Tuesday, February 9, 2010

ஹாரி பாட்டர் புத்தகம்1 - ஹாரி பாட்டர் மற்றும் மந்திரகல் [பதிவு 8 ]

ஹாரி பாட்டர் புத்தகம்1 - ஹாரி பாட்டர் மற்றும் மந்திரகல் [பதிவு 8 ]

அத்தியாயம் 5 : கோண வழிபாதை[Diagon Alley] [தொடர்ச்சி]

ஹாக்ரிட் தின தகவல் நாளிதழை படித்து கொண்டு இருந்தார். ஹாரியின் மனத்தில் ஆயிரமாயிரம் கேள்விகள் இருந்தது. அவர் நாளிதழை படிக்கும் வரை அமைதியாக இருக்க முயற்ச்சி செய்து கொண்டிருந்தான்.

“வழக்கம் போல் சூனியக்காரர்களின் அமைச்சரவை எல்லாவற்றிலும் பிரச்சனை பண்ணி கொண்டிருக்கிறார்கள்”, என்று நாளிதழின் பக்கங்களை திருப்பி கொண்டு ஹாக்ரிட் முணுமுணுத்தார்.

“சூனியக்காரர்களுக்கு அமைச்சரவை எல்லாம் இருக்கிறதா?, என்று ஹாரி கேட்டான்.

“ஆமாம், அவர்கள் டம்பிள்டோரை அமைச்சராக்க முயற்ச்சி செய்தனர். ஆனால் அவர் ஹாக்வார்ட்ஷை விட்டு போக விரும்பாததால் அந்த வயதான் கார்னெலியஷ் பட்ச் அமைச்சரானார். சரியான முட்டாள்… எப்பொதும் எதவாது செய்து விட்டு தினமும் டம்பிள்டோருக்கு ஆந்தை அனுப்பி அறிவுரை கேட்டு கொண்டிருப்பார்.”, என்றார் ஹாக்ரிட்.

“ஆனால் சூனியக்காரர்களின் அமைச்சரவையின் பணி என்ன?”

“அவர்களின் முக்கிய பணி இந்த மாயலோகத்தை சாதாரண மக்களின் பார்வையில் இருந்து மறைப்பது தான்.”

“எதற்க்காக?”

“எதற்க்காகவா? எல்லோருக்கும் தங்களது பிரச்சனைகளை தீர்ப்பதற்கு மந்திர தீர்வு தேவைபடுக்கிறது. நாம் தனியாக இருப்பதே நல்லது.

அப்போது படகு துறைமுகத்தின் சுவரை தட்டி கொண்டு நின்றது, ஹாக்ரிட் செய்திதாளை சுருட்டி வைத்து கொண்டு தெருவில் இறங்கி நடக்க ஆரம்பித்தார்.

தெருவில் செல்வோரெல்லாம் ஹாக்ரிடை விடாமல் பார்த்து கொண்டே சென்றனர். ஹாக்ரிட் அவர்களை போல் இரு மடங்கு உயரம் இருந்தார். அது மட்டும் இல்லாமல் தெருவிலுள்ள சாதாரண பொருட்களை பார்த்து உரத்த குரலில்,“பார்த்தாயா ஹாரி, மக்கிள்ஸின் [மேஜிக் தெரியாதவர்கள்] கண்டுபிடிப்பை”, என்று கூறி கொண்டிருந்தார்.

“ஹாக்ரிட், க்ரிங்காட்ஸில் டிராகன் நிஜமாகவே உள்ளதா?”, என்று கேட்டான் ஹாரி.

“அவ்வாறு தான் எல்லாரும் கூறுகிறார்கள், சிறு வயதில் இருந்தே ஒரு டிராகன் வளர்க்க வேண்டும் என்று எனக்கு ஆசை”, என்றார் ஹாக்ரிட்.

அவர்கள் புகைவண்டி நிலையத்திற்கு வந்து சேர்ந்தனர். லண்டனுக்கு இன்னும் ஐந்து நிமிடத்தில் புறப்பட ரயில் ஒன்று தயாராக இருந்தது. ஹாக்ரிட் மக்கிள்ஸ் பணத்தை ஹாரியிடம் கொடுத்து டிக்கெட் வாங்கி வர வைத்தார்.

ஹாக்ரிட் இரு சீட்டில் ஒன்றாக அமர்ந்தார். அவர் அமர்ந்திருந்ததை பார்ப்பதற்க்கு ஒரு சர்க்கஸ் கூடாரம் போல் இருந்தது.

ஹாரி, கடிதத்தை வைத்துள்ளாய் அல்லவா?, அதில் உனக்கு என்னென்ன வாங்க வேண்டும் என்று போட்டுள்ளது”, என்றார் ஹாக்ரிட்.

ஹாரி கடித்தை திறந்தான். அதில்,

-----------------------------------------------------------------------------------------------------------------------------------
ஹாக்வாட்ஸ் – சூனியக்காரர் மற்றும் சூனியக்காரிகளுக்கான் பள்ளி சீருடை.

முதல் வருட மாணவர்களுக்கு தேவையானவை:

1: மூன்று முழு நீள மேலங்கி [கருப்பு}

2: ஒரு கூர் முனை கொண்ட தொப்பி [கருப்பு] பகலில் போடுவதற்கு

3: ஒரு ஜோடி பாதுகாப்பு கையுறை [டிராகன் தோலினாலானது அல்லது அதை போல்]

4: ஒரு குளிர்கால உடை [கருப்பு, வெள்ளி நிற கச்சை]

கவனிக்க: ஒவ்வொருவரின் உடையிலும் அவர்களின் பெயர் இருக்க வேண்டும்.

பாட புத்தகங்கள்:

எல்ல மாணவர்களும் பின்வரும் புத்தகங்களை வைத்திருக்க வேண்டும்.

1: மந்திரங்களின் பொதுவான புத்தகம் - மிராண்டா கோசாக்

2: மேஜிக்கின் வரலாறு – பாத்தில்லா பேக்சாட்

2: மந்திர கோட்பாடு – அடல்பெர்ட் வாப்லிங்

3: உருமாற்றம் – புதிதாக தொடங்குபவர்களின் வழிகாட்டி - எம்டிக் ஸ்விட்ச்

4: ஒராயிரம் மந்திர மூலிகைகள் – பிலிடியா ஸ்போர்

5: மந்திர பானங்கள் மற்றும் அதன் மாற்றங்கள் – அர்சீனியஸ் ஜிக்கர்

6: அருமையான மிருகங்கள் மற்றும் எங்கு அதை காண முடியும் – நியுட் சாமண்டர்

7: இருள் சக்திகள்: தற்காப்புக்கான வழிகாட்டி – குயிந்தின் ட்ரிம்பிள்

பிற பொருட்கள்:

1: மந்திரகோல் [அளவு 2]

2: கண்ணாடி அல்லது மந்திர படிகம்

3: தொலைநோக்கி

4: பித்தளை அளவுகோல்

மாணவர்கள் அவர்களுடன் ஆந்தை அல்லது பூனை அல்லது தேரை கொண்டு வரலாம்.

முதல் வருட மாணவர்கள் அவர்களின் சொந்த துடைப்பகட்டை எடுத்து வர அனுமதியில்லை என்பதை பெற்றோர்களுக்கு நினைவுபடுத்தி கொள்கிறோம்.

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இதை எல்லாம் லண்டனில் வாங்க முடியுமா என்று ஹாரி கேட்டான்.

“எங்கே செல்ல வேண்டும் என்று உனக்கு தெரிந்திருந்தால் கண்டிப்பாக வாங்க முடியும்”, என்றார் ஹாக்ரிட்.

ஹாக்ரிட் லண்டன் தெருவில் நடந்து கொண்டிருந்தார். ஹாரியும் அவரை பின்பற்றி நடந்து கொண்டிருந்தான். அங்கு பற்பல கடைகள் இருந்தது. ஆனால் எந்த ஒரு கடையும் மந்திர புத்தகங்களோ அல்லது மந்திரகோல் விற்கும் கடை போல் இல்லை.

“இது தான்”, என்றார் ஹாக்ரிட். “ஒழுகும் கொப்பரை, இது மிகவும் பிரசித்தியான இடம்”.

அது ஒரு சிறிய மதுகடை. ஹாக்ரிட் காட்டியிருக்காவிட்டால் ஹாரி அந்த கடையை கவனித்து கூட இருக்கமாட்டான். அங்கு தெருவில் சென்றவர்கள் எல்லாம் அந்த கடையை கவனிக்க கூட இல்லை. அவனும் ஹாக்ரிட் மட்டும் தான் அந்த பார்க்க முடிகிறதா என்று கூட அவன் எண்ணினான்.

அந்த இடதிற்க்குள் சென்றனர். அந்த இடம் இருட்டாக இருந்தது. அதில் சில வயதான பெண்மணிகள் உக்கார்ந்து ஆம்பல் நிற திராட்சைரசத்தை குடித்து கொண்டு இருந்தனர். ஒரு குள்ள மனிதன் கடையில் வேலை செய்பவரிடம் பேசி கொண்டிருந்தார். அவர்கள் அனைவரும் ஹாக்ரிடை அறிந்திருந்தனர். அவர்கள் ஹாக்ரிடை பார்த்து கையசைத்தனர். கடையில் வேலை செய்பவர் ஒரு கையில் மது கோப்பையை கொண்டு வந்து “வழக்கம் போல தானே ஹாக்ரிட்” என்றார்.

“இல்லை, டாம், நான் இங்கு ஹாக்வாட்ஸ் வேலையாக வந்துள்ளேன்”, என்றார் ஹாக்ரிட்.

“கடவுளே, இது…… இவன் தானே”, என்றார் பாரில் வேலை செய்பவர் ஹாரியை பார்த்து.

“ஒழுகும் கொப்பரை மதுக்கடை முழுவதும் தீடிரென்று முழு அமைதியானது”.

ஹாரி பாட்டர் நீங்கள் இங்கே வந்தது என்ன ஒரு கெளரவம்., என்றார் அவர்.

எல்லோரும், ஹாரி பாட்டர் உங்களை வரவேற்கிறோம் என்றனர்.

எல்லோரும் ஹாரி பாட்ட்ருக்கு கை கொடுக்க முயற்சி செய்தனர். ஹாரிக்கு என்ன செய்வது என்றே புரியவில்லை.

ஒரு வயதானவர் வந்து கை கொடுத்து, “மிக சந்தோஷம் பாட்டர், என் பெயர் டிகிள், டட்லஸ் டிகிள்”, என்றார்.

“எனக்கு உங்களை நினைவு இருக்கிறது, நீங்கள் தானே ஒரு நாள் கடைக்கு முன்னால் எனக்கு தலை வணங்கியது”, என்றான் ஹாரி. “அவர் என்னை நினைவு வைத்துள்ளார்” என்று பெருமையாக கூறிகொண்டு சென்றார். .

ஒரு இளைஞன் மிக நடுக்கமாக அங்கு அமர்திருந்தான். அவனது ஒரு கண் சிமிட்டி கொண்டேயிருந்தது.

“பேராசிரியர் கொரில்”, என்றார் ஹாக்ரிட். “ஹாரி, பேராசிரியர் கொரில், ஹாக்வாட்ஸில் உன்னுடைய ஆசிரியர்களில் ஒருவர்”, என்று அறிமுகபடுத்தினார்.

“ப-ப-பாட்ட்ர்”, என்று திக்கினார் கொரில். “உ-உ-உன்னை சந்தித்ததில் எனக்கு அள்வில்லாத ம-ம-மகிழ்ச்சி”, என்றார்.

“எந்த மாதிரியான மந்திரங்கள் நீங்கள் ஹாக்வாட்சில் கற்று கொடுக்கிறீர்கள்”, என்று ஹாரி கேட்டான்.

“இருள் கலைகளுக்கு எதிரான தற்காப்பு”.


“போக வேண்டும் ஹாரி, கிளம்பு” என்றார் ஹாக்ரிட்

ஹாக்ரிட் அந்த கடையில் உள்ள ஒரு சுவருக்கு அருகில் நின்று தன் குடையால் அந்த சுவரில் உள்ள செங்கலை எண்ணி கொண்டிருந்தார்.

“மூன்றாவதுக்கு மேல் இரண்டாவது” என்று முணுமுணுத்தார் ஹாக்ரிட். “ ஹாரி பின்னாடி தள்ளி நில்”, என்றார்.

அவர் தன்னுடைய குடையால் அந்த சுவரை மூன்று முறை தட்டினார். அந்த செங்கல் எல்லாம் பிறிந்து அந்த சுவருக்கு இடையில் ஒரு வழி தோன்றியது. அந்த வழியில் பார்த்தால் மக்கள் நடமாடுவது தெரிந்தது.

“கோண வழிபாதைக்கு உன்னை வரவேற்கிறேன், ஹாரி”, என்றார் ஹாக்ரிட்.

[தொடரும் – அத்தியாயம் 5]

4 comments:

  1. Really you made us waiting for next one. We are grateful to you for making to read the story in Tamil. Now only I can understand why people in world waited crazily for Rowling's books... Once again thankyou my friend!

    ReplyDelete
  2. முருகன் பழனிச்சாமி... என்னங்க ஆச்சு...மீதிப்பகுதி ஏங்க இன்னும் போடல...

    ஆவலோட எதிர்பார்த்து காத்திருக்கேங்க சார்...

    தொடருங்க ப்ளீஸ்!

    ReplyDelete
  3. really super..................................................... mithi story eppa sikkirapa.....

    ReplyDelete

Visitors