Saturday, May 15, 2010

ஹாரி பாட்டர் புத்தகம்1 - ஹாரி பாட்டர் மற்றும் மந்திரகல் [பதிவு 10]

ஹாரி பாட்டர் புத்தகம்1 - ஹாரி பாட்டர் மற்றும் மந்திரகல் [பதிவு 10 ]

அத்தியாயம் 6 – ஒன்பதே முக்கால் பிளாட்பார்மில் இருந்து பயணம்

ஹாரியின் சென்ற மாதம் அவ்வளவு சிறப்பாக இல்லை. டட்லி ஹாரியை பார்த்து பயப்படுகிறான். அவன் சித்தியும் சித்தப்பாவும் அவன் இல்லாதது போல் நடந்து கொள்கிறார்கள்.

அதனால், ஹாரி தன் அறையிலேயே தன் ஆந்தையுடன் இருந்தான். அந்த ஆந்தைக்கு ஹெட்விக் என பெயர் சூட்டினான். அவன் இரவெல்லாம் கண் விழித்து படித்து கொண்டிருப்பான். ஹெட்விக் ஜன்னல் வழியாக தன் இஷ்டம் போல் சென்று வந்தது. நல்ல வேளை அவன் சித்தி இப்போதெல்லாம் அவன் அறைக்கு வருவது கிடையாது. இல்லையென்றால் ஹெட்விக் அவ்வப்போது கொண்டு வரும் இறந்த எலிகளால் நிறைய பிரச்சனை வந்து இருக்கும்.

ஆகஸ்டின் கடைசி நாளன்று, அவன் சித்தப்பாவிடம் நான் நாளைக்கு ஹாக்வாட்ஸ் பள்ளிக்கு செல்ல கிங் கிராஸ் ரயில் நிலையத்திற்கு செல்ல வேண்டும். என்னை அங்கே உங்க காரில் இறக்கி விட முடியுமா? என்று ஹாரி கேட்டான்.

சரி என்றார். பின்னர், மந்திர பள்ளிக்கு செல்ல ரயிலா? பறக்கும் கம்பளம் இல்லையா? என்று கேலியாக கேட்டார்.

ஹாரி எதுவும் பதில் சொல்லவில்லை.

சரி, உன் பள்ளி எங்கே இருக்கிறது? என்றார் அவன் சித்தப்பா.

”எனக்கு தெரியாது”, என்று ஹாரி கூறி, ஹாக்ரிட் கொடுத்த டிக்கெட்டை முதல் முறையாக பார்த்தான்.

”நான் சரியாக பதினொரு மணிக்கு ஓன்பதே முக்கால் ப்ளாட்பாரத்திலிருந்து ரயில் ஏற வேண்டும் என்று போட்டு இருக்கிறது”, என்றான்.

எந்த ப்ளாட்பாரம்?

ஓன்பதே முக்கால் ப்ளாட்பாரம்.

முட்டாள் மாதிரி பேசாதே…. ஓன்பதே முக்கால் ப்ளாட்பாரம் என்று எதுவும் கிடையாது, என்றார் அவன் சித்த்ப்பா.

ஆனால் என் டிக்கெட்டில் போட்டு உள்ளதே, என்றான் ஹாரி.

நாளைக்கு அங்கு போகும் போது உனக்கே தெரியும். எப்படியும் நாங்க நாளைக்கு லண்டன் போகும் போது உன்னை அங்கே விட்டுட்டு போறோம், என்றார்.

அடுத்த நாள், அவர்கள் ரயில் நிலையத்திற்கு 10.30 க்கு வந்து சேர்ந்தனர்.

அங்கே பார்த்தியா…. ப்ளாட்பாரம் 9 மற்றும் 10. உன்னோட ப்ளாட்பாரம் இதுக்கு நடுவில எங்கயாவது இருக்கும் போயி தேடு… என்று கூறி விட்டு அவர்கள் கிளம்பி சென்று விட்டனர்.

ஆனால், 9வது ப்ளாட்பாரம்க்கும் 10வது ப்ளாட்பாரம்க்கும் இடையில் ஒன்றுமே இல்லை. எல்லோரும் அவனையும் அவன் ஆந்தையும் பார்த்து கொண்டு சென்றனர்.

ஹாரி அங்கு நின்ற ரயில் காவலரை பார்த்து இங்கு ஓன்பதே முக்கால் ப்ளாட்பாரம் எங்குள்ளது, என்று கேட்க நினைத்தான். ஆனால் தன்னை பைத்தியம் என்று அவர் நினைப்பாறோ என்று எண்ணினான்.

கண்டிப்பாக ஹாக்ரிட் தன்னிடம் எப்படி 9 மற்றும் 10 ப்ளாட்பாரம் நடுவில் எப்படி நுழைவது என்று சொல்லாமல் சென்று விட்டார். மணி வேற 11 நெருங்கி கொண்டு இருந்தது.

ஹாரி பாட்டர் புத்தகம்1 - ஹாரி பாட்டர் மற்றும் மந்திரகல் [பதிவு 9 ]

ஹாரி பாட்டர் புத்தகம்1 - ஹாரி பாட்டர் மற்றும் மந்திரகல் [பதிவு 9 ]


அத்தியாயம் 5 : கோண வழிபாதை[Diagon Alley] [தொடர்ச்சி ]


பின்னர் அவர்கள் ஹாரிக்கு வேண்டிய பொருட்களை வாங்க புறப்பட்டனர்.
"உனக்கு முதலில் சீருடை வாங்க வேண்டும்", என்றார் ஹாக்ரிட். அவர்களுக்கு எதிரில் இருந்த கடையை பார்த்து ஹாரி நீ போயி மேடம் மால்கின்ஸ் துணிகடையில் உனக்கு வேண்டிய சீருடையை வாங்கு நான் அந்த ஒழுகும் கொப்பரை கடை வரை சென்று வருகிறேன் என்றார்.

மேடம் மால்கின் ஒரு குள்ளமான, சிரித்த முகம் கொண்ட சூனியகாரியாக இருந்தாள்.

ஹாரியை பார்த்தவுடன் "ஹாக்வாட்ஸ் தானே", என்றாள். "இங்கேயிரு உன்னுடைய அளவுக்கு உள்ள உடையை எடுத்து வருகிறேன்", என்று கூறி கடையின் பின்மூலைக்கு சென்றாள்.

அந்த கடையின் இன்னொரு பக்கம் கூர்மையான நாடியும், வெளிறிய முகமும் உடைய ஒரு பையனின் உடைக்கு ஒரு சூனியக்காரி அளவு எடுத்து கொண்டிருந்தாள்.

"ஹலோ, நீயும் ஹாக்வாட்ஸ் தானே", என்றான் அவன்.

ஆமாம் என்றான் ஹாரி.

என் அப்பா பக்கத்துக்கு கடையில் எனக்கு புத்தகம் வாங்கி கொண்டிருக்கிறார்.என் அம்மா எனக்கான மந்திரகோலை வாங்க சென்றுள்ளனர், என்றான். பின்னர்,"நான் அவர்களை கண்டிப்பாக ஒரு வேகமாக செல்லும் துடைப்பகட்டையை வாங்க வைக்க போகிறேன். ஏன் முதல் வருட மாணவர்கள் தங்கள் சொந்த துடைப்பகட்டையை எடுத்து வர கூடாது என்று சொல்கிறார்களோ, நான் எப்படியாவது என்னுடைய துடைப்பகட்டையை ஹாக்வாட்சுகுள் கொண்டு வரபோகிறேன்", என்றான்.

ஹாரிக்கு இவன் பேசியதை கேட்டதும் டட்லி தான் நினைவுக்கு வந்தான்.

"உனக்கு சொந்தமாக துடைப்பம் இருக்கிறதா", என்றான்.

"இல்லை", என்றான் ஹாரி.

"குயூடிச்[Qudditch] விளையாடிறிக்கியா", என்றான்.

"இல்லை", என்றான் ஹாரி.

"நான் விளையாடி இருக்கிறேன் - நம்முடைய குழுவிற்காக குயூடிச் விளையாட தேர்வாகவிட்டால் பெருத்த அவமானம் என்று என் தந்தை கூறியுள்ளார். நானும் அதற்க்கு ஒத்துக்கொண்டு தான் ஆக வேண்டும்.............. எந்த குழுவில் நீ இருப்பாய் என்று உனக்கு தெரியுமா", என்றான்.

தெரியாது என்றான் ஹாரி.

"ம்ம், யார்க்கும் தெரியாது, அங்கே போன பிறகு தான் தெரியும். ஆனால் எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது, நான் கண்டிப்பாக சிலிதரின்[Slytherin] ஹவுசில் தான் இருப்பேன். என் குடும்பத்தில் உள்ள அனைவரும் அதில் தான் இருந்தார்கள். ஹப்பில்பப்[Hufflebuff] ஹவுசில் ஒருவேளை சேரும் நிலைமை வந்தால் நான் பள்ளியை விட்டே நின்று விடுவேன்", என்றான்.

ஹாரியும் இதை போல எதாவது தனக்கு தெரிந்தையும் கூற வேண்டும் நினைத்தான். ஆனால் அவனுக்கு ஹாக்வாட்சை பத்தி எதுவும் தெரியாதே.

கதவை பார்த்து, "அங்கே பார்த்தாயா, அது ஹாக்ரிட் தானே, அவர் ஒரு வேலைக்காரன் தானே", என்றான்.

"இல்லை, அவர் பாதுகாவலர்", என்றான் ஹாரி.

"ஆமாம் அதை தான் நானும் கூறினேன். பள்ளிக்கு வெளியில் உள்ள காலி நிலத்தில் ஒரு குடிசையில் இருப்பார். எப்பொழுதும் குடித்து கொண்டு, மாயம் செய்கிறேன் என்று கூறி முட்டாள் தனமாக எதாவது செய்து தன் குடிசையை தீப்பிடிக்க வைப்பார்", என்றான்.

"அதெல்லாம் இல்லை, அவர் மிக சிறப்பானவர்", என்றான் ஹாரி.

"ஏன், அவருடன் நீ வந்துள்ளாய். எங்கே உனது பெற்றோர்", என்றான் அவன்.

"அவர்கள் இறந்துவிட்டனர்", என்றான் ஹாரி.

"வருத்தபடுகிறேன், அவர்களும் நம்ம வகையை சேர்ந்தவர்கள் தானே?", என்றான் அவன்.

"அவர்கள் சூனியக்காரி மற்றும் சூனியக்காரன் தான், இதை தானே கேட்கிறாய் ", என்றான் ஹாரி.

"ஆமாம், பிற வகையினரை பள்ளிக்குள் அனுமதிக்க கூடாது என்று நான் நினைக்கிறேன். அவர்களுக்கு மந்திரம் கற்று கொடுக்கவே கூடாது. சிலர் அவர்களுக்கு கடிதம் கிடைக்கும் வரை ஹாக்வாட்சை பற்றி தெரியாமல் இருப்பார்கள். சரி உன்னுடைய முழு பெயர் என்ன?", என்றான் அவன்.

ஹாரி பதில் சொல்லும் முன்,"உன்னுடைய துணி தயாராகி விட்டது", என்றாள் மேடம் மால்கின். ஹாரி துணியை வாங்கி கொண்டான்.

சரி, உன்னை ஹாக்வாட்சில் சந்திக்கிறேன்", என்றான் அவன்.

ஹாரி அமைதியாக ஹாக்ரிட் வாங்கி வந்த ஐஸ் கிரீமை சாப்பிட்டான். என்னவாயிற்று என்று ஹாரி முகத்தை பார்த்து ஹாக்ரிட் கேட்டார்.

"ஒன்றும் இல்லை", என்று பொய் கூறினான். பின்னர் ஒரு கடையில் இருந்த பேனா எழுதும் போதே நிறம் மாறியதை பார்த்து மகிழ்ச்சி அடைந்தான். பின்னர் ஹாக்ரிடிடம், "குயூடிச் என்றால் என்ன?", என்றான் ஹாரி.

"குயூடிச், என்பது சூனியகாரர்களின் விளையாட்டு. இது மக்கில்சின் கால்பந்தாட்டம் போன்றது. இதை துடைப்பத்தின் மேல் அமர்ந்து அதன் மூலம் பறந்து கொண்டே விளையாடுவது. அதில் நான்கு பந்துகள் இருக்கும். அதன் அனைத்து விதிகளையும் கூறுவது கடினம் ஹாரி", என்றார் ஹாக்ரிட். பிறகு, "சிலிதரின் மற்றும் ஹப்பில்பப் என்றால் என்ன?", என்றான்.

அது "ஸ்கூல் ஹவுஸ்கள்". மொத்தம் நான்கு இருக்கின்றன. ஹப்பில்பப் தான் திறமை குறைந்தவர்கள் உள்ள ஹவுஸ் என்று எல்லோரும் கூறுகிறார்கள்", என்றார்.

"நான் கண்டிப்பாக ஹப்பில்பப் தான்", என்றான் ஹாரி விரக்தியாக.

"சிலிதரின் போவதற்கு ஹப்பில்பப்பே சிறந்தது", என்றார் ஹாக்ரிட். "தீய வழியில் சென்ற சூனியக்காரர்கள் மற்றும் சூனியக்காரிகள் கண்டிப்பாக சிலிதரினில் இருந்து தான் வந்து இருப்பார்கள், பெயர்-உச்சரிக்க-கூடாதவனும் அந்த ஹவுஸ் தான்".

"வால்-மன்னிக்கவும் - பெயர்-உச்சரிக்க-கூடாதவன் ஹாக்வாட்சில் இருந்தானா?".

"பல வருடங்களுக்கு முன்னால்", என்றார் ஹாக்ரிட்.

ஹாரிக்கு புத்தகங்களை ஒரு புத்தக கடையில் வாங்கினர். ஹாக்ரிட் ஹாரியை சாபங்கள் மற்றும் எதிர்சாபங்கள் புத்தகத்தை வாங்க விடாமல் வெளியே இழுத்து வந்தார்.

"நான் டட்லியை எப்படி சபிப்பது என்று பார்த்து கொண்டிருந்தேன்", என்றான் ஹாரி.

"அது சரியான யோசனை இல்லை. நீ பள்ளிக்கு வெளியே மக்கில் உலகத்தில் சில தவிர்க்க முடியாத சமயங்கள் தவிர பிற நேரத்தில் மந்திரங்கள் உபயோகிக்க கூடாது", என்றார் ஹாக்ரிட்.

ஹாக்ரிட் அந்த பொருட்களின் பட்டியலை பார்த்து, இன்னும் மந்திரகோல் மட்டும் பாக்கி இருக்கிறது என்றார். "உனக்கு பிறந்த நாள் பரிசும் நான் வாங்க வேண்டும். நான் சென்று உனக்கு ஆந்தை வாங்கி வருகிறேன். அது உனக்கு மிகவும் உதவியாக இருக்கும். கடிதங்களை எடுத்து செல்லவும் உதவும். நீ எதிரில் உள்ள ஆளிவந்தர் கடைக்கு சென்று மந்திரகோல் வாங்கு", என்றார் ஹாக்ரிட்.

அந்த கடை பழமையாகவும், குறுகலாகவும் இருந்தது. அந்த கடையின் கதவில் ஆளிவந்தர்: மிக சிறந்த மந்திரகோல் செய்பவர் 382 BC -யிலிருந்து என்று போட்டிருந்தது.

அதன் உள்ளே ஹாரி சென்றதும், "மதிய வணக்கம்", என்று ஒரு குரல் கேட்டது. ஒரு வயதானவர் ஹாரியின் முன்னால் நின்று கொண்டிருந்தார்.

"ஹலோ", என்றான் ஹாரி.

"உன்னை மிக விரைவில் பார்ப்பேன் என்று தெரியும் ஹாரி பாட்டர். அப்படியே உன் அம்மாவின் கண் உனக்கு. நேற்று தான் உன் அம்மா வந்து அவர்களின் முதல் மந்திரக்கோலை வாங்கியது போலிருக்கிறது", என்றார் ஆளிவந்தர்.

உன் அப்பா மகோனி மரத்தில் செய்த 11 இன்ச் மந்திர கோலையே விரும்பினார். மிக அதிக சக்திக்கும் மற்றும் உருமாற்றத்திற்கும் மிக உதவியாக இருக்கும். உன் அப்பா மிகவும் அதை விரும்பினார். ஆனால் மந்திரகோல் தான் மந்திரவாதியை தேர்ந்தெடுக்கிறது என்பது தான் உண்மை.

ஆளிவந்தர் ஹாரியின் மிக அருகில் வந்து அவன் முன் நெற்றியில் உள்ள தழும்பை உற்று நோக்கினார்.

”என்னை மன்னிக்கவும் ஹாரி, நான் விற்ற ஒரு மந்திரகோல் தான் இதை செய்துள்ளது”, என்றார். “பதிமூன்றரை இன்ச் அடி நீளம், மிக சக்தி வாய்ந்தது, ஆனால் தவறானவனின் கையில்……. ம்ம்ம்….. அந்த மந்திரகோல் என்ன செய்ய போகிறது என்று முன்பே எனக்கு தெரிந்திருந்தால்….”

மிக கவலையில் தன் தலையை ஆட்டி கொண்டு ஹாகிரிட்டை பார்த்தார்.

ரூபியஸ் ஹாக்ரிட், ஓக் மர மந்திரகோல், பதினாறு இன்ச் அல்லவா?, என்றார், ஆளிவந்தர்.

ஆமாம், என்றார், ஹாக்ரிட்.

நல்ல மந்திரகோல், அது. நீ பள்ளியை விட்டு நீக்கப்படும் போது உடைந்து விட்டதல்லவா, என்றார் ஹாக்ரிட்.

ஆமாம், அதன் துண்டுகளை இன்னும் வைத்துள்ளேன், என்றார் ஹாக்ரிட். அதை உபயோகிக்கப்பதில்லையே.. என்றார் ஆளிவந்தர்.

இல்லையே, என்றார் ஹாக்ரிட். அப்போது அவர் தன் குடையை இறுக பிடித்து கொண்டு இருப்பதை ஹாரி கவனித்தான்.

ம்ம்ம்ம், என்று கூறி ஹாக்ரிடை ஊடுருவி பார்த்தார் ஆளிவந்தர். பின்னர், ஹாரியை நோக்கி தன் மிக பெரிய அளவுகோலை எடுத்து, எந்த கையில் மந்திரகோலை உபயோகிப்பாய் என்றார்.

“அது…. வலது கை”, என்றான் ஹாரி.

அந்த கையை நீட்டு ஹாரி, என்றார். அவன் கையை அளவு எடுத்து கொண்டு, ஆளிவந்தரின் மந்திரகோல் ஒவ்வொன்றும் தனிதன்மையான மந்திர தன்மை கொண்ட பொருட்களானது. இதில் ஒற்றை கொம்பு குதிரை கேசம், பீனிக்ஸின் இறகுகள், மற்றும் டிராகனின் இதய நரம்புகள் போன்ற பொருட்களை கொண்டு உருவாக்கியுள்ளேன். எவ்வாறு இரண்டு ஒற்றை கொம்பு குதிரை அல்லது டிராகன் அல்லது பீனிக்ஸ் ஒன்றாக இருக்காதோ அதை போல, ஆளிவந்தரின் இரண்டு மந்திரகோல் ஒன்றாக இருக்காது. நீ பிற மந்திரவாதியின் கோலில் இருந்து உன்னுடைய முழு சக்தியை வெளிப்படுத்த இயலாது, என்றார்.

ஹாரி, பீச்மர மந்திரகோல் மற்றும் டிராகனின் இதய நரம்பு கொண்டது, ஒன்பது இன்ச்… முயற்சி செய்து பார் என்றார். ஹாரி அதை முயற்சிக்கும் முன் அதை பறித்து கொண்டு, மாப்பிள் மர, பீனிக்ஸ் இறகுகள் மந்திரகோல் ஏழு இன்ச், ம்ம் பார் என்றார்.

ஹாரி மந்திரகோலுடன் தன் கையை தூக்கினான். அதையும் ஆளிவந்தர் பறித்து கொண்டார். பிறகு வந்த ஒவ்வொரு மந்திரகோலையும் ஹாரி முயற்சி செய்ய ஆளிவந்தர் பறித்து வைப்பது நடந்து கொண்டு இருந்தது.ஆளிவந்தர் என்ன எதிர்ப்பாக்கிறார் என்று ஹாரியால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஒதுக்கப்பட்ட மந்திரகோல் மலை போல் குவிந்து கொண்டே சென்றது.

மிக சிக்கலான வாடிக்கையாளர், கவலைபடாதீர்கள். மிக பொருத்தமான மந்திரகோலை கண்டுகொள்ளலாம் என்றார். ஆமாம், ஏன் கூடாது------மிக விசித்திர பொருத்தம்----------- புனிதமான மற்றும் பீனிக்ஸ் இறகுகள் மந்திர கோல், பதினோறு இன்ச் நீளம்.



ஹாரி, தன் கையில் அந்த மந்திரகோலை எடுத்தான். அவனை சுற்றி பிரகாசமான ஒளி தோன்றியது. ஆளிவந்தர் மிக சந்தோசத்தில், “ சிறப்பு, மிக சிறப்பு, என்ன ஒரு ஆச்சரியம், “, என்றார்.



”என்ன அது?, என்றான் ஹாரி.

நான் விற்ற ஒவ்வொரு மந்திரகோலும் எனக்கு நினைவு இருக்கிறது. உன்னிடம் உள்ள மந்திரகோலில் பீனிக்ஸ் இறகு உள்ளது. அந்த பீனிக்ஸ் இன்னும் ஒரே ஒரு இறகு தான் தந்தது. அது இந்த தழும்பு உனக்கு தந்தவனின் மந்திரகோலில் உள்ளது, என்றார்.

ஹாரி, உன்னிடம் இருந்து மிக சிறப்பான விடயங்களை எதிர்பார்க்கிறேன். மந்திரகோல் தான் மந்திரவாதியை தேர்ந்தெடுக்கிறது. பெயர்-உச்சரிக்க-கூடாதவன் மிக கொடுமையான விடயங்களை செய்து இருந்தாலும், அவன் செய்தெல்லாம் மிக சிறப்பானவை, என்றார்.



பின்னர், ஹாரியும் ஹாக்ரிடும் அந்த கடையில் இருந்து புறப்பட்டு ரயில் நிலையத்துக்கு வந்தனர்.



எல்லோரும் என்னை மிக புகழ் வாய்ந்தவனாக பார்க்கிறார்கள். ஆனால், என் பெற்றோர்கள் இறந்த இரவில் என்ன நடந்தது என்றே எனக்கு நினைவில்லை என்றான் ஹாரி.

கவலைப்படாதே… ஹாரி… ஹாக்வாட்ஸ் ஆரம்பிக்கும் போது இது அனைத்தும் உனக்கு புரியும்., என்றார் ஹாக்ரிட். பின்னர் ரயிலில் ஏறி அவர்கள் டர்ஸ்லியின் வீட்டிற்கு புறப்பட்டனர்.

”இது தான் டிக்கெட், ஹாரி. செப்டம்பர் முதல் தேதி --- மகாராஜா குறுக்கு சாலை, டிக்கெட்டில் அனைத்து விவரமும் இருக்கிறது, ஹாரி, டர்ஸ்லியிடம் எதவாவது பிரச்சனை என்றால் எனக்கு கடிதம் அனுப்பு. அந்த ஆந்தைக்கு நான் எங்கே இருப்பேன் என்று தெரியும், என்று சொல்லி விட்டு, ரயில் நின்ற அடுத்த நிலையத்தில் இறங்கி ஹாக்ரிட் புறப்பட்டார்.

ஹாக்ரிட் செல்வதை ஹாரி ஜன்னல் வழியாக அவர் தன் கண் பார்வையில் இருந்து மறையும் வரை பார்த்து கொண்டே இருந்தான்.



[தொடரும் – அத்தியாயம் 6 – ஒன்பதே முக்கால் பிளாட்பார்மில் இருந்து பயணம்]

Visitors