Thursday, February 4, 2010

ஹாரி பாட்டர் புத்தகம்1 - ஹாரி பாட்டர் மற்றும் மந்திரகல் [பதிவு 4]

ஹாரி பாட்டர் புத்தகம்1 - ஹாரி பாட்டர் மற்றும் மந்திரகல் [பதிவு 4]

அத்தியாயம்: 3 - மந்திர கடிதம் [தொடர்ச்சி]


இப்போ என்ன செய்வது வெர்னான். நாம் அவர்களுக்கு பதில் எழுதலாமா? நமக்கு இது தேவையில்லை, என்று கேட்டால் பெட்டுனியா.

வேண்டாம், இக்கடிதத்தை நாம் பொருட்படுத்தாமல் விட்டுவிடுவோம். அவர்கள் பதில் கிடைக்காவிட்டால் திரும்ப கடிதம் அனுப்ப மாட்டார்கள், என்றார் வெர்னான்.

அன்று மாலை, வெர்னான் தன் பணி முடிந்து வீட்டிற்கு வந்து, ஹாரியின் கப்போர்டிற்கு சென்றார்.

ஹாரி தன் சித்தப்பாவை பார்த்து, "எங்கே எனது கடிதம்? யாரு எனக்கு கடிதம் எழுதியது?". என்று கேட்டான்.

"யாருமில்லை, தப்பா உன்னுடைய பெயரை போட்டு உள்ளார்கள்", என்றார் வெர்னான்.

"அதில் ஒன்னும் தப்பா போடலை, அதில் என்னுடைய கப்போர்ட் போட்டு இருந்தார்கள்", என்றான் ஹாரி.

"மூச், சத்தம் போடதே!", என்று கத்தினார் வெர்னான். பின் தன் முகத்தை சிரித்தது போல மாற்றி கொண்டு, "ஹாரி நீ இனிமேல் இந்த கப்போர்டில் தங்க வேண்டாம். டட்லியின் இரண்டாவது படுக்கை அறையில் நீ தங்கி கொள்ளலாம்", என்றார்.

ஏன்?, என்றான் ஹாரி.

"கேள்வி கேக்காதே உன்னுடைய பொருட்களை எடுத்து கொண்டு மேலே போ", என்றார் வெர்னான்.

அந்த வீட்டில் நான்கு படுக்கை அறைகள் உள்ளது. ஒன்று வெர்னான் மற்றும் பெட்டுனியாவினுடையது, இரண்டாவது விருந்தினர் அறை, மூன்றாவது டட்லியினுடையது, நான்காவது டட்லி தன் அறையில் வைக்க முடியாத விளையாட்டு பொருட்களை அதில் வைத்து உள்ளான். ஆனால் அந்த நான்காவது அறையில் உள்ள விளையாட்டு பொருட்கள் பெரும்பாலும் உடைந்த பொருட்கள் தான் இருந்தது. அந்த மாடியில் உள்ள அறை தான் ஹாரிக்கு ஒதுக்கப்பட்டு இருந்தது.

அப்போது கீழே, டட்லி தன் அம்மாவுடம் சண்டை போட்டு கொண்டு இருந்தான். "அவன் அந்த அறையில் இருப்பது எனக்கு பிடிக்க வில்லை, எனக்கு அந்த அறை வேண்டும்", என்றான்.

ஹாரி அந்த அறையில் படுத்தான். நேற்று இந்த அறை கிடைத்து இருந்தால் அவன் மகிழ்ச்சியோடு ஏற்று கொண்டு இருப்பான். ஆனால் இன்று அவனுக்கு அந்த கடிதம் கிடைத்தால் போதும் இந்த அறையே அவனுக்கு தேவையில்லை என்ற நிலைமையில் இருந்தான்.

அடுத்த நாள், காலை உணவின் போது மீண்டும் கடிதம் வரும் சத்தம் கேட்டது. வெர்னான் சென்று கடிதத்தை எடுத்தார். இன்னொரு கடிதம் வந்துள்ளது, என்று அலறினார் வெர்னான். அதில் "Mr.H Potter, மிக சிறிய படுக்கை அறை, 4 Privet Drive தெரு ---" என்று இருந்தது.

ஹாரியும், டட்லியும் அந்த கடிதத்தை பறிக்க ஓடி வந்தார்கள். ஆனால் வெர்னான், அவர்கள் கைக்கு அந்த கடிதம் சிக்காமல் பார்த்து கொண்டார்.

அவர் ஹாரியை பார்த்து, "நீ உன்னுடைய கப்போர்டிர்க்கு போ, அதாவது உன்னுடைய அறைக்கு போ", என்றார். "டட்லி நீயும் போ", என்றார்.

ஹாரி தன் அறைக்கு சென்றான். தான் முதல் கடிதத்தை பெற வில்லை என்றும் தான் வேறு அறைக்கு போனதும் யாருகோ தெரிந்து கொண்டு தான் இந்த கடிதத்தை அனுப்பி உள்ளனர். அப்படியென்றால் அவர்கள் மறுபடியும் கடிதம் அனுப்புவார்கள். அடுத்த தடவை கண்டிப்பாக தவற கூடாது. இந்த முறை அவனிடம் ஒரு திட்டம் இருந்தது.

அடுத்த நாள் காலை 6 மணிக்கு அலாரம் அடித்தது. ஹாரி அதை நிறுத்தி விட்டு, சத்தம் போடாமல் மாடியில் இருந்து கீழே வந்தான்.

ஹாரிக்கு அதிர்ச்சியாக இருந்தது அவன் அங்கு கண்ட காட்சி. அங்கு வெர்னான் தன் படுக்கையை போட்டு படுத்து கொண்டு இருந்தார். ஹாரியிடம் அந்த கடிதம் கிடைக்க கூடாது என்பதில் மிக தீவிரமாக இருந்தார். அவர் ஹாரியை பார்த்து "நீ போய் டீ தயார் பண்ணு", என்றார் வெர்னான். அவன் திரும்பி வருவததிற்குள் கடிதம் வந்து இருந்தது.

ஹாரி பச்சை மையில் எழுதப்பட்ட மூன்று கடிதங்களை பார்த்தான்.

எனக்கு வேண்டும் என்று ஹாரி சொல்லுவர்துக்குள் வெர்னான் அந்த கடிதங்களை தூள்தூளாக கிழித்தார். அன்று அவர் வேலைக்கு செல்லவில்லை. அவர் தன் வீட்டு கதவில் உள்ள கடிதம் வரும் துளையை ஒரு பலகை வைத்து அடித்தார்.

அதை தன் மனைவி பெட்டுனியாவிடம் காட்டி பார்த்தாயா... அவர்களினால் கடிதத்தை நம்மிடம் சேர்க்க முடியாவிட்டால் அவர்கள் நிறுத்தி கொள்வார்கள் என்றார். ஆனால் பெட்டுனியாவிற்கு அதில் நம்பிக்கை இல்லை.

அடுத்த நாள் வெள்ளி கிழமை பன்னிரண்டு கடிதங்கள் வந்து இருந்தது.அது கடித துவாரத்தின் மூலம் வர முடியாதால் கடிவின் அடியில் திணிக்கப்பட்டு உள்ளே வந்திருந்தது. அந்த கடிதத்தை தீயில் இட்டு கொளுத்தினார்.

அன்றும் வெர்னான் வேலைக்கு செல்லவில்லை. இன்று தன் வீட்டில் உள்ள அத்தனை துவாரங்களையும் அடைத்தார்.

சனிக்கிழமையில், அவர்கலுக்கு கடையில் இருந்து வந்த முட்டையின் இடையே 24 கடிதங்கள் இருந்ததன. அந்த கடிதங்களை மீண்டும் படிக்காமல் அழித்தனர்.

"இந்த உலகத்தில் யார் உன்னிடம் இப்படி தீவிரமாக பேச துடித்து கொண்டு இருக்கிறார்கள்", என்று ஆச்சரயத்தில் ஹாரியை பார்த்து வெர்னான் கேட்டார்.

ஞாயிற்று கிழமை காலை, வெர்னான் களைப்பாக இருந்தார். ஆனால் மிகவும் சந்தோசமாகவும் இருந்தார்.

இன்று விடுமுறை நாள், இன்று கடிதம் எதுவும் வராது என்று கூறி கொண்டு செய்தித்தாளை பார்த்தார்.

அப்போது ஏதோ ஒரு சத்தம் அவர்கள் அடுப்படியில் உள்ள புகை வெளியேறும் குழாயில் கேட்டது. அதன் வழியாக முப்பது அல்லது நாற்பது கடிதங்கள் வந்தது. ஹாரி அதில் கடிதத்தை பிடிக்க முயற்சி செய்தான். ஆனால் வெர்னான் ஹாரி மற்றும் டட்லியை இழுத்து கொண்டு எல்லோருடன் வெளியே வந்து கிச்சன் கதவை மூடினார். இன்னமும் கடிதம் வந்து கொண்டு இருக்கும் சத்தம் கேட்டது.

அது தான் இப்படி செய்து இருக்கும் என்றார். பின்னர், எல்லாரும் உங்கள் துணியை எடுத்து கொள்ளுங்கள் நாம் சில நாட்களுக்கு வெளியே செல்கிறோம், என்றார். பத்து நிமிடம் கழித்து எல்லோரும் அவர்கள் காரில் ஏறி நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தனர். ஹாரியும், டட்லியும் பின்சீட்டில் இருந்தனர். வெர்னான் மற்றும் அவன் மனைவி முன்சீட்டில் இருந்தனர்.

அவர்கள் வெகு தூரம் சென்று கொண்டிருதனர். பெடுனியா, எங்கே செல்கிறோம் என்று கேட்கும் மனநிலமையில் இல்லை. எங்கேயும் நிறுத்தாமல் நாள் முழுவதும் வண்டியில் பயணம் செய்தனர். இரவு நெருங்கிய போது, டட்லி பசியில் துடிக்க ஆரம்பித்தான்.

வெர்னான் கடைசியில் நகரத்திற்கு ஒதுக்கு புறமான உள்ள ஒரு சாதாரண விடுதியின் முன் காரை நிறுத்தினார். ஹாரிக்கும், டட்லிக்கும் ஒரு இருபடுக்கை கொண்ட அறை கொடுக்கப்பட்டது. ஹாரி உறங்கவேயில்லை. தெருவில் போகும் காரின் வெளிச்சத்தை பார்த்து கொண்டு இருந்தான்.

அடுத்த நாள் காலை அவர்கள் காலை உணவை அந்த விடுதியிலே முடித்த போது அந்த விடுதியின் உரிமையாளர் அவர்கள் அமர்ந்து இருந்த இடத்திற்கு வந்தார்.

தங்களில் யாராவது Mr. H Potter இருக்கிறீர்களா? என்று கேட்டார். என்னுடைய முன் விடுதியின் முன் அறையில் இந்த கடிதம் வந்து இருந்தது என்று கூறி அந்த கடிதத்தை அவர்களிடம் காட்டினாள்.

அதில்,
Mr. H Potter.
அறை எண் 17
ரயில்வீவ் விடுதி [railview]
கோக்வோர்த் [cokeworth]
என்று பச்சை மையில் எழுதப்பட்டு இருந்தது.

அந்த கடிதத்தை ஹாரி வாங்க முயற்சி செய்தான்.அதற்குள் வெர்னான் அந்த கடிதத்தை வாங்கி கொண்டார்.

"நாமே வீட்டிற்க்கே போயி விடலாமே", என்றாள் பெட்டுனியா. ஆனால் வெர்னான் காதில் அது விழவில்லை. அவன் அவர்களை காரில் நடுகாட்டிற்கு கொண்டு போனான். கீழே இறங்கி ஒரு முறை பார்த்து இது சரியாக இருக்காது என்று நினைத்து விட்டு, மீண்டும் காரில் ஏறி மீண்டும் ஓட்டினான். மீண்டும் இதே போல கீழே இருன்வதும் மீண்டும் வண்டிக்கு திரும்பி வருவதும் அவன் சென்ற இடங்களில் எல்லாம் நடந்தது.

பொழுது விடிந்து சில மழை தூறல்கள் விழ ஆரம்பித்தது. இன்று திங்கள் கிழமை, என்னுடைய முக்கியமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளெல்லாம் பார்க்க முடியாமல் போகிறது என்று டட்லி புலம்பினான்.

ஹாரி நினைத்தான். இன்று திங்கள் கிழமை என்றாள் நாளை செவ்வாய்கிழமை ஹாரியின் பதினொன்றாவது பிறந்த நாள். அவன் பிறந்த நாள் ஒன்றும் சிறப்பாக இருக்காது. சென்ற வருடம் வெர்னான் பழைய சாக்ஸ் அவனுக்கு பிறந்த நாள் பரிசாக கிடைத்தது.

கடைசியில், வெர்னான் சிரித்து கொண்டு அருமையான இடத்தை கண்டுபிடித்து விட்டேன். எல்லோரும் வாருங்கள் என்றார் காரை விடு இறங்கி கடலை காட்டினார். அங்கு படகு வீடு நின்று கொண்டு இருந்தது.

இன்று புயல் சின்னம் இருந்தாலும் இவர் தன் படகை வாடகைக்கு கொடுக்க முன்வந்துள்ளார் என்று ஒரு வயதானவரை காட்டினார். நான் சில உணவு பொருட்களை வாங்கி வைத்துள்ளேன் என்றார். சரி சரி எல்லோரும் படகில் ஏறுங்கள் என்றார் வெர்னான்.

படகின் உள்ளே மிக நாற்றம் எடுத்தது. அந்த படகில் இரண்டே அறை தான் இருந்தது. தீ மூட்டும் இடத்தின் அருகில் வெர்னான் அமர்ந்து கொண்டு அந்த கடிதத்தை இதற்காவது உபயோகித்து கொள்ளலாம் என்றார்.
அவர் மிக்கவும் சந்தோசமாக இருந்தார். இந்த புயல் அடிக்கும் கடலில் யாரும் வந்து கடிதத்தை கொடுக்க மாட்டார்கள் என்று உறுதியாக நினைத்தார். ஹாரியும் அவ்வாறே நினைத்தான்.

இரவு நெருங்கியதும், பெட்டுனியா அங்கு இருந்த துணிகளை கொண்டு டட்லிக்கு படுக்கை அமைத்து கொடுத்து விட்டு, அடுத்த அறைக்கு சென்றாள். ஹாரி மட்டும் ஒரு துணியை எடுத்து ஒரு ஓரத்தில் விரித்து படுத்தான்.

ஹாரி புரண்டு புரண்டு படுத்தான். அவனுக்கு பசினாலும், டட்லியின் குறட்டை சத்ததினாலும் உறக்கம் வரவில்லை. ஒளிரும் விலகுகள் கொண்ட டட்லி கைகடிகாரத்தில் மணி பார்த்தான் ஹாரி. இப்போது மணி 11:49 PM . அவன் அந்த கடிகாரத்தின் அருகில் சென்று தன் பிறந்த நாள் நெருங்குவதை பார்த்து கொண்டு இருந்தான்.

இன்னும் ஐந்து நிமிடங்கள் தான் இருந்தது. அப்போது ஹாரி தன் அறையின் வெளியே ஏதோ சத்தம் கேட்பதை உணர்ந்தான். ஒரு வேலை இந்த படகின் கூரை இடிந்து விழுமோ என்று நினைத்தான். இன்னும் நான்கு நிமிடங்களே இருந்தது. திரும்ப வீட்டிற்கு செல்லும் போது வீடு முழுவதும் கடிதங்கள் இருக்கும். அதில் ஏதாவது ஒன்றை எடுக்க வேண்டும் என்று நினைத்தான்.

இன்னும் மூன்று நிமடங்கள் தான் இருந்தது. கடல் அலைகள் பாறையின் மேல் மோதுவதா இந்த மாதிரியான சத்தத்தை எழுப்புகிறது என்று நினைத்தான். இன்னும் இரண்டு நிமிடங்களே இருந்தது. என்ன சத்தம் அது கடல் அலை தானா? என்று நினைத்தான்.

இன்னும் ஒரு நிமிடம் தான் அதன் பிறகு அவனுக்கு பதினோரு வயதாகும். 30 நொடி..... இருபது..... பத்து.....ஒன்பது..................... மூன்று....... இரண்டு...........ஒன்று...........

"பூம்"..... மிக பெரிய சத்தம்.

மொத்த படகும் அதிர்ந்தது. ஹாரி அதிர்ச்சியில் எழுந்து அமர்ந்து கதவை பார்த்தான். யாரோ ஒருவர் கதவை உடைத்து கொண்டு உள்ளே வர முயற்சி செய்து கொண்டு இருந்தார்.


[ தொடரும் ]

No comments:

Post a Comment

Visitors