Sunday, February 7, 2010

ஹாரி பாட்டர் புத்தகம்1 - ஹாரி பாட்டர் மற்றும் மந்திரகல் [பதிவு 6 ]

ஹாரி பாட்டர் புத்தகம்1 - ஹாரி பாட்டர் மற்றும் மந்திரகல் [பதிவு 6 ]

அத்தியாயம் 4 : ரகசியங்களின் பாதுகாவலர் [தொடர்ச்சி]

உன்னோடைய பெற்றோர்கள் வேறெங்கு அதை எல்லாம் கற்று கொண்டு இருப்பார்கள் என்று உனக்கு தோன்றவில்லையா?".

"எதை எல்லாம்?", என்றான் ஹாரி.

ஹாக்ரிட், டர்ஸ்லியை பார்த்து, " நீங்கள் ஹாரியிடம் எதுவும் கூறவில்லையா, அவனுக்கு எதுவும் தெரியாதா?", என்று கேட்டார்.

"எனக்கு சில தெரியும்.... எனக்கு கணிதம் தெரியும்" , என்றான் ஹாரி. ஆனால் ஹாக்ரிட்," அது இல்லை, நம் உலகத்தை பற்றி, அதாவது உன்னுடைய உலகம்,என்னுடைய உலகம், உன் பெற்றோருடைய உலகத்தை பற்றி எதுவும் அவர்கள் சொல்ல வில்லையா?", என்றார்.

"எந்த உலகம்" என்றான் ஹாரி.

ஹாக்ரிட் மிக கோபத்தில், "டர்ஸ்லி", என்று கத்தினார்.

பின்னர் ஹாரியை பார்த்து உன் பெற்றோர் மிக பிரபலமானவர்கள். நீயும் தான், என்றார்.

என்னது? பிரபலமானவர்களா? என்றான் ஹாரி.

அப்போது வெர்னான், " நிறுத்து" என்றார். போதும் இதற்க்கு மேல் எதையும் அவனிடம் நீ கூற கூடாது", என்றார்.

ஹாக்ரிட் அவரை முறைத்து பார்த்தார். அவனிடம் எதுவும் நீங்கள் சொல்லவில்லை. டம்பிள்டோர் விட்டு சென்ற கடித்ததில் என்ன இருந்தது என்பதை நீங்கள் மறைத்து விட்டீர்கள், என்றார்.

எதை மறைத்து விட்டார்கள், என்றான் ஹாரி.

"போதும் அதை அவனிடம் சொல்ல கூடாது", என்று பயத்தில் கத்தினார் வெர்னான்.

அவர்களை முறைத்து பார்த்து விட்டு, " ஹாரி நீ ஒரு மந்திரவாதி", என்றார்.

"என்ன மந்திரவாதியா?", என்று அதிர்ச்சியில் உறைந்தான் ஹாரி.

"ஆமாம், உன் பெற்றோர் இருந்தால் இந்நேரம் நீ சிறிது பயிற்சியும் பெற்று இருப்பாய், ம்ம் இப்போதாவது உனக்கு வந்த கடிதத்தை படி", என்று கூறி அந்த கடிதத்தை ஹாரியிடம் கொடுத்தார் ஹாக்ரிட்.

அந்த கடிதத்தில்,
Mr. H போட்டர்
தரைபடுக்கை,
படகு வீடு,
கடல்.

என்று விலாசம் இருந்தது. ஹாரி அந்த கடிதத்தை திறந்தான்.

ஹாக்வாட்ஸ் - சூனியகாரர்கள் மற்றும் சூனியகாரிகளுக்கான பள்ளி

தலைமையாசிரியர்: ஆல்பஸ் டம்பிள்டோர்
[ மெர்லின் குழு, முதல் தரம், தலை சிறந்த சூனியக்காரர், சூனியகாரர்களின் உலக கூட்டமைப்பின் தலைமை பொறுப்பாளர்]

Mr பாட்டர்,

நீங்கள் ஹாக்வாட்ஸ் - சூனியகாரர்கள் மற்றும் சூனியகாரிகளுக்கான பள்ளியில் நீங்கள் சேர அனுமதிக்கபட்டீர்கள் என்பதை மிக மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம். இதனுடன் நீங்கள் கொண்டு வர வேண்டிய புத்தகங்கள் மற்றும் பொருட்கள் என்னென்ன என்பது இணைக்கப்பட்டுள்ளது

பள்ளி செப்டம்பர் 1 - ஆம் தேதி ஆரம்பிக்கிறது. உங்களின் ஆந்தைக்காக ஜுலை 31 - ஆம் தேதிவரை காத்து இருப்போம்.

இப்படிக்கு,
மினர்வா மெக்கொனல்.
துணை தலைமை ஆசிரியை.


இதை படித்த பின் ஹாரியின் மனதில் ஏகப்பட்ட கேள்விகள் முளைத்தது. எதை முதலில் கேட்பது என்று தெரியாமல் குழம்பினான். சிறிது நேரம் கழித்து, " என் ஆந்தைக்காக காத்து இருப்பார்களா?, அப்படி என்றாள் என்ன அர்த்தம்?", என்றான் ஹாரி.

"ஆஆ... மறந்துவிட்டேன்..." என்று கூறி தன்னுடைய சட்டை பையில் இருந்து ஒரு உயிருள்ள ஆந்தை ஒன்றை ஹாக்ரிட் எடுத்தார். பின்னர் ஒரு ஓலையில் பின்வருமாறு எழுதினார்.

பேராசிரியர் டம்பிள்டோர்,

ஹாரியிடம் கடிதத்தை சேர்து விட்டேன்.

அவனை அழைத்து கொண்டு பொருட்களை வாங்க நாளை புறப்படுகிறேன்.

இங்கு வானிலை சரியில்லை. நீங்கள் நலமாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

ஹாக்ரிட்.


அந்த ஆந்தையின் வாயில் இந்த ஓலையை சுருட்டி வைத்தார். பின்னர் கதவின் வெளியே சென்று அந்த புயலுக்கு நடுவே அந்த ஆந்தையை பறக்க விட்டுவிட்டு மீண்டும் தன் இடத்தில் வந்தமர்ந்தார்.

ஹாரி அதை ஆச்சர்யமாக பார்த்து கொண்டு இருந்தான்.

"எங்கே விட்டேன்?", என்று கேட்டார் ஹாக்ரிட்.

அப்போது வெர்னான் கோபத்தில், இவன் அங்கே போக மாட்டான்", என்றார்.

ஹாக்ரிட் முறைத்தார், " உன்னை போன்ற ஒரு மகில்[Muggle] இவனை தடுத்து நிறுத்த முடியுமா?, என்றார்.

"என்ன அது?", என்றான் ஹாரி.

" மகில் [muggle]", என்றார் ஹாக்ரிட். " மந்திரம் தெரியாத மக்களை மகில் என்று அழைப்பார்கள்", என்றார்.

இவனை எடுத்து வளர்க்கும் போதே இவன் மந்திரவாதி ஆக கூடாது என்று நாங்கள் முடிவு செய்து விட்டோம் என்றார் வெர்னான்.

" அப்போ உங்களுக்கு தெரியும் நான் ஒரு சூனியக்காரன் என்று", என்றான் ஹாரி.

"தெரியும்", என்று கத்தினாள் பெட்டுனியா...... என் தங்கை எவ்வாறனவள் என்று எனக்கு தெரியும். தீடிரென்று அவளுக்கு ஒரு கடிதம் வந்ததும் அவள் மாயமாய் மறைந்து விட்டாள். பின்னர் அவள் அந்த பள்ளியில் இருந்து விடுமுறைக்கு மட்டுமே வீடிற்கு வருவாள். அவள் வரும்போதெல்லாம் அவள் பாக்கெட்டில் தவளைகளை வர வைப்பதும் , டீ கப்பை எலியாகவும் மாற்றுவதும் செய்து கொண்டு இருப்பாள். நான் ஒருத்தி மட்டும் தான் அவள் ஒரு பைத்தியம் என்பதை அறிந்து கொண்டு இருந்தேன். ஆனால் என் பெற்றோர் லில்லியை தலை மேல் வைத்து கொண்டாடினார்கள். அவர்களுக்கு தன் குடும்பத்தில் ஒரு சூனியக்காரி இருப்பது மிக பெருமையாக இருந்தது.

பின்னர் தன் பேச்சை நிறுத்தி மூச்சு வாங்கி கொண்டாள். இதை சொல்வதற்க்காக பல வருடங்கள் காத்து இருந்தது போல அவள் மொத்தத்தையும் கொட்டி தீர்த்தாள்.

"அதன் பின் என் தங்கை பாட்டர் என்பவனை பள்ளியில் சந்தித்து திருமணம் செய்து கொண்டு உன்னை பெற்றாள், நீயும் அவர்களை மாதிரி ஒரு முட்டாள் தான். பின்னர் அவள் கொலை செய்யப்பட்டதால் நீ இங்கு வந்து தொலைந்தாய்", என்றாள்.

கொலை செய்யபட்டார்களா? நீங்கள் கார் விபத்தில் அவர்கள் இறந்தாக தானே முதலில் சொன்னீர்கள்", என்றான் ஹாரி.

" கார் விபத்தா? லில்லி மற்றும் ஜேம்ஸ் பாட்டரை கார் விபத்து எப்படி கொள்ள முடியும்", என்று கத்தினார் ஹாக்ரிட்.

ஹாரி நீ இப்படி ஒன்றும் தெரியாமல் பள்ளிக்கு வரகூடாது. நானே நடந்ததது அனைத்தையும் உன்னிடம் கூறுகிறேன்", என்றார் ஹாக்ரிட்.

பின்னர் ஹாக்ரிட் அங்கு எரிந்த நெருப்பை சில வினாடிகள் அமைதியாக இருந்தார். பின்னர்,

" அது ஆரம்பித்தது ஒருவனால், அவன் பெயர் என்ன என்பது எனக்கு தெரியாது. ஆனால் நம் உலகத்தில் இருப்பவர்கள் அவனை...... அவன் பெயரை உச்ச்சர்க்க கூட முடியவில்லை.... அவனை வால்டர்மோர்ட் என்று அழைப்பார்கள். என்னை மறுபடியும் இந்த பெயர் சொல்ல வைக்காதே... இந்த சூனியக்காரன் இருபது வருடங்களுக்கு முன்னால் தனக்கு ஆள் சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தான். சிலரையும் அவனுடன் சேர்த்தான். அவன் சக்தி வளர்ந்து கொண்டு இருந்தது. அது கருப்பு நாட்கள் ஹாரி. அவன் வழியில் குறுக்கே வந்தவர்களை எல்லாம் கொன்றான். அவனை யாராலும் தடுத்து நிறுத்த முடியவில்லை. அப்போது இருந்த ஒரே ஒரு பாதுகாப்பான இடம் ஹாக்வாட்ஸ் பள்ளி தான். டம்பில்டோருக்கு மட்டும் தான் பெயர்-உச்சரிக்க-கூடாதவன் பயந்தான்.

உன் பெற்றோர் மிக நல்ல சூனியக்காரர்கள். அவர்கள் ஹாக்வாட்ஸ் பள்ளியில் தலைமை மாணவன் மற்றும் மாணவி ஆக இருந்தவர்கள். பெயர்-உச்சரிக்க-கூடாதவன் ஏன் முன்னதாகவே அவர்களை அவன் அணியில் ஏன் சேர்க்க முயற்ச்சிக வில்லை என்று யாருக்கும் தெரியாது. அவர்கள் டம்பில்டோருக்கு நெருக்கமாக இருந்தததும் ஒரு காரணமாக இருக்கலாம்.

அவன் ஒரு நாள் நீங்கள் இருந்த கிராமத்திற்கு வந்தான். அது சரியாக பத்து வருடங்களுக்கு முன்னால் அப்போது உனக்கு ஒரு வயது இருக்கும். பெயர்-உச்சரிக்க-கூடாதவன் உன் பெற்றோரை கொன்றான். உன்னையும் கொல்ல முயற்சி செய்தான். ஆனால் உன்னை கொல்ல அவனால் முடிய வில்லை. அந்த முயற்சியில் தான் உனக்கு அந்த மின்னல் வடிவ தழும்பு ஏற்பட்டது. அது சாதாரண தழும்பு கிடையாது. ஒரு மிக சக்தி வாய்ந்த கொடுமையான சாபம் தாக்கியதால் வந்தது. மிக சிறந்த சூனியக்காரர்கள் எல்லாம் அவன் சாபத்திற்கு முன்னால் நிற்க முடிய வில்லை ஆனால் நீ மட்டும் தான் உயிரோடு இருந்தாய்." என்றார் ஹாக்ரிட்.

ஹாரிக்கு இப்போது அந்த பச்சை நிற ஒளி ஞாபகத்திற்கு வந்தது. முதல் முறையாக ஒரு குரூர சிரிப்பு அவனுக்கு ஞாபகத்திற்கு வந்தது.

நான் உன்னை அந்த சிதைந்த வீட்டில் இருந்து எடுத்து கொண்டு வந்தேன். டம்பிள்டோர் கூறிய படி உன்னை இங்கு கொண்டு வந்து சேர்த்தேன், என்றார் ஹாக்ரிட்.

ஹாரி, "ஆனால் வால்... மன்னிக்கவும் பெயர்-உச்சரிக்க-கூடாதவன் என்ன ஆனான்?, என்று கேட்டான்.

"சிலர் அவன் இறந்து விட்டதாக கூறுகிறார்கள். சிலர் அவன் சரியான தருணத்திற்காக ஒளிந்து காத்து கொண்டு இருக்கிறான் என்கிறார்கள். சிலர் அவன் திரும்பி வரமாட்டான் என்கிறார்கள். ஆனால் பலர் இன்னமும் அவன் இருக்கிறான் அவன் தன் சக்தியை இழந்து விட்டான் என்கிறனர். உன்னை கொல்ல முயற்சி செய்த போது ஏதோ நடந்து இருக்கிறது அது தான் அவனை அழித்திருக்கிறது. அது என்ன என்பது யார்க்கும் தெரியாது", என்றார் ஹாக்ரிட்.

ஆனால் ஹாரிக்கு அதற்க்கு பெருமைபட முடிய வில்லை. நான் சூனியக்காரன் என்றால் ஏன் என்னால் மந்திரம் கூற முடிய வில்லை. டட்லி என்னை தாக்கும் போது ஏன் என்னால் பாதுகாத்து கொள்ள முடியவில்லை, என்று எண்ணினான்.

"ஹாக்ரிட், நான் சூனியகாரனாக இருக்க முடியாது", என்றான் ஹாரி.

ஹாக்ரிட் அவனை ஆச்சரயதுடன் பார்த்து, " நீ கோபமாக அல்லது பயந்து இருந்த போது வியாசமான நிகளிசிகள் நடக்க வில்லையா?", என்று கேட்டார்.

ஹாரி, "தன் தலை முடி, அந்த மிருக காட்சி சாலை கண்ணாடி மற்றும் பல நிகழ்ச்சிகளை நினைத்து பார்த்தான். அவை எல்லாம் இவன் பயந்த அல்லது கோபமாக இருந்த போது நடந்தது.

ஹாக்ரிட் அவனை பார்த்து, " நீ ஒரு தலைசிறந்த சூனியகாரனாக ஹாக்வாட்ஸ் பள்ளியில் மாறுவாய், பொறுத்து இருந்து பார்", என்றார் ஹாக்ரிட்.

வெர்னான்,"அவன் எங்கும் போக மாட்டான் என்று நான் முதலே சொல்லவில்லை, அவன் கல்சுவரு[stonewall] பள்ளிக்கு தான் போக போகிறான். அவனுக்கு மந்திர புத்தகங்கள், மந்திரகோல் போன்றவை தேவையில்லை", என்றார்.

ஹாக்வாட்ஸ் பள்ளியில் அவன் பெயர் பிறந்தஹ்டு முதல் இருக்கிறது. அது மிக சிறந்த பள்ளி, அங்கு ஏழு வருடங்கள் ஹாரி படித்தால் அவன் தலை சிறந்த சூனியகாரகளில் ஒருவனாக மாறுவான். அதுவும் சிறந்த தலைமை ஆசிரியர் ஆல்பஸ் டம்பிள்டோர் அங்கு இருக்கிறார்....

"ஒரு வயதான முட்டாள் கிழவன் மந்திரதந்திரங்கள் சொல்லி தருவதற்கு நான் காசு கொடுக்க மாட்டேன்", என்றார் வெர்னான்.

ஹாக்ரிட் தன் குடை எடுத்து அவர் முன்னால் நீட்டி, "நான் உன்னை எச்சரிக்கிறேன். இன்னொரு முறை என்முன்னால் டம்பில்டோரை மரியாதை இல்லாமல் பேசினால் அவ்வளவு தான்", என்றார்.

வெர்னான் முறைத்தார். பின் தனது மகன் மற்றும் மனைவியை கூட்டி கொண்டு தன் அறைக்கு சென்றார். பின்னர் ஹாக்ரிட் ஹாரியை பார்த்து, " அவனை பன்றியாக மாற்றி இருக்க வேண்டும். ம்ம் அவன் ஏற்கனவே பன்றி போல தான் இருக்கிறான். அதனால் ஒன்றும் செய்வதற்கு இல்லை", என்றார்.

"ஹாக்வாட்சில் நான் இவ்வாறு கூறியதாக யாரிடமும் சொல்லி விடாதே, நான் மந்திரங்களை உபோயோகிக்க கூடாது", என்றார் ஹாக்ரிட்.

"நீங்கள் ஏன் மந்திரங்களை உபயோகிக்க கூடாது", என்று கேட்டான் ஹாரி.

" என்னை ஹாக்வாட்ஸ் பள்ளியில் இருந்து நீக்கி விட்டார்கள். டம்பிள்டோர் தான் என்னை பாதுகாவலராக நியமித்து என்னை அங்கே தங்க வைத்தார், சிறந்த மனிதர் டம்பிள்டோர்", என்றார் ஹாக்ரிட். "எதற்காக உங்களை பள்ளியில் இருந்து நீக்கினார்கள்", என்றான் ஹாரி.

"ஹாரி, இன்று மிக நேரமாகி விட்டது. நாளை நிறைய வேலை இருக்கிறது. உனக்கு வேண்டிய புத்தகங்களை வாங்க வேண்டும், இப்போது சென்று உறங்கு", என்று கூறி தன்னுடைய கருப்பு மேலங்கியை கழட்டி அதை விரித்து கொள்ள கூறி விட்டு அவரும் உறங்க ஆரம்பித்தார்.

[தொடரும் - அடுத்தது அத்தியாயம் 5 - கோணல் தெரு]

No comments:

Post a Comment

Visitors