Saturday, May 15, 2010

ஹாரி பாட்டர் புத்தகம்1 - ஹாரி பாட்டர் மற்றும் மந்திரகல் [பதிவு 10]

ஹாரி பாட்டர் புத்தகம்1 - ஹாரி பாட்டர் மற்றும் மந்திரகல் [பதிவு 10 ]

அத்தியாயம் 6 – ஒன்பதே முக்கால் பிளாட்பார்மில் இருந்து பயணம்

ஹாரியின் சென்ற மாதம் அவ்வளவு சிறப்பாக இல்லை. டட்லி ஹாரியை பார்த்து பயப்படுகிறான். அவன் சித்தியும் சித்தப்பாவும் அவன் இல்லாதது போல் நடந்து கொள்கிறார்கள்.

அதனால், ஹாரி தன் அறையிலேயே தன் ஆந்தையுடன் இருந்தான். அந்த ஆந்தைக்கு ஹெட்விக் என பெயர் சூட்டினான். அவன் இரவெல்லாம் கண் விழித்து படித்து கொண்டிருப்பான். ஹெட்விக் ஜன்னல் வழியாக தன் இஷ்டம் போல் சென்று வந்தது. நல்ல வேளை அவன் சித்தி இப்போதெல்லாம் அவன் அறைக்கு வருவது கிடையாது. இல்லையென்றால் ஹெட்விக் அவ்வப்போது கொண்டு வரும் இறந்த எலிகளால் நிறைய பிரச்சனை வந்து இருக்கும்.

ஆகஸ்டின் கடைசி நாளன்று, அவன் சித்தப்பாவிடம் நான் நாளைக்கு ஹாக்வாட்ஸ் பள்ளிக்கு செல்ல கிங் கிராஸ் ரயில் நிலையத்திற்கு செல்ல வேண்டும். என்னை அங்கே உங்க காரில் இறக்கி விட முடியுமா? என்று ஹாரி கேட்டான்.

சரி என்றார். பின்னர், மந்திர பள்ளிக்கு செல்ல ரயிலா? பறக்கும் கம்பளம் இல்லையா? என்று கேலியாக கேட்டார்.

ஹாரி எதுவும் பதில் சொல்லவில்லை.

சரி, உன் பள்ளி எங்கே இருக்கிறது? என்றார் அவன் சித்தப்பா.

”எனக்கு தெரியாது”, என்று ஹாரி கூறி, ஹாக்ரிட் கொடுத்த டிக்கெட்டை முதல் முறையாக பார்த்தான்.

”நான் சரியாக பதினொரு மணிக்கு ஓன்பதே முக்கால் ப்ளாட்பாரத்திலிருந்து ரயில் ஏற வேண்டும் என்று போட்டு இருக்கிறது”, என்றான்.

எந்த ப்ளாட்பாரம்?

ஓன்பதே முக்கால் ப்ளாட்பாரம்.

முட்டாள் மாதிரி பேசாதே…. ஓன்பதே முக்கால் ப்ளாட்பாரம் என்று எதுவும் கிடையாது, என்றார் அவன் சித்த்ப்பா.

ஆனால் என் டிக்கெட்டில் போட்டு உள்ளதே, என்றான் ஹாரி.

நாளைக்கு அங்கு போகும் போது உனக்கே தெரியும். எப்படியும் நாங்க நாளைக்கு லண்டன் போகும் போது உன்னை அங்கே விட்டுட்டு போறோம், என்றார்.

அடுத்த நாள், அவர்கள் ரயில் நிலையத்திற்கு 10.30 க்கு வந்து சேர்ந்தனர்.

அங்கே பார்த்தியா…. ப்ளாட்பாரம் 9 மற்றும் 10. உன்னோட ப்ளாட்பாரம் இதுக்கு நடுவில எங்கயாவது இருக்கும் போயி தேடு… என்று கூறி விட்டு அவர்கள் கிளம்பி சென்று விட்டனர்.

ஆனால், 9வது ப்ளாட்பாரம்க்கும் 10வது ப்ளாட்பாரம்க்கும் இடையில் ஒன்றுமே இல்லை. எல்லோரும் அவனையும் அவன் ஆந்தையும் பார்த்து கொண்டு சென்றனர்.

ஹாரி அங்கு நின்ற ரயில் காவலரை பார்த்து இங்கு ஓன்பதே முக்கால் ப்ளாட்பாரம் எங்குள்ளது, என்று கேட்க நினைத்தான். ஆனால் தன்னை பைத்தியம் என்று அவர் நினைப்பாறோ என்று எண்ணினான்.

கண்டிப்பாக ஹாக்ரிட் தன்னிடம் எப்படி 9 மற்றும் 10 ப்ளாட்பாரம் நடுவில் எப்படி நுழைவது என்று சொல்லாமல் சென்று விட்டார். மணி வேற 11 நெருங்கி கொண்டு இருந்தது.

1 comment:

Visitors