்.

டட்லி சிறிதாக அலறல் எழுப்பி கொண்டு தன் தாயின் பின்னால் சென்று ஒளிந்து கொண்டான். அவன் தாய் வெர்னான் பின்னல் மறைந்து நின்று கொண்டு இருந்தாள்.

பின்னர் அவர் ஹாரியை நோக்கி, " ஆ, ஹாரி இங்கே இருக்கிறாயா?", என்றான் அந்த பெரிய உருவம் உடையவன்.

போன தடவை நான் உன்னை பார்த்த போது நீ சிறிய குழந்தையாக இருந்தாய், இப்போது வளர்ந்து விட்டாய், என்றார்.

வெர்னான் தன் தொண்டையை சரி செய்து கொண்டு, 'சார், நீங்கள் இப்போது வெளியே செல்லுங்கள், நீங்கள் கதவை உடைத்து கொண்டு உள்ளே வந்துள்ளீர்கள்", என்றார்.

"வாயை மூடு, டர்ஸ்லி" என்றார். பின் அவர் நேராக வேர்நானிடம் சென்று அவர் கையில் உள்ள நீண்ட ரைபிளை பிடுங்கி அதன் முனையை எளிதாக மேல் நோக்கி மடக்கினார் ஏதோ அது ரப்பரில் செய்தது போல அதை கையாண்டார்.

பின்னர் அவர் ஹாரியின் முன்னால் திரும்பி, "பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஹாரி", என்றார். உனக்காக ஒன்று கொண்டு வந்துள்ளேன் என்று கூறி தன் கருப்பு மேலங்கியில் உள்ள பாக்கெட்டில் இருந்து ஒரு சிறிய பெட்டியை ஹாரியிடம் கொடுத்தார். அதனுள்ளே பிறந்த நாள் வாழத்துக்கள் ஹாரி என்று பச்சை நிறத்தில் எழுதிய பெரிய சாக்லட் கேக் இருந்தது.

ஹாரி அவரை நிமிர்ந்து பார்த்தார். அவன் நன்றி தெரிவிக்க முற்பட்டான் ஆனால் அவன் வாயில் இருந்து வார்த்தைகளே வரவில்லை . அதன் பின் அவன் அவரை நோக்கி " யார் நீ " என்று கிட்டான் .

அவர் சிரித்து கொண்டு, "நான் என்னை அறிமுகப்படுத்தி கொள்ளவில்லை . என்பெயர் ரூபியஸ் ஹாகிரிட் , ரகசியங்களின் பாதுகாவலர் மற்றும் ஹாக்வாட்ஸ்-ன் காவலர்", என்று கூறி தன்னுடைய நீண்ட கையை கைகுலுக்க நீட்டினார். பின்னர் ஹாரி கையை பிடித்து அவன் முழு கையும் கழண்டு விழுமாறு குலுக்கினார்.

" ம்ம் டீ என்னாச்சு, நானாக இருந்தாள் இவ்வளவு பெரிய உருவத்திற்கு மறுக்காமல் டீ கொண்டு வந்து இருப்பேன், என்றார் ஹாகிரிட்.

பின்னர் அவர் காலியாக இருந்த நெருப்பு வைக்கும்[Fire Place] இடத்தை நோக்கி சென்றார். மற்றவர்களால் அவர் அங்கு என்ன செய்கிறார் என்று பார்க்க முடியவில்லை. பிறகு அவர் திரும்பி வந்து அமர்ந்த போது குளிர் காய நெருப்பு வைக்கும் இடத்தில் நெருப்பு கொழுந்து விட்டு எரிந்து கொண்டு இருந்தது. அது அந்த முழு அறைக்கும் வெளிச்சத்தையும் கதகதப்பையும் கொண்டு வந்தது.

பின்னர் அவர் உக்கார்ந்து தன்னுடைய மேலங்கி பாக்கெட்டில் இருந்து ஒரு காப்பர் பாத்திரம், கசங்கிய நிலையில் இருந்த ஒரு பழ கேக் பாக்கெட், ஒரு உலோக கரண்டி, டீ போடும் பாத்திரம், மற்றும் ஒரு ஆம்பல் திரவ பாட்டிலையும் எடுத்தார். அதன் மூலம் அவரே டீ தயாரிக்க ஆரம்பித்தார். சிரித்து நேரத்தில் அந்த அறை முழுவதும் அந்த கேக் மற்றும் டீ மணத்தால் நிறைந்தது. அந்த கேக்கின் ஒரு பகுதியை எடுத்து டட்லியிடம் கொடுக்க முயன்றார், ஹாகிரிட்.

அதற்க்கு வெர்னான், டட்லி அவர் குடுப்பதை எதையும் வாங்காதே, என்றார். ஆமாம் அவன் இதற்க்கு மேல் பெருக்க தேவையில்லை என்றார் ஹாகிரிட்.

பின்னர் ஹாரியிடம் அந்த கேக்கை கொடுத்தார். ஹாரி மிக பசியில் இருந்ததால் அதை வாங்கி கொண்டான். பின்னர், அவன் "மன்னிக்கவும், ஆனால் உங்களை இன்னமும் யாரென்று தெரிய வில்லை" என்றான் ஹாரி.

அவர் பின்னர், டீயை குடித்து விட்டு , "என்னை ஹாக்ரிட் என்று நீ அழைக்கலாம், நான் ஏற்கனவே கூறிய மாதிரி, நான் ஹாக்வாட்ஸ்-ன் ரகசியங்களின் பாதுகாவலன், ம்ம் உனக்கு ஹாக்வாட்ஸ் பற்றி தெரிந்து இருக்குமே", என்றார்.

"தெரியாது", என்றான் ஹாரி.

ஹாகிரிட் அவனை அதிர்ச்சியுடன் பார்த்தார்.

"மன்னிக்கவும் ", என்றான் ஹாரி.

பின்னர் டர்ஸ்லி நோக்கி முறைத்து பார்த்தார். " நீ எதற்கு மன்னிப்பு கேக்கிறாய் ஹாரி அதை இவர்கள் கேக்க வேண்டும்", என்றார். பின்னர்,"ஹாரி, நீ கடிதங்களை பெற வில்லை என்று எனக்கு தெரியும். ஆனால் ஹாக்வாட்ஸ் பத்தி தெரியாமல் இருப்பாய் என்று எனக்கு தெரியாது, உன்னோடைய பெற்றோர்கள் வேறெங்கு அதை எல்லாம் கற்று கொண்டு இருப்பார்கள் என்று உனக்கு தோன்றவில்லையா?".

"எதை எல்லாம்?", என்றான் ஹாரி.

[தொடரும் - அத்தியாயம் 4]

Thursday, February 4, 2010

ஹாரி பாட்டர் புத்தகம்1 - ஹாரி பாட்டர் மற்றும் மந்திரகல் [பதிவு 4]

ஹாரி பாட்டர் புத்தகம்1 - ஹாரி பாட்டர் மற்றும் மந்திரகல் [பதிவு 4]

அத்தியாயம்: 3 - மந்திர கடிதம் [தொடர்ச்சி]


இப்போ என்ன செய்வது வெர்னான். நாம் அவர்களுக்கு பதில் எழுதலாமா? நமக்கு இது தேவையில்லை, என்று கேட்டால் பெட்டுனியா.

வேண்டாம், இக்கடிதத்தை நாம் பொருட்படுத்தாமல் விட்டுவிடுவோம். அவர்கள் பதில் கிடைக்காவிட்டால் திரும்ப கடிதம் அனுப்ப மாட்டார்கள், என்றார் வெர்னான்.

அன்று மாலை, வெர்னான் தன் பணி முடிந்து வீட்டிற்கு வந்து, ஹாரியின் கப்போர்டிற்கு சென்றார்.

ஹாரி தன் சித்தப்பாவை பார்த்து, "எங்கே எனது கடிதம்? யாரு எனக்கு கடிதம் எழுதியது?". என்று கேட்டான்.

"யாருமில்லை, தப்பா உன்னுடைய பெயரை போட்டு உள்ளார்கள்", என்றார் வெர்னான்.

"அதில் ஒன்னும் தப்பா போடலை, அதில் என்னுடைய கப்போர்ட் போட்டு இருந்தார்கள்", என்றான் ஹாரி.

"மூச், சத்தம் போடதே!", என்று கத்தினார் வெர்னான். பின் தன் முகத்தை சிரித்தது போல மாற்றி கொண்டு, "ஹாரி நீ இனிமேல் இந்த கப்போர்டில் தங்க வேண்டாம். டட்லியின் இரண்டாவது படுக்கை அறையில் நீ தங்கி கொள்ளலாம்", என்றார்.

ஏன்?, என்றான் ஹாரி.

"கேள்வி கேக்காதே உன்னுடைய பொருட்களை எடுத்து கொண்டு மேலே போ", என்றார் வெர்னான்.

அந்த வீட்டில் நான்கு படுக்கை அறைகள் உள்ளது. ஒன்று வெர்னான் மற்றும் பெட்டுனியாவினுடையது, இரண்டாவது விருந்தினர் அறை, மூன்றாவது டட்லியினுடையது, நான்காவது டட்லி தன் அறையில் வைக்க முடியாத விளையாட்டு பொருட்களை அதில் வைத்து உள்ளான். ஆனால் அந்த நான்காவது அறையில் உள்ள விளையாட்டு பொருட்கள் பெரும்பாலும் உடைந்த பொருட்கள் தான் இருந்தது. அந்த மாடியில் உள்ள அறை தான் ஹாரிக்கு ஒதுக்கப்பட்டு இருந்தது.

அப்போது கீழே, டட்லி தன் அம்மாவுடம் சண்டை போட்டு கொண்டு இருந்தான். "அவன் அந்த அறையில் இருப்பது எனக்கு பிடிக்க வில்லை, எனக்கு அந்த அறை வேண்டும்", என்றான்.

ஹாரி அந்த அறையில் படுத்தான். நேற்று இந்த அறை கிடைத்து இருந்தால் அவன் மகிழ்ச்சியோடு ஏற்று கொண்டு இருப்பான். ஆனால் இன்று அவனுக்கு அந்த கடிதம் கிடைத்தால் போதும் இந்த அறையே அவனுக்கு தேவையில்லை என்ற நிலைமையில் இருந்தான்.

அடுத்த நாள், காலை உணவின் போது மீண்டும் கடிதம் வரும் சத்தம் கேட்டது. வெர்னான் சென்று கடிதத்தை எடுத்தார். இன்னொரு கடிதம் வந்துள்ளது, என்று அலறினார் வெர்னான். அதில் "Mr.H Potter, மிக சிறிய படுக்கை அறை, 4 Privet Drive தெரு ---" என்று இருந்தது.

ஹாரியும், டட்லியும் அந்த கடிதத்தை பறிக்க ஓடி வந்தார்கள். ஆனால் வெர்னான், அவர்கள் கைக்கு அந்த கடிதம் சிக்காமல் பார்த்து கொண்டார்.

அவர் ஹாரியை பார்த்து, "நீ உன்னுடைய கப்போர்டிர்க்கு போ, அதாவது உன்னுடைய அறைக்கு போ", என்றார். "டட்லி நீயும் போ", என்றார்.

ஹாரி தன் அறைக்கு சென்றான். தான் முதல் கடிதத்தை பெற வில்லை என்றும் தான் வேறு அறைக்கு போனதும் யாருகோ தெரிந்து கொண்டு தான் இந்த கடிதத்தை அனுப்பி உள்ளனர். அப்படியென்றால் அவர்கள் மறுபடியும் கடிதம் அனுப்புவார்கள். அடுத்த தடவை கண்டிப்பாக தவற கூடாது. இந்த முறை அவனிடம் ஒரு திட்டம் இருந்தது.

அடுத்த நாள் காலை 6 மணிக்கு அலாரம் அடித்தது. ஹாரி அதை நிறுத்தி விட்டு, சத்தம் போடாமல் மாடியில் இருந்து கீழே வந்தான்.

ஹாரிக்கு அதிர்ச்சியாக இருந்தது அவன் அங்கு கண்ட காட்சி. அங்கு வெர்னான் தன் படுக்கையை போட்டு படுத்து கொண்டு இருந்தார். ஹாரியிடம் அந்த கடிதம் கிடைக்க கூடாது என்பதில் மிக தீவிரமாக இருந்தார். அவர் ஹாரியை பார்த்து "நீ போய் டீ தயார் பண்ணு", என்றார் வெர்னான். அவன் திரும்பி வருவததிற்குள் கடிதம் வந்து இருந்தது.

ஹாரி பச்சை மையில் எழுதப்பட்ட மூன்று கடிதங்களை பார்த்தான்.

எனக்கு வேண்டும் என்று ஹாரி சொல்லுவர்துக்குள் வெர்னான் அந்த கடிதங்களை தூள்தூளாக கிழித்தார். அன்று அவர் வேலைக்கு செல்லவில்லை. அவர் தன் வீட்டு கதவில் உள்ள கடிதம் வரும் துளையை ஒரு பலகை வைத்து அடித்தார்.

அதை தன் மனைவி பெட்டுனியாவிடம் காட்டி பார்த்தாயா... அவர்களினால் கடிதத்தை நம்மிடம் சேர்க்க முடியாவிட்டால் அவர்கள் நிறுத்தி கொள்வார்கள் என்றார். ஆனால் பெட்டுனியாவிற்கு அதில் நம்பிக்கை இல்லை.

அடுத்த நாள் வெள்ளி கிழமை பன்னிரண்டு கடிதங்கள் வந்து இருந்தது.அது கடித துவாரத்தின் மூலம் வர முடியாதால் கடிவின் அடியில் திணிக்கப்பட்டு உள்ளே வந்திருந்தது. அந்த கடிதத்தை தீயில் இட்டு கொளுத்தினார்.

அன்றும் வெர்னான் வேலைக்கு செல்லவில்லை. இன்று தன் வீட்டில் உள்ள அத்தனை துவாரங்களையும் அடைத்தார்.

சனிக்கிழமையில், அவர்கலுக்கு கடையில் இருந்து வந்த முட்டையின் இடையே 24 கடிதங்கள் இருந்ததன. அந்த கடிதங்களை மீண்டும் படிக்காமல் அழித்தனர்.

"இந்த உலகத்தில் யார் உன்னிடம் இப்படி தீவிரமாக பேச துடித்து கொண்டு இருக்கிறார்கள்", என்று ஆச்சரயத்தில் ஹாரியை பார்த்து வெர்னான் கேட்டார்.

ஞாயிற்று கிழமை காலை, வெர்னான் களைப்பாக இருந்தார். ஆனால் மிகவும் சந்தோசமாகவும் இருந்தார்.

இன்று விடுமுறை நாள், இன்று கடிதம் எதுவும் வராது என்று கூறி கொண்டு செய்தித்தாளை பார்த்தார்.

அப்போது ஏதோ ஒரு சத்தம் அவர்கள் அடுப்படியில் உள்ள புகை வெளியேறும் குழாயில் கேட்டது. அதன் வழியாக முப்பது அல்லது நாற்பது கடிதங்கள் வந்தது. ஹாரி அதில் கடிதத்தை பிடிக்க முயற்சி செய்தான். ஆனால் வெர்னான் ஹாரி மற்றும் டட்லியை இழுத்து கொண்டு எல்லோருடன் வெளியே வந்து கிச்சன் கதவை மூடினார். இன்னமும் கடிதம் வந்து கொண்டு இருக்கும் சத்தம் கேட்டது.

அது தான் இப்படி செய்து இருக்கும் என்றார். பின்னர், எல்லாரும் உங்கள் துணியை எடுத்து கொள்ளுங்கள் நாம் சில நாட்களுக்கு வெளியே செல்கிறோம், என்றார். பத்து நிமிடம் கழித்து எல்லோரும் அவர்கள் காரில் ஏறி நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தனர். ஹாரியும், டட்லியும் பின்சீட்டில் இருந்தனர். வெர்னான் மற்றும் அவன் மனைவி முன்சீட்டில் இருந்தனர்.

அவர்கள் வெகு தூரம் சென்று கொண்டிருதனர். பெடுனியா, எங்கே செல்கிறோம் என்று கேட்கும் மனநிலமையில் இல்லை. எங்கேயும் நிறுத்தாமல் நாள் முழுவதும் வண்டியில் பயணம் செய்தனர். இரவு நெருங்கிய போது, டட்லி பசியில் துடிக்க ஆரம்பித்தான்.

வெர்னான் கடைசியில் நகரத்திற்கு ஒதுக்கு புறமான உள்ள ஒரு சாதாரண விடுதியின் முன் காரை நிறுத்தினார். ஹாரிக்கும், டட்லிக்கும் ஒரு இருபடுக்கை கொண்ட அறை கொடுக்கப்பட்டது. ஹாரி உறங்கவேயில்லை. தெருவில் போகும் காரின் வெளிச்சத்தை பார்த்து கொண்டு இருந்தான்.

அடுத்த நாள் காலை அவர்கள் காலை உணவை அந்த விடுதியிலே முடித்த போது அந்த விடுதியின் உரிமையாளர் அவர்கள் அமர்ந்து இருந்த இடத்திற்கு வந்தார்.

தங்களில் யாராவது Mr. H Potter இருக்கிறீர்களா? என்று கேட்டார். என்னுடைய முன் விடுதியின் முன் அறையில் இந்த கடிதம் வந்து இருந்தது என்று கூறி அந்த கடிதத்தை அவர்களிடம் காட்டினாள்.

அதில்,
Mr. H Potter.
அறை எண் 17
ரயில்வீவ் விடுதி [railview]
கோக்வோர்த் [cokeworth]
என்று பச்சை மையில் எழுதப்பட்டு இருந்தது.

அந்த கடிதத்தை ஹாரி வாங்க முயற்சி செய்தான்.அதற்குள் வெர்னான் அந்த கடிதத்தை வாங்கி கொண்டார்.

"நாமே வீட்டிற்க்கே போயி விடலாமே", என்றாள் பெட்டுனியா. ஆனால் வெர்னான் காதில் அது விழவில்லை. அவன் அவர்களை காரில் நடுகாட்டிற்கு கொண்டு போனான். கீழே இறங்கி ஒரு முறை பார்த்து இது சரியாக இருக்காது என்று நினைத்து விட்டு, மீண்டும் காரில் ஏறி மீண்டும் ஓட்டினான். மீண்டும் இதே போல கீழே இருன்வதும் மீண்டும் வண்டிக்கு திரும்பி வருவதும் அவன் சென்ற இடங்களில் எல்லாம் நடந்தது.

பொழுது விடிந்து சில மழை தூறல்கள் விழ ஆரம்பித்தது. இன்று திங்கள் கிழமை, என்னுடைய முக்கியமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளெல்லாம் பார்க்க முடியாமல் போகிறது என்று டட்லி புலம்பினான்.

ஹாரி நினைத்தான். இன்று திங்கள் கிழமை என்றாள் நாளை செவ்வாய்கிழமை ஹாரியின் பதினொன்றாவது பிறந்த நாள். அவன் பிறந்த நாள் ஒன்றும் சிறப்பாக இருக்காது. சென்ற வருடம் வெர்னான் பழைய சாக்ஸ் அவனுக்கு பிறந்த நாள் பரிசாக கிடைத்தது.

கடைசியில், வெர்னான் சிரித்து கொண்டு அருமையான இடத்தை கண்டுபிடித்து விட்டேன். எல்லோரும் வாருங்கள் என்றார் காரை விடு இறங்கி கடலை காட்டினார். அங்கு படகு வீடு நின்று கொண்டு இருந்தது.

இன்று புயல் சின்னம் இருந்தாலும் இவர் தன் படகை வாடகைக்கு கொடுக்க முன்வந்துள்ளார் என்று ஒரு வயதானவரை காட்டினார். நான் சில உணவு பொருட்களை வாங்கி வைத்துள்ளேன் என்றார். சரி சரி எல்லோரும் படகில் ஏறுங்கள் என்றார் வெர்னான்.

படகின் உள்ளே மிக நாற்றம் எடுத்தது. அந்த படகில் இரண்டே அறை தான் இருந்தது. தீ மூட்டும் இடத்தின் அருகில் வெர்னான் அமர்ந்து கொண்டு அந்த கடிதத்தை இதற்காவது உபயோகித்து கொள்ளலாம் என்றார்.
அவர் மிக்கவும் சந்தோசமாக இருந்தார். இந்த புயல் அடிக்கும் கடலில் யாரும் வந்து கடிதத்தை கொடுக்க மாட்டார்கள் என்று உறுதியாக நினைத்தார். ஹாரியும் அவ்வாறே நினைத்தான்.

இரவு நெருங்கியதும், பெட்டுனியா அங்கு இருந்த துணிகளை கொண்டு டட்லிக்கு படுக்கை அமைத்து கொடுத்து விட்டு, அடுத்த அறைக்கு சென்றாள். ஹாரி மட்டும் ஒரு துணியை எடுத்து ஒரு ஓரத்தில் விரித்து படுத்தான்.

ஹாரி புரண்டு புரண்டு படுத்தான். அவனுக்கு பசினாலும், டட்லியின் குறட்டை சத்ததினாலும் உறக்கம் வரவில்லை. ஒளிரும் விலகுகள் கொண்ட டட்லி கைகடிகாரத்தில் மணி பார்த்தான் ஹாரி. இப்போது மணி 11:49 PM . அவன் அந்த கடிகாரத்தின் அருகில் சென்று தன் பிறந்த நாள் நெருங்குவதை பார்த்து கொண்டு இருந்தான்.

இன்னும் ஐந்து நிமிடங்கள் தான் இருந்தது. அப்போது ஹாரி தன் அறையின் வெளியே ஏதோ சத்தம் கேட்பதை உணர்ந்தான். ஒரு வேலை இந்த படகின் கூரை இடிந்து விழுமோ என்று நினைத்தான். இன்னும் நான்கு நிமிடங்களே இருந்தது. திரும்ப வீட்டிற்கு செல்லும் போது வீடு முழுவதும் கடிதங்கள் இருக்கும். அதில் ஏதாவது ஒன்றை எடுக்க வேண்டும் என்று நினைத்தான்.

இன்னும் மூன்று நிமடங்கள் தான் இருந்தது. கடல் அலைகள் பாறையின் மேல் மோதுவதா இந்த மாதிரியான சத்தத்தை எழுப்புகிறது என்று நினைத்தான். இன்னும் இரண்டு நிமிடங்களே இருந்தது. என்ன சத்தம் அது கடல் அலை தானா? என்று நினைத்தான்.

இன்னும் ஒரு நிமிடம் தான் அதன் பிறகு அவனுக்கு பதினோரு வயதாகும். 30 நொடி..... இருபது..... பத்து.....ஒன்பது..................... மூன்று....... இரண்டு...........ஒன்று...........

"பூம்"..... மிக பெரிய சத்தம்.

மொத்த படகும் அதிர்ந்தது. ஹாரி அதிர்ச்சியில் எழுந்து அமர்ந்து கதவை பார்த்தான். யாரோ ஒருவர் கதவை உடைத்து கொண்டு உள்ளே வர முயற்சி செய்து கொண்டு இருந்தார்.


[ தொடரும் ]

Tuesday, February 2, 2010

ஹாரி பாட்டர் புத்தகம்1 - ஹாரி பாட்டர் மற்றும் மந்திரகல் [பதிவு 3]

ஹாரி பாட்டர் புத்தகம்1 - ஹாரி பாட்டர் மற்றும் மந்திரகல் [பதிவு 3]

அத்தியாயம்: 3 - மந்திர கடிதம்

அந்த பாம்பு கண்ணாடி கூண்டை விட்டு வெளியே வந்தது, ஹாரிக்கு அதிகபட்ச தண்டனையை கொடுத்தது. அவன் அந்த ஸ்டோர் ரூமை விட்டு வெளியே வரும் போது வெயில்கால விடுமுறை ஆரம்பம் ஆகி இருந்தது. அப்போது டட்லி தன்னுடைய புது வீடியோ காமெராவையும் மற்றும் புது ரிமோட் ஏறோப்ளனையும் உடைத்து இருந்தான்.

ஹாரி பள்ளி முடிந்ததற்கு மிகவும் சந்தோசபட்டான். ஆனால் அவனால் டட்லி கேங்கிடம் இருந்து தப்பிக முடியவில்லை, அவர்கள் தினமும் டட்லி வீட்டிற்கு வந்தனர். பியர்ஸ்,டென்னிஸ், மால்கம், மற்றும் கார்டன் அவர்கள் மிக பெரிதாகவும், முட்டாள்களாகவும் இருந்தனர். ஆனால் அவர்களை விட பெரிய முட்டாளாகவும், மிக பெரிய உடல் கொண்டவனாகவும் டட்லி இருந்தான். அவர்களுடைய சிறந்த பொழுதுபோக்கு ஹாரியை துரத்தி தாக்குவது.

இதனால் தான் ஹாரி எப்போதடா இந்த விடுமுறை முடியும் என்று ஏங்கலானான். செப்டம்பர் வரும் போது ஹாரியும், டட்லியும் தனி தனி பள்ளிக்கு செல்ல வேண்டும். டட்லி அவன் தந்தை படித்த தனியார் பள்ளியில் சேர வேண்டும். ஹாரி அரசாங்க பள்ளியில் சேர வேண்டும். அப்பொழுது டட்லியின் தொல்லை இருக்காது என்று ஹாரி சந்தோஷபட்டான். ஆனால் டட்லிக்கு, ஹாரி அரசாங்க பள்ளிக்கு செல்வது அவனுக்கு வேடிக்கையாக இருந்தது.

ஜூலையில் ஒரு நாள் ஹாரியை வீட்டில் விட்விட்டு டட்லிக்கு புது சீருடை வாங்க லண்டனுக்கு சென்றனர். அன்று மாலை, அந்த சீருடை அணிந்து டட்லி நடந்து வரவுதை பார்த்தால் ஹாரிக்கு சிரிப்பாக இருந்தது. டர்ஸ்லி டட்லியை பார்த்து விட்டு தன் மனைவிடம் இது தான் வாழ்வின் பெருமையான தருணம் என்றார்.

அதுட நாள் காலையில் ஹாரி கிச்சனுக்கு வந்த போது ஒரு துர்நாற்றம் வந்தது. அந்த நாற்றம் அங்கு இருந்த பெரிய அண்டாவில் இருந்து வந்தது. அதில் ஏதோ அழுக்கு துணி ஒன்று மிதந்து கொண்டு இருந்தது.

"இது என்ன" என்று தன் சித்தியை கேட்டான் ஹாரி. இது உன்னுடைய பள்ளி சீருடை என்றாள்.

ஹாரி அந்த பாத்திரத்தை மீண்டும் பார்த்தான்.

ஓ... ஆனால் அது ஈரமாக இருக்க வேண்டும் என்று எனக்கு தெரியாது என்றான். "முட்டாள் மாதிரி பேசாதே.." என்றாள் அவன் சித்தி. உனக்கு டட்லியின் பழைய துணி ஒன்றை சாயமேற்றி கொண்டு இருக்கிறேன். நான் இதை முடிக்கும் போது இது மற்றவற்களுடைய துணி போல இருக்கும் என்றாள்.

ஆனால் அதை அவனால் முழுமையாக நம்ப முடியவில்லை. அவன் அங்குள்ள டேபிளில் உக்கார்ந்து, தான் முதல் நாள், கல்சுவரு[StoneWall] பொது உயர்நிலை பள்ளியில், இந்த உடையுடன் எவ்வாறு இருப்பேன் என்பதை முடிந்த அளவு நினைத்து பார்க்காமல் இருக்க முயற்சி செய்தான். டட்லியின் உடை அவனுக்கு கண்டிப்பாக ஏதோ யானை தோலை போர்த்தியது போல தான் இருக்கும்.

டட்லியும், டர்ஸ்லியும் அந்த நாற்றத்திற்கு இடையில் முகம் சுளித்து கொண்டு கிச்சனுக்கு வந்தனர். டர்ஸ்லி அந்த நாள் செய்தித்தாளை எடுத்து படிக்க ஆரம்பித்தார்.

அப்போது கடிதம் போட கதவில் இருந்த திறப்பின் சத்தமும் மற்றும் கடிதங்கள் விழும் சத்தமும் அவர்களுக்கு கேட்டது.

அப்போது, டர்ஸ்லி, " டட்லி, கடிதங்களை எடுத்து வா..." என்றார்.

"ஹாரியை எடுத்து வர சொல்லுங்கள்", என்றான் டட்லி.

"ஹாரி, கடிதங்களை எடுத்து வா..." என்றார்.

ஹாரி கடிதங்களை எடுக்க கதவுற்கே சென்றபோது, அங்கு மூன்று கடிதங்கள் சிதறி கிடந்தது. ஒன்று அவன் சித்தப்பாவின் தங்கை மார்கியிடம் இருந்து வந்திருந்தது. இன்னொன்று பழுப்பு நிற கவர் ஒன்று இருந்தது.அது ஏதோ பில் போல இருந்தது. மூன்றாவது, ஹாரிக்கு ஒரு கடிதம் வந்திருந்தது.

ஹாரி அந்த கடிதத்தை எடுத்து பார்த்தான். அவன் மனம் படபடத்தது. அவன் முழு வாழ்கையில் யாரும் அவனுக்கு கடிதம் எழுதியது கிடையாது. யாராக இருக்கும்?. அவனுக்கு நண்பர்கள் என்று யாரும் கிடையாது. வேறு எந்த உறவினர்களும் கிடையாது. ஆனாலும், இந்த கடிதம் முகவரி மிக சரியாய் இட்டு வந்துள்ளது இதில் தவறு நடந்து இருக்க வாய்ப்பு இல்லை.

Mr. H Potter
மாடிபடிக்கு அடியில் உள்ள கப்போர்ட்
4 , Privert Drive தெரு...
சர்ரே
[Surrey] [லண்டனில் உள்ள ஒரு ஊர்]

அந்த கடிதம் ரொம்ப தடிமனாகவும் மற்றும் அதிக கனமாகவும் இருந்தது. அந்த கடிதம் மஞ்சள் நிற கவரிலும், அதில் உள்ள எழுத்துக்கள் இளம்பச்சை நிறத்தில் எழுதபட்டு இருந்தது. அதில் எந்த ஒரு ஸ்டாம்பும் இல்லை.

அந்த கடிதத்தை திருப்பிய போது ஹாரியின் கை நடுங்கியது. அதில் ஊதா நிற மெழுகு சீல் இருந்தது. அதில் ஆயுதங்கள், சிங்கம், முள்லெலி, மற்றும் பாம்பு படங்களின் அச்சு அந்த சீலின் நடுவில் உள்ள H என்ற எழுத்தை சுற்றி இருந்தது.

சீக்கிரம் வா என்று டர்ஸ்லி சத்தம் போட்டார். அங்கு என்ன கடிதத்தில வெடிகுண்டு இருக்கணு சோதனையா பண்ணிட்டு இருக்க என்று சொல்லி தனுடைய நகைசுவைக்கு தான் மட்டுமே சிரித்தார்.

பில்லை பார்த்து எடுத்து வைத்து விட்டு, தன் தங்கையின் கடிதத்தை பார்த்தார். அதற்குள் டட்லி, ஹாரிக்கு ஒரு கடிதம் வந்து உள்ளது என்று சொல்லி, அவன் கடிதத்தை பிடுங்கி கொண்டான்.

"அந்த கடிதம் என்னுடையது", என்றான் ஹாரி.

"உனக்கு யார் கடிதம் எழுதுவார்கள்", என்று கூறினார் அவனது சித்தப்பா. அவரது முகம் அந்த கடிதத்தை பார்த்ததும் மிக கோரமாக மாறியது.

"பெட்டுனியா", என்று தன் மனைவின் பெயரை கத்தி கூப்பிட்டார்.

டட்லி அந்த கடிதத்தை பிடுங்க முயற்சி செய்தான். ஆனால் அவன் சித்தப்பா வெர்னான் டட்லி கைக்கு அந்த கடிதம் எட்டாமல் இருக்குமாறு பார்த்து கொண்டார். அந்த கடிதத்தின் முதல் வரியை அந்த கடிதத்தை வாங்கிய மாத்திரத்தில் படித்த அவள் மயங்கி விழுமாறு ஆகி விட்டாள்.

"வெர்னான்!......... அட கடவுளே என்ன இது", என்றாள் பெட்டுனியா.

அவர்கள் தங்களை தாங்கள் ஒருமுறை பார்த்து கொண்டார்கள். டட்லி இவ்வாறு தான் ஒதுக்கபட்டு இதுவரை அறிந்து கொள்ளவில்லை.

"நான் அந்த கடிதத்தை பார்க்க வேண்டும்", என்றான் டட்லி. ஹாரி அது என்னுடையது என்றான் அவன்.

அந்த கடிதத்தை அந்த உறையுனுள் வைத்து கொண்டு, "நீங்கள் இருவரும் உங்கள் அறைக்கு செல்லுங்கள்", என்றார் வெர்னான்.

எனக்கு என் கடிதம் வேண்டும் என்றான் ஹாரி.

"நானும் அக்கடிதத்தை பார்க்க வேண்டும்", என்றான் டட்லி.

"போகிறிர்களா இல்லையா", என்றார் வெர்னான். அவ்வாறு சொல்லி விட்டு ஹாரியையும், டட்லியையும் சட்டையை பிடித்து கிச்சன் கதவுக்கு வெளியே விட்டுவிட்டு வெர்னான் திரும்பி வந்தார். டட்லி தன் காதை சாவி துவாரம் வழியாக வைத்து ஒட்டு கேற்கலானான். ஹாரி கதவுக்கும் தரைக்கும் இடையில் உள்ள இடைவெளியில் ஏதாவது கேகிறதா என்று முயற்சி செய்து கொண்டு இருந்தான்.

"வெர்னான், அந்த கடிதத்தின் முகவரியை பாருங்கள். அவர்களுக்கு ஹாரி எங்கு உறங்குகிறான் என்று தெரிந்து உள்ளது. அவர்கள் நம்மை ஒற்று பார்த்து கொண்டு இருக்கிறார்களா?", என்று பெட்டுனியா கேட்டாள்.

"ஒற்று பார்த்து கொண்டு நம்மை பின் தொடர்ந்து கொண்டு இருப்பார்களோ", என்று முணுமுணுத்தார் வெர்னான்.

Sunday, January 31, 2010

ஹாரி பாட்டர் புத்தகம்1 - ஹாரி பாட்டர் மற்றும் மந்திரகல் [பதிவு 2]

ஹாரி பாட்டர் புத்தகம்1 - ஹாரி பாட்டர் மற்றும் மந்திரகல் [பதிவு 2]

அத்தியாயம் - 2: மாயகண்ணாடி



Mrs.டர்ஸ்லி கண் விழித்து ஹாரி பாட்டரை முன் வாசலில் பார்த்து பத்து வருடங்கள் உருண்டோடி விட்டன, ஆனால் அவர்கள் இருந்த privet drive மாறாமல் அப்படியே இருந்தது. அந்த அதிகாலையில் சூரியன் உதித்து அதன் ஒளிகிரகணங்கள் அந்த வீட்டின் முன் அறையில் விழுந்தது. அந்த முன் அறை இன்னமும் மாறாமல் இருந்தது. ஆனால் அந்த சுவரில் உள்ள புகைப்படங்கள் உருண்டோடிய பத்து வருடங்களை நினைவு படுத்தி கொண்டு இருந்தது. பூசணி தலையில் தொப்பி வைத்தது போல இருந்த படம் அந்த சுவர் முழுவதும நிறைய இருந்தது. டர்ஸ்லி அவர்களின் குழந்தை டட்லி வளர்ந்து இருந்தான். அவன் சைக்கிள் ஓட்டுவது போலவும், தன் தந்தையிடம் கம்ப்யூட்டர் கற்று கொள்வது போலவும் மற்றும் தன் தாயுடன் இருக்கும் புகைப்படங்களும் நிறைய இருந்தது. ஆனால் அந்த வீட்டில் ஹாரி ஒருவன் இருப்பதிற்கான எந்த ஒரு அடையாளமும் தென்படவில்லை.


ஆனால் ஹாரி பாட்டர் அந்த வீட்டில் தான் இருந்தான். அவன் சித்தி அவனை கத்தி எழுப்பும் வரை தூங்கி கொண்டு இருந்தான்.


ஹாரி, எழுந்திரு.. என்று கத்தினாள் அவன் சித்தி.

அவள் சித்தி கிச்சனுக்கு சென்று ஏதோ ஒன்றை வறுக்கும் சத்தம் அவனுக்கு கேட்டது. அவன் படுக்கையை சுருட்டி வைத்துவிட்டு தான் கண்ட கனவை எண்ணினான். அது மிக்கவும் அருமையாக இருந்தது. அதில் பறக்கும் மோட்டர் சைக்கிள் இருந்தது. இந்த கனவை பல தடவை கண்டது போல இருந்தது அவனுக்கு.

மீண்டும் அவன் சித்தி வந்து, அவன் கதவை தட்டி, "இன்னுமா எழுந்திரிக்கவில்லை", என்று கத்தினாள். "இதோ", என்றான் ஹாரி.

இன்று டட்லி பிறந்த நாள். இன்று அனைத்துமே மிக சரியாக இருக்க வேண்டும், என்றாள். ம்.. சீக்கிரம் வந்து அடுப்பில் உள்ள ரொட்டி துண்டை கவனி என்றாள். ஹாரி எழுந்து தன்னுடைய சாக்ஸ்சை தேடினான். படுக்கைக்கு அடியில் இருந்த தன் சாக்ஸ்சை எடுத்து அதில் ஒன்றில் இருந்த சிலந்தியை தூக்கி எறிந்து விட்டு, பிறகு அதை தன் காலில் மாட்டினான். அந்த சிறிய ஸ்டோர் ரூமில் நிறைய சிலந்திகள் இருந்தாள் அவனுக்கு சிலந்தி பழகிவிட்டது.

அவன் கிச்சனுக்கு சென்று பார்த்த போது, ஒரு மேசை முழுவதும் டட்லிக்கு பிறந்த நாள் பரிசுகள் நிறைந்து இருந்தது. டட்லிக்கு பித்த விளையாட்டு ஹாரியை அடிப்பது தான். ஹாரி மிகவும் ஒளியாக இருந்தான். டட்லி ஹாரியை போல நான்கு மடங்கு இருந்தான். ஹாரிக்கு உடுதுவதேல்லாம் டட்லியின் பழைய துணிகளே. அவனுக்கு அவனிடம் பிடாத ஒரே விஷயம் அவன் நெற்றியில் இருந்த மின்னல் கேற்று போன்ற தழும்பு தான். அவன் பெற்றோர் ஒரு கார் விபத்தில் இறந்ததாக அவன் சித்தி கூறியது அவனுக்கு நினைவுக்கு வந்தது.

அவன் சித்தப்பா கிச்சனுக்கு வந்து இவனை பார்த்து தலை வரவில்லை. போய் தலை வாறி கொண்டு வா, என்றார். அவர் வாரம் ஒரு முறை ஹாரியை பார்த்து இவனுக்கு முடி வேட வேண்டாம் என்று கூறுவார். ஹாரி முடி அதிக வளர்ச்சி கொண்டு இருந்தனால் வாரம் ஒரு முறை ஹாரி முடி வெட்ட வேண்டியதாயிற்று.

டட்லி அந்த அறைக்கு வந்து தனுடைய பரிசுகளை என்ன ஆரம்பித்தான். "முப்பத்தி ஆறு"... . இது போன வருசத்தை விட ரெண்டு குறைவு என்று கத்தினான் தன் தாயை நோக்கி.

அவளும், நாம் வெளியே செல்லும் போது இன்னும் ஒரு 3 பரிசு வாங்கி கொள்ளலாம் என்றாள். அவர்கள் அனைவரும் ஒரு மிருக காட்சி சாலைக்கு செல்ல முடிவு செய்தனர்.

ஹாரியை இதுவரை அவர்கள் வெளியே எங்கும் அழைத்து சென்றதே இல்லை. எங்காவது அவர்கள் வெளியே சென்றால் இவனை பக்கத்துக்கு வீட்டில் உள்ள வயதான ஒரு அம்மாவிடம் ஒப்படைத்து விட்டு செல்வார்கள். ஆனால் இப்போது அவள் காலை உடைத்து கொண்டு மருத்தவமனையில் இருப்பதனால், இவர்கள் இவனயும் அவர்களோடு மிருககாட்சி சாலைக்கு செல்ல முடிவு செய்தனர்.

இவனை அழைத்து சென்று காரிலே விட்டுவிட்டு போகலாம், என்றாள் அவன் சித்தி. ஆனால், "கார் புதுசு. இவன் காரில் தனியாக இருப்பதா? என்றார் டர்ஸ்லி. பின்னர் ஹாரியை பார்த்து, "உன்னை எச்சரிக்கிறேன்... அங்கு வந்து எதாவது பண்ணினே, அந்த ஸ்டோர் ரூம்ல தான் கிறிஸ்துமஸ் வரைக்கும் இருக்கணும் ", என்றார்.

நான் ஒன்னும் செய்ய மாட்டேன் என்றான் ஹாரி. ஆனால் அவனை அவன் சித்தப்பா நம்ப வில்லை. ஏனெனில், அவனை அடிகடி சில வித்தியாசமான நிகழ்ச்சிகள் நடந்தது.

அவ்வாறு தான் ஒரு நாள் , அவன் சித்தி ஓயாமல் இவனுக்காக முடி வெட்டும் கடைக்கு செல்ல வேண்டிருந்த கோபத்தினால் ஒரு கத்திரிகோளை எடுத்து இவளே அவன் தலை மட்டை ஆகுமாறு வெட்டி விட்டாள். டட்லி ஹாரி தலையை பார்த்து சிரித்தான். ஹாரி அலுத்து கொண்டே அவன் படுக்கைக்கு சென்றான். காலையில் எழுந்து பார்த்தால் அவன் முடி பழைய அளவுக்கு வளர்ந்து இருந்தது.

இவ்வாறு பல சம்பவங்கள் நடந்தது. ஆனால் இன்று அவாறு ஒன்றும் நடக்காது என்று அவன் நினைத்தான். அவன் தன் சித்தப்பாவை நோக்கி, "இன்று என் கனவில் பறக்கும் மோட்டர் சைக்கிளை பார்த்தேன்", என்றான். அதற்கு அவர் " மோட்டர் சைக்கிள் பறக்காது", என்று கோபமாக கூறினார்.

எனக்கும் தெரியும். ஆன இது கனவு தான் என்றான். ஆனால் இந்த மாறி பேசுவர்த்கே ஹாரியை அனுமதிக வில்லை. அது கனவாக இருந்தாலும் அல்லது கார்டூனாக இருந்தாலும் இந்த மாதிரியான சித்தனை வந்தாள் அவனும் தன் தங்கை மாதிரி ஆயிடுவனோ, என்று பயந்தனர்.

அது ஒரு சனிக்கிழமை காலை நேரம், மிருககாட்சி சாலை முழுவதும் பலதரப்பட்ட குடும்பங்களினால் நிரந்து இருந்தது. டட்லி ஐஸ்கிரீமும், சாக்லட்டும் வாங்கினான். ஹாரிக்கு ஒரு விலை குறைந்த ஐஸ்கிரீமை வாங்கி கொடுத்தார்கள். அது ஒன்று மிக மோசமாக இல்லை. அது அவனுக்கு பிடித்து தான் இருந்தது.

அவன் வாழ்க்கையிலே மகிழ்ச்சியான காலை பொழுதைகளித்து கொண்டு இருந்தான். அவர்கள் எல்லா இடமும் சுற்றி விட்டு மதியம் அந்த மிருகசலை உணவகத்தில் மதிய உணவை முடித்து கொண்டனர்.

பின்னர், அவர்கள் பாம்பு, பல்லி, ஆமை போன்றவைகள் அடைக்கபட்ட இடத்திற்கு சென்றனர். டட்லிக்கு கோப்ராவை பார்க்க ஆசை. மிக விரைவில் டட்லி அந்த இடத்திலே மிகபெரிய பாம்பை பார்த்தான். அது முழு உடம்பையும் அவர்கள் வந்த காரை இரு முறை சுற்றி, அது நொறுக்கிற அளவுக்கு பெரியது. ஆனால் இப்பொழுது அமைதியாக அசைவற்று இருந்தது.

டட்லி அது வைக்க பட்டிருந்த கண்ணாடி கூண்டின் மேல் மூக்கை வைத்து அழுத்தி அதை பார்த்து கொண்டு இருந்தான். அது நகராமல் இருப்பதை பார்த்து, " ம்ம் இங்கே வா... நகரு " என்று கத்தினான். அவன் தந்தையும் கண்ணாடியை தட்டினார் ஆனால் அது நகராமல் மெதுவாக உஸ் என்று சத்தம மட்டும் போட்டது. இது போர் அடிக்கிறது என்று சொல்லி விட்டு டட்லி நகர்ந்தான்.

ஹாரி கண்ணாடி முன் வந்து நின்று, ஏன் இப்படி இதை கண்ணாடி கூண்டில் அடைத்து வைத்து இருக்கிறார்கள். இது இங்கயே செய்து போனாலும் யாரும் கவலை பட மாட்டார்கள். இது நான் இருக்கும் ஸ்டோர் ரூமை விட மோசமான நிலைமை. இதை எல்லாம் அறிந்து கொள்ளாமல் எல்லாரும் அதை தட்டி எழுபுவதையே குறிகோளாக கொண்டுள்ளனர், என்றான்.

உடனே, அந்த பாம்பு கண்ணை திறந்தது. அது எழுந்து அவன் முன் கண்ணாடியில் வந்து அவனை பார்த்து கண் சிமிட்டியது. ஹாரியும் அதை நோக்கினான். பின்னர் வேறு யாரும் அவத்தை பார்க்கவில்லை என்று உணர்ந்து கொண்டு அதை நோக்கி தானும் கண் சிமிட்டினான்.

அந்த பாம்பு, அவன் சித்தப்பாவும், டட்லியும் இருக்கும் திசையை தன் தலையால் காட்டி, இந்த மாதிரிதான் எப்போதும் நடக்கும். என்றது.

புரியுது, ரொம்ப தொந்தரவாக தான் இருக்கும், என்றான். அந்த பாம்பும் அதை ஆமோதிக்கும் விதமாக தலையாட்டியது.

சரி, நீ எங்க இருந்து வந்தே? என்று கேட்டான் ஹாரி. அதற்கு அந்த பாம்பு தன் வாலால் அந்த கண்ணாடி ஓரத்தில் இருந்த ஒரு பலகையை காட்டியது. அதில் BOA CONSTRICTOR[பாம்பின் வகை], பிரேசில் என்று போட்டு இருந்தது.

ஓ, பிரேசிலா... அந்த இடம் எப்படி இருந்தது? என்று கேட்டான், ஹாரி. அதற்கு அந்த பாம்பு மீண்டும் அந்த பலகையை தன் வாலால் தட்டியது. அதில் "இது மிருககாட்சி சாலை ஆரயிச்சிகூடத்தில் பிறந்தது", என்று போட்டு இருந்தது. ஓ, அப்பா நீ பிரேசிலுக்கே போனந்து இல்லையா, என்றான்.

அந்த பாம்பு அதற்கு தலையாட்டிய பொழுது, கதை கிளிக்கும் விதத்தில் டட்லி "அப்பா, அந்த பாம்பை பாருங்கள் என்று ஓடி வந்தான். வந்தவன் ஹாரியை இடுப்பில் குத்தி கீழே தள்ளிவிட்டு, அவன் கண்ணாடி அருக்கில் சென்று பாம்பை பார்த்தான்.

அப்போது என்ன நடந்தது என்று அறிவதற்குள், மிருககாட்சி சாலை முழுவதும் ஒரே அலறல். அந்த பாம்பை அடைத்து வைத்து இருந்த அந்த கண்ணாடி மாயமாய் மறைந்து போனது. பாம்பு, அந்த கூண்டை விடு வெளியே வந்து கொண்டு இருந்தது.

எல்லாரும் வாசலை நோக்கி ஓடி கொண்டு இருந்தார்கள். அந்த பாம்பு, "பிரேசில், இதோ நான் வரேன்", என்றது. பின்னர் ஹாரியை நோக்கி நன்றி என்றது.

யார்க்கும் ஒன்றும் புரியவில்லை எவ்வாறு அந்த கண்ணாடி மாயமாக மறைந்தது என்று. ஹாரியின் சித்தப்பா மட்டும் அவனை முறைத்து பார்த்தார்.

பின்னர் எல்லோரும் தங்கள் வீட்டுக்கு சென்றனர். அவன் சித்தப்பா அவனை நோக்கி உனக்கு இன்று சாப்பாடு கிடையாது. உன் அறைக்கு போ என்றார்.

இங்கு அவன் வந்து பத்து வருடம் ஆகிறது. அவன் சித்தி அவனுடைய பெற்றோர் ஒரு கார் விபத்தில் இறந்தனர் என்று கூறியது மட்டுமே அவனுக்கு நினைவில் இருக்கிறது . அவர்கள் எவ்வாறு இருந்தார்கள் என்ற ஞாபகம் கோடா அவனுக்கு இல்லை. அவன் பெற்றோர் புகைப்படம் கூட ஒன்றும் இல்லை. அவனுக்கு ஞாபகம் இருந்த ஒரே விஷயம் ஒரு பச்சை நிற ஒளியை பார்த்த ஞாபகம் அதை நினைக்கும் போது அவன் நெற்றி எரிவது போல இருக்கும் அவனுக்கு. ஆனால் இது கார் விபத்தின் போது நடந்தது என்றாள் பச்சை நிற ஒளி எங்கிருந்து வந்தது என்பதை அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை .

மிக சிறிய வயதில் ஹாரி தன் சித்தியுடன் கடைக்கு சென்ற போது ஒரு ஊதா நிற உடை உடுத்திய ஒருவன் இவனை பார்த்து மரியாதையை செலுத்தியதை இவனால் மறக்க முடியவில்லை . இந்த மாதிரி பல வர்ண உடை உடுதியர்வகள் இவன் வெளியே செலும் போது இவனை பார்த்து மரியாதையை செலுத்தினர். இவன் அவர்கள் அருகில் சென்று பார்க்கலாம் என்று போகும் போது அவர்கள் திடிரென்று மறைந்து விடுவார்கள் . இந்த மாதிரி பல வித்தியாசமான நிகழ்ச்சிகள் அவனை சுற்றி நடந்து கொண்டு இருந்தது.

பள்ளியிலும் அவன்னுக்கு நண்பர்கள் என்று யாரும் கிடையாது. இந்த தொளதொள உடையும், உடைந்த கண்ணாடியும் அணிந்த ஹாரியை, டட்லி கேங்குக்கு பிடிக்காது , என்று எல்லோருக்கும் தெரியும். யாரும் டட்லி கேங்கை எதிர்க்க விரும்பவில்லை.

[தொடரும்]

ஹாரி பாட்டர் - புத்தகம்1 - ஹாரி பாட்டர் மற்றும் மந்திரகல் [பகுதி -1]

கதை:

ஹாரி பாட்டர் - புத்தகம்1 - ஹாரி பாட்டர் மற்றும் மந்திரகல்

அத்தியாயம் -1: மார்கண்டேயன்:


[குறிப்பு: இந்த மார்கண்டேயன் பதினாறு வயது இளைகுன் அல்ல பச்சிளம் குழந்தை.]

மிஸ்டர் மற்றும் மிஸ்சஸ். டர்ஸ்லி அவர்கள் சாதாரண வாழ்க்கையை அந்த Privet Drive எனப்படும் தாவரங்கள் நிரந்த பசும் சூழலில் அமைதியாக வசித்து கொண்டு இருந்தனர். அவர்களக்கு மந்திரம் மற்றும் தந்திரம் போன்ற விசங்களில் நம்பிக்கையை கிடையாது.

மிஸ்டர். டர்ஸ்லி போர் போடும் grunnings[இதன் அர்த்தம் தேரியவில்லை எனக்கு – ground + running இவாறு இருக்கலாம்] நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருந்தார்[Director]. மிஸ்சஸ். டர்ஸ்லி அவர்கள் மிகவும் மெலிதாகவும் மற்றும் அடுத்த வீட்டாரை வேவு பார்க்க தகுந்த குணம் உடையவராக இருந்தார். அவர்களக்கு டட்லி என்ற மகன் இருந்தான். அவர்கள் அவனை தலை மேல் வைத்து கொண்டாடினார்கள்.

டர்ஸ்லி அவர்கள்[மிஸ்டர் மற்றும் மிஸ்சஸ்] அவர்களக்கு தேவையான அனைத்தையும் பெற்று இருந்தார்கள். ஆனால் அவர்களிடமும் ஒரு ரகசியம் மறைந்து கிடந்தது. அதை யாரவது கண்டு பிடிதுவிடுவார்களோ என்ற பயமும் அவர்களக்கு இருந்தது . அவர்களக்கு பாட்டரை பற்றியும் அவனது தாயை பற்றியும் யாராவது அறிந்து கொண்டு விடுவார்களோ என்று ஒரே பயம். அவன் தாய் மிஸ்சஸ். பாட்டர் அவர்கள் மிஸ்சஸ். டர்ஸ்லி அவர்களின் தங்கை என்று அறிந்துகொண்டு விடுவார்களோ என்று பயம் . அவளுடைய தங்கையை அவள் வெகு நாளாக பார்த்ததே இல்லை .

அப்பொழுது யாரும் கவனிக்காத நேரத்தில், இளம்பழுப்பு நிற ஆந்தை ஒன்று அவர்களின் ஜன்னலை கடந்து சென்றது....

காலை 8.30 மணிக்கு, மிஸ்டர். டர்ஸ்லி வீட்டை விட்டு கிளம்பினார். அப்பொழுது அவர் மனைவிக்கு நாள் பிரிவு விடையை தன் முத்தத்தின் மூலம் தெரிவித்து கொண்ட பொழுது, அவர்கள் மகன் டட்லி உணவின் மீது உள்ள கோபத்தினால், அதை தூகிகி எறிந்தான். அவர் தன் காரை எடுத்து கொண்டு privet drive விட்டு வெளியேற தயாரானார் .

அப்பொழது தெருவின் மூலையில் முதல் வித்தியாசமான ஒன்றை கண்டார் – அது பூனை ஒன்று மேப்பை படித்து கொண்டு இருந்தது. ஒரு சில வினாடி , மிஸ்டர். டர்ஸ்லி தான் என்ன கண்டேன் என்று அவர் உணரவில்லை. பின் சுதாரித்து கொண்டு அந்த பூனையை பார்த்தார். அவருக்கு இப்போழ்து மேப் தெரியவில்லை. பூனை மட்டும் privet drive உக்கார்ந்து கொண்டு இருந்தது தெரிந்தது . அவர் அந்த பூனையை நோக்க அதுவும் அவரை நோக்கியது. அவர் இது அவருடைய கற்பனை என்று எண்ணி தனுடைய வழக்கமான போர் போடும் தொழிலை நினைகலனார் .

ஆனால் அவர் நகரத்தை சென்றைடைந்த போது , அவரது கவனத்தை திசை திருப்பும் நிகழ்சிகள் பல நடந்தது . பலரும் மிக வித்தியாசாமான வர்ணகளில் உடையணித்து இருந்தார்கள் . என்ன இது முட்டாள்தனமான பேஷன் என்று எண்ணினார் . சில வயதானவர்களும் லைட் green உடை உடுத்தி கொண்டு ஏதோ ஒரு விசயத்தை மிக்கவும் உற்சாகமாக முனுமுனுத்து கொண்டு இருந்தார்கள் . உடனே அவர் நினைத்தார் , ஏதோ ஒரு நன்கொடைக்காக தான் இவர்கள் எல்லாம் இவ்வாறு உடை உடுத்தி கொண்டு இருக்கிர்கள் என்று நினைத்தார் . அதன் பிறகு அவர் மனம் முழுவதும் போர் போடுவது மட்டுமே நினைவில் இருந்தது .

மிஸ்டர்.டர்ஸ்லி எப்போல்தும் ஒன்பதாவது மாடியில் அமர்ந்து வேலை செய்வார். பகலில் வித்தியாசமாக ஆந்தை ஒன்று உலா வருவதை அவர் பார்க்க விட்டாலும் . மற்ற அனைவைரும் பார்த்து வியந்தார்கள் . இவர் எப்போல்தும் போல சில பேரை வேலை செய்ய சத்தம போட்டு விட்டு மற்றும் சில phone call செய்து முடிக்க மதிய உணவு நேரம் நெருங்கியது .

அவர் பேக்கரி சென்று மதிய உணவு பெற செல்லும் வரை அவர் வேறு எதுவும் வித்தியாசமாக பார்க்கவில்லை.

அப்பொழுது சில வர்ண உடை அணிந்தவர்கள் அவரை கடக்கும் வரை இதை பற்றி முழுவதும் அவர் மறந்து இருந்தார். அவர்கள் கையில் நன்கொடை வசூலிக்கும் உண்டியல் இல்லாததை கண்டு வியந்தார். அவர்கள் உற்சாகமாக, " பாட்டர் பரம்பரை தான், அவன் பையன் ஹாரி மூலம் தான் இவ்வாறு நடந்தது" என்று தெரிவித்தார்கள். இவர் ஏதோ சொல்ல வாய் எடுத்து பின்னர் அமைதி ஆனார்.

திரும்ப தன் இருக்கைக்கு வந்து, தன் வீட்டு தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு இதை தெரிவிக்க முயற்சி செய்தார். ஆனால் அவர்க்கு தெரியும் தன் மனைவி தன் தங்கை பெயர் தெரிவித்தால் எவ்வாறு மன வருத்தம் அடைவாள் என்று. அதுவும் இல்லாமல் பாட்டர் என்று வேறு யாராவுது இருக்கலாம். மற்றும் அவர்களது மகனின் பெயர் ஹாரி என்பதும் அவருக்கு மிக சரியாக தெரியாது. அது ஹார்வி அல்லது ஹாரால்டு ஆக இருக்கலாம் தான் தான் தவறாக எண்ணுவதாக நினைத்தார்.

தான் தன் தொழில் போரில் தன் மனம் செலுத்த முடியாமல் அவர் 5 மணிக்கு கிளம்பும் போது வயதான வர்ண உடை உடை உடிதிய ஒருவர் அவரை கட்டி தழுவி "உங்களக்கு தெரியுமா பெயர்-உச்சரிக்க-கூடாதவன் மறைந்து விட்டான். அதனால் சாமானியன் ஆன நீ கூட கொண்டாட வேண்டும்" . தன்னை சாமானியன் என்று அழைத்ததை அவரளால் ஏற்று கொள்ள முடிய வில்லை.

தன் காரை எடுத்துக் கொண்டு privet drive நுழைந்த பொழுது அவர் காலையில் கண்ட பூனை அதே இடத்தில் உக்கார்ந்து கொண்டு இவரை பார்த்ததை இவர்லால் ஜிரனிக்க முடியவில்லை. சூ என்று அந்த பூனையை விரட்டினார். அது அவரை முறைத்து பார்த்தது.

அதை மறந்து விட்டு, வீட்டுக்கு சென்று அமைதியாக இரவு உணவை முடித்து விட்டு தன் மனைவியிடம் எதுவும் தெரிவிக்க கூடாது என்று நினைத்தார். பின்னர், இரவு செய்தி போட்ட பொழுது, பறவை நடமாட்டம் இன்று பகலில் வித்தியாசமாக இருந்ததை பற்றி ஒரு சிறப்பு செய்தி பட்டு இருந்தார்கள். ஆந்தை பகலில் பறக்கிறது. அது தூங்கும் பழக்கத்தை மாற்றி விட்டதா என்று கேள்வி எழுப்பினார்கள்.

தன்னுடைய நாற்காலியில் மிஸ்டர்.டர்ஸ்லி உறைந்து இருந்தார், பின்வருமாறு எண்ணி, பிரிட்டன் முழுவதும் நட்சத்திரம் விழுதுவது தெரிந்ததா? பகலில் ஆந்தை லண்டன் முழுவதும் உலா வந்ததா? மற்றும் வர்ண உடை அணிந்தவர்களின் பாட்டரை பற்றிய முனுமுனுப்பு?

பின் தன் மனைவியை நோக்கி அவர், உன் தங்கையிடம் நீ பேசினாயா? அவள் எவ்வாறு இருக்கிறாள் என்று விசாரித்தார். இல்லை எதுக்கு கேகிறேங்க என்று விசாரித்தால் அவள். டிவி செய்தி வித்தியாசமாக உள்ளது. ஆந்தை பகலில் பரந்துனு சொல்றாங்க ஆதன் கேட்டேன் அவங்க எப்படி இருக்காங்கனு...என்று உரைத்தார்.

அதனால? என்றால் அவர் மனைவி.

அவங்க மக்கள் தான் இதுக்கு காரணமோ??? என்றார். பாட்டர் பெயரை கேட்டதை சொல்ல அவரூக்கு துணிச்சல் இல்லை. அதனால், அவர்கள் பையனும் நம் மகன் வயது இருப்பன் அல்லவே என்று கேட்டார்.

அவளும், அவ்வாறு தான் இருக்கும் என்றும் தெரிவித்தாள்.

அவன் பெயர் என்ன? ஹோவர்ட் தானே? என்றார்.....

இல்லை, ஹாரி என்றால் அவள்.

உள்ளம் படபடக்க ஆமாம் என்றார் அவர், ஹாரி பெயரை இன்று மதியம் கேட்ட அதிர்சியில்.

அவர் மனைவி உறங்கி விட்டாள். இவர்க்கு குழப்பத்தினால் உறக்கம் வரவில்லை. பின்னர் வெகு நேரம் களைத்து அவர் உரின்கினார். ஆனால் அந்த பூனை இன்னும் உறங்கவோ அல்லது வேறு செல்லவோ இல்லை. நள்ளிரவிற்கு பிறகு தான் அந்த பூனை, பர்ப்பிள் நிற உடை உடுத்தி, வெள்ளி நிறத்தில் உயரமான தாடியும், முடியும் வைத்த ஆல்பஸ் டம்பில்டோர் பார்த்து நகர்ந்தது.

டம்பில்டோர், தான் வரவேற்க படமுடியாத இடத்தில் தான் இருப்பதை உணர்ந்து கொள்ளலமலும், தன்னை ஒருவர் கவனித்து கொண்டு இருப்பதை அரிது கொள்ளாமலும் இருந்தார். பின்னர் பூனையை நோக்கியவுடன் " ஆ, நான் உங்களை கவனித்து இருக்க வேண்டும்" என்றார்.

டம்பில்டோர் தன் பாக்கெட்டில் இருந்து வெள்ளி நிற லைட்டரை எடுத்து அதை பன்னிரண்டு முறை திறந்து முடியதன் மூலம் அந்த privet drive உள்ள பன்னிரண்டு தெருவிளைக்கையும் மிக்க சன்னமான வெளிச்சதற்க்கு கொண்டு வந்தார். இப்போது டர்ஸ்லி யாரவது ஜன்னல் வழியாக பார்த்தால் கூட தெரியாத அளவிற்கு இருள் கூடி இருந்தது.

டம்பில்டோர், பூனை இருந்த சுவர் அருகே பார்க்காமல், " வாருங்கள், புரொபசர். மெக்கொனல் உங்களை பார்த்தது மிகவும் சந்தோசமாக உள்ளது" என்றார். அவர் அந்த சுவற்றை நோக்கிய பொழுது அங்கு பூனைக்கு பதிலாக ஒரு பெண்மணி பச்சை நிற உடை உடுத்தி, பூனையின் கண் வளையம் மாதிரி கண்ணாடி அணிந்து இருந்தாள்.

நான் தான் என்பதை எவ்வாறு கண்டுகொண்டிர்கள் என்று கேட்டால் அவள். எந்த ஒரு பூனையும் இவ்வளவு உறுதியாக உட்க்கர்ந்திராது என்றார் டம்பில்டோர்.

காலை முதல் உக்கார்ந்து இருந்தாள் அவ்வாறு தான் இருக்கும் என்றாள். இந்த சிறப்பான நாளை கொண்டலாமல் இங்கு என்ன பண்ணி கொண்டு இருக்கிர்கள் என்றார் அவர்.

ஆமாம், சாமானியர்களும் இதை அறிந்து கொண்டார்கள். ஏதோ விசித்திரமாக நடந்தது என்று டிவி நிகழ்ச்சியில் சொல்லப்பட்டு உள்ளது என்றாள் மெக்கொனல்.

அவர்களை குறை சொல்ல முடியாது. 11 வருடத்திற்கு பிறகு நமக்கு கொண்டாட ஒரு தருணம் கிடைத்து உள்ளது என்றார் .

மெக்கொனல் கேட்டாள், பெயர்-உச்சரிக்க-கூடாதவன் காணமல் போய் விட்டானாமே. அப்படியா டம்பில்டோர்? என்று கேட்டாள்.

அவரும் அவ்வாறு தான் தோன்றுகிறது என்றார். அதற்கு மிகவும் நன்றி கடன்பட்டவர்களாக நாம் இருக்க வேண்டும் என்றார்.

அதற்கு புரபெசர்.மெக்கொனல், பெயர்-உச்சரிக்க-கூடாதவன் காணமல் போய் இருந்தாலும்....... என்றாள்.

அந்த சமயத்தில் டம்பில்டோர், பெயர்-உச்சரிக்க-கூடாதவன் என்று சொல்வதை விட வால்டர்மோர்ட் என்று சொல்ல வேண்டும் என்றார். அந்த பெயரலில் உள்ள பயத்தை போக்க வலியுறித்தினார்.

மெக்கொனல் அவர்களும் பெயர்-உச்சரிக்க-கூடாதவன் நிகரான சக்தி உங்களிடமும் உள்ளது என்றாள். ஆனல் நீங்கள் கருப்பு மந்திரங்களை நீங்கள் உபயோகிபதில்லை என்றாள்.

வால்டர்மோர்ட் காட்றிக் ஹாலோவ் சென்று ஜேம்ஸ் மற்றும் லில்லி பாட்டரை [ஹாரி பாட்டரின் தந்தை மற்றும் தாய்] கொன்று பின்னர், ஹாரி பாட்டரை கொள்ள முயற்சி செய்த போது அவனால் இந்த பச்சிளம் குழந்தையை கொள்ள முடியவில்லை யாருக்கும் என் என்று தெரியவில்லை. இந்த முயற்சியில் கருப்பு மந்திர கடவுள் அழிந்தான் என்று அறியபடுகிறோமே? அது உண்மையா? என்று கேட்டாள்.

அது உண்மை தான் என்ற முறையில் அவர் தலை அசைத்தார்.

இத்தனை பேரை கொன்ற அவனால் சிறு குழந்தையை கொள்ள முடியவில்லையா? ஹாரி எவ்வாறு உயிர் பிழைத்தான்? என்றாள். அதை யூகிக்க முடியுமே தவிர கணிக்க முடியாது என்றார் டம்பில்டோர்.

இங்கு எதற்காக தாங்கள் வந்துல்றீர்கள் என்றாள் மெக்கொனல். அதற்கு ஹாரியை அவன் மாமா, அத்தையிடம் ஒப்படைக்க வந்துள்ளேன் என்றார். அவர்கள் தான் அவனின் மிக நெருங்கிய உறவினர்கள் இங்கு வளர்து தான் அவனக்கு மிக சரியாக இருக்கும் என்றார்.

புரபெசர்.மெக்கொனல், இதற்கு ஒத்து கொள்ள முடிய வில்லை. இவளவு பெரிய, புகழ் வாய்ந்த மந்திரவாதி சாமானியாரிடம் வளர்வதா? இந்த naal பிற்காலத்தில் ஹாரி பாட்டர் நாளாக கூட கொண்டாடலாம் அப்பேற்பட்ட ஒருவன் இந்த சூழ்நிலையிலா வளர்வது? என்று கேட்டாள்.

அவனக்கே தெரியாத ஒன்றை, அவன் அறியாத வயதில் நடந்த ஒன்றை வைத்து மிக புகழுடன் வளர்வதை விட, அவன் புகழை முற்றிலும் அறியாத இடத்தில வளர்வதே சால சிறந்தது என்றார்.

அப்பொழுது ஹாக்ரிட், தான் சீரியஸ் ப்ளாக்கிடம் இரவலாக பெற்ற பறக்கும் மோட்டார் சைக்கிளில் குழந்தை ஹாரியை எடுத்து கொண்டு அங்கு வந்தார். அந்த குழந்தையை ஒரு கூடையில் வைத்து நடந்த நிகழ்ச்சியை டம்பில்டோர் ஒரு கடிதத்தில் எழுதி ஹாரியின் மேல் வைத்தார்.

ஹாரி பாட்டர் குழந்தை நெற்றியில் மின்னல் கீற்று மாதிரியான தழும்பு இந்த வால்டர்மோர்ட் தாக்குதலினால் உருவாகி இருக்கும். இந்த தழும்பின் மூலமாகவே பிற்காலத்தில் ஹாரி பெரும்பலவிறினால் அறிய படுவான்.

ஹாக்ரிட், குழந்தை ஹாரியை பிரிய மனமில்லாமல் கண்ணீரை தொடைத்து கொண்டு புறப்பட, புரபெசர்.மெக்கொனல் அவர்கல்கும் கிளம்பினார்கள்.


டம்பில்டோர் தன் பாக்கெட்டில் இருந்து வெள்ளி நிற லைட்டரை எடுத்து அந்த privet drive உள்ள பன்னிரண்டு தெருவிளைக்கையும் பழைய வெளிச்சதற்க்கு கொண்டு வந்தார். ஹாரியும் தன் கூடையில் உள்ள கடிதத்தை இருக்க பிடித்து கொண்டு உறங்கினான். அவன் உறக்கம், மிஸ்சஸ்.டர்ஸ்லி பால் பாட்டில் எடுக்க வெளிய வரும் பொழுது எழுப்பும் அலறலினால், களையும் என்பதை அறியாமல் உறங்கி கொண்டு இருந்தான்.

[தொடரும்]

Visitors