Tuesday, February 2, 2010

ஹாரி பாட்டர் புத்தகம்1 - ஹாரி பாட்டர் மற்றும் மந்திரகல் [பதிவு 3]

ஹாரி பாட்டர் புத்தகம்1 - ஹாரி பாட்டர் மற்றும் மந்திரகல் [பதிவு 3]

அத்தியாயம்: 3 - மந்திர கடிதம்

அந்த பாம்பு கண்ணாடி கூண்டை விட்டு வெளியே வந்தது, ஹாரிக்கு அதிகபட்ச தண்டனையை கொடுத்தது. அவன் அந்த ஸ்டோர் ரூமை விட்டு வெளியே வரும் போது வெயில்கால விடுமுறை ஆரம்பம் ஆகி இருந்தது. அப்போது டட்லி தன்னுடைய புது வீடியோ காமெராவையும் மற்றும் புது ரிமோட் ஏறோப்ளனையும் உடைத்து இருந்தான்.

ஹாரி பள்ளி முடிந்ததற்கு மிகவும் சந்தோசபட்டான். ஆனால் அவனால் டட்லி கேங்கிடம் இருந்து தப்பிக முடியவில்லை, அவர்கள் தினமும் டட்லி வீட்டிற்கு வந்தனர். பியர்ஸ்,டென்னிஸ், மால்கம், மற்றும் கார்டன் அவர்கள் மிக பெரிதாகவும், முட்டாள்களாகவும் இருந்தனர். ஆனால் அவர்களை விட பெரிய முட்டாளாகவும், மிக பெரிய உடல் கொண்டவனாகவும் டட்லி இருந்தான். அவர்களுடைய சிறந்த பொழுதுபோக்கு ஹாரியை துரத்தி தாக்குவது.

இதனால் தான் ஹாரி எப்போதடா இந்த விடுமுறை முடியும் என்று ஏங்கலானான். செப்டம்பர் வரும் போது ஹாரியும், டட்லியும் தனி தனி பள்ளிக்கு செல்ல வேண்டும். டட்லி அவன் தந்தை படித்த தனியார் பள்ளியில் சேர வேண்டும். ஹாரி அரசாங்க பள்ளியில் சேர வேண்டும். அப்பொழுது டட்லியின் தொல்லை இருக்காது என்று ஹாரி சந்தோஷபட்டான். ஆனால் டட்லிக்கு, ஹாரி அரசாங்க பள்ளிக்கு செல்வது அவனுக்கு வேடிக்கையாக இருந்தது.

ஜூலையில் ஒரு நாள் ஹாரியை வீட்டில் விட்விட்டு டட்லிக்கு புது சீருடை வாங்க லண்டனுக்கு சென்றனர். அன்று மாலை, அந்த சீருடை அணிந்து டட்லி நடந்து வரவுதை பார்த்தால் ஹாரிக்கு சிரிப்பாக இருந்தது. டர்ஸ்லி டட்லியை பார்த்து விட்டு தன் மனைவிடம் இது தான் வாழ்வின் பெருமையான தருணம் என்றார்.

அதுட நாள் காலையில் ஹாரி கிச்சனுக்கு வந்த போது ஒரு துர்நாற்றம் வந்தது. அந்த நாற்றம் அங்கு இருந்த பெரிய அண்டாவில் இருந்து வந்தது. அதில் ஏதோ அழுக்கு துணி ஒன்று மிதந்து கொண்டு இருந்தது.

"இது என்ன" என்று தன் சித்தியை கேட்டான் ஹாரி. இது உன்னுடைய பள்ளி சீருடை என்றாள்.

ஹாரி அந்த பாத்திரத்தை மீண்டும் பார்த்தான்.

ஓ... ஆனால் அது ஈரமாக இருக்க வேண்டும் என்று எனக்கு தெரியாது என்றான். "முட்டாள் மாதிரி பேசாதே.." என்றாள் அவன் சித்தி. உனக்கு டட்லியின் பழைய துணி ஒன்றை சாயமேற்றி கொண்டு இருக்கிறேன். நான் இதை முடிக்கும் போது இது மற்றவற்களுடைய துணி போல இருக்கும் என்றாள்.

ஆனால் அதை அவனால் முழுமையாக நம்ப முடியவில்லை. அவன் அங்குள்ள டேபிளில் உக்கார்ந்து, தான் முதல் நாள், கல்சுவரு[StoneWall] பொது உயர்நிலை பள்ளியில், இந்த உடையுடன் எவ்வாறு இருப்பேன் என்பதை முடிந்த அளவு நினைத்து பார்க்காமல் இருக்க முயற்சி செய்தான். டட்லியின் உடை அவனுக்கு கண்டிப்பாக ஏதோ யானை தோலை போர்த்தியது போல தான் இருக்கும்.

டட்லியும், டர்ஸ்லியும் அந்த நாற்றத்திற்கு இடையில் முகம் சுளித்து கொண்டு கிச்சனுக்கு வந்தனர். டர்ஸ்லி அந்த நாள் செய்தித்தாளை எடுத்து படிக்க ஆரம்பித்தார்.

அப்போது கடிதம் போட கதவில் இருந்த திறப்பின் சத்தமும் மற்றும் கடிதங்கள் விழும் சத்தமும் அவர்களுக்கு கேட்டது.

அப்போது, டர்ஸ்லி, " டட்லி, கடிதங்களை எடுத்து வா..." என்றார்.

"ஹாரியை எடுத்து வர சொல்லுங்கள்", என்றான் டட்லி.

"ஹாரி, கடிதங்களை எடுத்து வா..." என்றார்.

ஹாரி கடிதங்களை எடுக்க கதவுற்கே சென்றபோது, அங்கு மூன்று கடிதங்கள் சிதறி கிடந்தது. ஒன்று அவன் சித்தப்பாவின் தங்கை மார்கியிடம் இருந்து வந்திருந்தது. இன்னொன்று பழுப்பு நிற கவர் ஒன்று இருந்தது.அது ஏதோ பில் போல இருந்தது. மூன்றாவது, ஹாரிக்கு ஒரு கடிதம் வந்திருந்தது.

ஹாரி அந்த கடிதத்தை எடுத்து பார்த்தான். அவன் மனம் படபடத்தது. அவன் முழு வாழ்கையில் யாரும் அவனுக்கு கடிதம் எழுதியது கிடையாது. யாராக இருக்கும்?. அவனுக்கு நண்பர்கள் என்று யாரும் கிடையாது. வேறு எந்த உறவினர்களும் கிடையாது. ஆனாலும், இந்த கடிதம் முகவரி மிக சரியாய் இட்டு வந்துள்ளது இதில் தவறு நடந்து இருக்க வாய்ப்பு இல்லை.

Mr. H Potter
மாடிபடிக்கு அடியில் உள்ள கப்போர்ட்
4 , Privert Drive தெரு...
சர்ரே
[Surrey] [லண்டனில் உள்ள ஒரு ஊர்]

அந்த கடிதம் ரொம்ப தடிமனாகவும் மற்றும் அதிக கனமாகவும் இருந்தது. அந்த கடிதம் மஞ்சள் நிற கவரிலும், அதில் உள்ள எழுத்துக்கள் இளம்பச்சை நிறத்தில் எழுதபட்டு இருந்தது. அதில் எந்த ஒரு ஸ்டாம்பும் இல்லை.

அந்த கடிதத்தை திருப்பிய போது ஹாரியின் கை நடுங்கியது. அதில் ஊதா நிற மெழுகு சீல் இருந்தது. அதில் ஆயுதங்கள், சிங்கம், முள்லெலி, மற்றும் பாம்பு படங்களின் அச்சு அந்த சீலின் நடுவில் உள்ள H என்ற எழுத்தை சுற்றி இருந்தது.

சீக்கிரம் வா என்று டர்ஸ்லி சத்தம் போட்டார். அங்கு என்ன கடிதத்தில வெடிகுண்டு இருக்கணு சோதனையா பண்ணிட்டு இருக்க என்று சொல்லி தனுடைய நகைசுவைக்கு தான் மட்டுமே சிரித்தார்.

பில்லை பார்த்து எடுத்து வைத்து விட்டு, தன் தங்கையின் கடிதத்தை பார்த்தார். அதற்குள் டட்லி, ஹாரிக்கு ஒரு கடிதம் வந்து உள்ளது என்று சொல்லி, அவன் கடிதத்தை பிடுங்கி கொண்டான்.

"அந்த கடிதம் என்னுடையது", என்றான் ஹாரி.

"உனக்கு யார் கடிதம் எழுதுவார்கள்", என்று கூறினார் அவனது சித்தப்பா. அவரது முகம் அந்த கடிதத்தை பார்த்ததும் மிக கோரமாக மாறியது.

"பெட்டுனியா", என்று தன் மனைவின் பெயரை கத்தி கூப்பிட்டார்.

டட்லி அந்த கடிதத்தை பிடுங்க முயற்சி செய்தான். ஆனால் அவன் சித்தப்பா வெர்னான் டட்லி கைக்கு அந்த கடிதம் எட்டாமல் இருக்குமாறு பார்த்து கொண்டார். அந்த கடிதத்தின் முதல் வரியை அந்த கடிதத்தை வாங்கிய மாத்திரத்தில் படித்த அவள் மயங்கி விழுமாறு ஆகி விட்டாள்.

"வெர்னான்!......... அட கடவுளே என்ன இது", என்றாள் பெட்டுனியா.

அவர்கள் தங்களை தாங்கள் ஒருமுறை பார்த்து கொண்டார்கள். டட்லி இவ்வாறு தான் ஒதுக்கபட்டு இதுவரை அறிந்து கொள்ளவில்லை.

"நான் அந்த கடிதத்தை பார்க்க வேண்டும்", என்றான் டட்லி. ஹாரி அது என்னுடையது என்றான் அவன்.

அந்த கடிதத்தை அந்த உறையுனுள் வைத்து கொண்டு, "நீங்கள் இருவரும் உங்கள் அறைக்கு செல்லுங்கள்", என்றார் வெர்னான்.

எனக்கு என் கடிதம் வேண்டும் என்றான் ஹாரி.

"நானும் அக்கடிதத்தை பார்க்க வேண்டும்", என்றான் டட்லி.

"போகிறிர்களா இல்லையா", என்றார் வெர்னான். அவ்வாறு சொல்லி விட்டு ஹாரியையும், டட்லியையும் சட்டையை பிடித்து கிச்சன் கதவுக்கு வெளியே விட்டுவிட்டு வெர்னான் திரும்பி வந்தார். டட்லி தன் காதை சாவி துவாரம் வழியாக வைத்து ஒட்டு கேற்கலானான். ஹாரி கதவுக்கும் தரைக்கும் இடையில் உள்ள இடைவெளியில் ஏதாவது கேகிறதா என்று முயற்சி செய்து கொண்டு இருந்தான்.

"வெர்னான், அந்த கடிதத்தின் முகவரியை பாருங்கள். அவர்களுக்கு ஹாரி எங்கு உறங்குகிறான் என்று தெரிந்து உள்ளது. அவர்கள் நம்மை ஒற்று பார்த்து கொண்டு இருக்கிறார்களா?", என்று பெட்டுனியா கேட்டாள்.

"ஒற்று பார்த்து கொண்டு நம்மை பின் தொடர்ந்து கொண்டு இருப்பார்களோ", என்று முணுமுணுத்தார் வெர்னான்.

1 comment:

Visitors