Sunday, January 31, 2010

ஹாரி பாட்டர் புத்தகம்1 - ஹாரி பாட்டர் மற்றும் மந்திரகல் [பதிவு 2]

ஹாரி பாட்டர் புத்தகம்1 - ஹாரி பாட்டர் மற்றும் மந்திரகல் [பதிவு 2]

அத்தியாயம் - 2: மாயகண்ணாடி



Mrs.டர்ஸ்லி கண் விழித்து ஹாரி பாட்டரை முன் வாசலில் பார்த்து பத்து வருடங்கள் உருண்டோடி விட்டன, ஆனால் அவர்கள் இருந்த privet drive மாறாமல் அப்படியே இருந்தது. அந்த அதிகாலையில் சூரியன் உதித்து அதன் ஒளிகிரகணங்கள் அந்த வீட்டின் முன் அறையில் விழுந்தது. அந்த முன் அறை இன்னமும் மாறாமல் இருந்தது. ஆனால் அந்த சுவரில் உள்ள புகைப்படங்கள் உருண்டோடிய பத்து வருடங்களை நினைவு படுத்தி கொண்டு இருந்தது. பூசணி தலையில் தொப்பி வைத்தது போல இருந்த படம் அந்த சுவர் முழுவதும நிறைய இருந்தது. டர்ஸ்லி அவர்களின் குழந்தை டட்லி வளர்ந்து இருந்தான். அவன் சைக்கிள் ஓட்டுவது போலவும், தன் தந்தையிடம் கம்ப்யூட்டர் கற்று கொள்வது போலவும் மற்றும் தன் தாயுடன் இருக்கும் புகைப்படங்களும் நிறைய இருந்தது. ஆனால் அந்த வீட்டில் ஹாரி ஒருவன் இருப்பதிற்கான எந்த ஒரு அடையாளமும் தென்படவில்லை.


ஆனால் ஹாரி பாட்டர் அந்த வீட்டில் தான் இருந்தான். அவன் சித்தி அவனை கத்தி எழுப்பும் வரை தூங்கி கொண்டு இருந்தான்.


ஹாரி, எழுந்திரு.. என்று கத்தினாள் அவன் சித்தி.

அவள் சித்தி கிச்சனுக்கு சென்று ஏதோ ஒன்றை வறுக்கும் சத்தம் அவனுக்கு கேட்டது. அவன் படுக்கையை சுருட்டி வைத்துவிட்டு தான் கண்ட கனவை எண்ணினான். அது மிக்கவும் அருமையாக இருந்தது. அதில் பறக்கும் மோட்டர் சைக்கிள் இருந்தது. இந்த கனவை பல தடவை கண்டது போல இருந்தது அவனுக்கு.

மீண்டும் அவன் சித்தி வந்து, அவன் கதவை தட்டி, "இன்னுமா எழுந்திரிக்கவில்லை", என்று கத்தினாள். "இதோ", என்றான் ஹாரி.

இன்று டட்லி பிறந்த நாள். இன்று அனைத்துமே மிக சரியாக இருக்க வேண்டும், என்றாள். ம்.. சீக்கிரம் வந்து அடுப்பில் உள்ள ரொட்டி துண்டை கவனி என்றாள். ஹாரி எழுந்து தன்னுடைய சாக்ஸ்சை தேடினான். படுக்கைக்கு அடியில் இருந்த தன் சாக்ஸ்சை எடுத்து அதில் ஒன்றில் இருந்த சிலந்தியை தூக்கி எறிந்து விட்டு, பிறகு அதை தன் காலில் மாட்டினான். அந்த சிறிய ஸ்டோர் ரூமில் நிறைய சிலந்திகள் இருந்தாள் அவனுக்கு சிலந்தி பழகிவிட்டது.

அவன் கிச்சனுக்கு சென்று பார்த்த போது, ஒரு மேசை முழுவதும் டட்லிக்கு பிறந்த நாள் பரிசுகள் நிறைந்து இருந்தது. டட்லிக்கு பித்த விளையாட்டு ஹாரியை அடிப்பது தான். ஹாரி மிகவும் ஒளியாக இருந்தான். டட்லி ஹாரியை போல நான்கு மடங்கு இருந்தான். ஹாரிக்கு உடுதுவதேல்லாம் டட்லியின் பழைய துணிகளே. அவனுக்கு அவனிடம் பிடாத ஒரே விஷயம் அவன் நெற்றியில் இருந்த மின்னல் கேற்று போன்ற தழும்பு தான். அவன் பெற்றோர் ஒரு கார் விபத்தில் இறந்ததாக அவன் சித்தி கூறியது அவனுக்கு நினைவுக்கு வந்தது.

அவன் சித்தப்பா கிச்சனுக்கு வந்து இவனை பார்த்து தலை வரவில்லை. போய் தலை வாறி கொண்டு வா, என்றார். அவர் வாரம் ஒரு முறை ஹாரியை பார்த்து இவனுக்கு முடி வேட வேண்டாம் என்று கூறுவார். ஹாரி முடி அதிக வளர்ச்சி கொண்டு இருந்தனால் வாரம் ஒரு முறை ஹாரி முடி வெட்ட வேண்டியதாயிற்று.

டட்லி அந்த அறைக்கு வந்து தனுடைய பரிசுகளை என்ன ஆரம்பித்தான். "முப்பத்தி ஆறு"... . இது போன வருசத்தை விட ரெண்டு குறைவு என்று கத்தினான் தன் தாயை நோக்கி.

அவளும், நாம் வெளியே செல்லும் போது இன்னும் ஒரு 3 பரிசு வாங்கி கொள்ளலாம் என்றாள். அவர்கள் அனைவரும் ஒரு மிருக காட்சி சாலைக்கு செல்ல முடிவு செய்தனர்.

ஹாரியை இதுவரை அவர்கள் வெளியே எங்கும் அழைத்து சென்றதே இல்லை. எங்காவது அவர்கள் வெளியே சென்றால் இவனை பக்கத்துக்கு வீட்டில் உள்ள வயதான ஒரு அம்மாவிடம் ஒப்படைத்து விட்டு செல்வார்கள். ஆனால் இப்போது அவள் காலை உடைத்து கொண்டு மருத்தவமனையில் இருப்பதனால், இவர்கள் இவனயும் அவர்களோடு மிருககாட்சி சாலைக்கு செல்ல முடிவு செய்தனர்.

இவனை அழைத்து சென்று காரிலே விட்டுவிட்டு போகலாம், என்றாள் அவன் சித்தி. ஆனால், "கார் புதுசு. இவன் காரில் தனியாக இருப்பதா? என்றார் டர்ஸ்லி. பின்னர் ஹாரியை பார்த்து, "உன்னை எச்சரிக்கிறேன்... அங்கு வந்து எதாவது பண்ணினே, அந்த ஸ்டோர் ரூம்ல தான் கிறிஸ்துமஸ் வரைக்கும் இருக்கணும் ", என்றார்.

நான் ஒன்னும் செய்ய மாட்டேன் என்றான் ஹாரி. ஆனால் அவனை அவன் சித்தப்பா நம்ப வில்லை. ஏனெனில், அவனை அடிகடி சில வித்தியாசமான நிகழ்ச்சிகள் நடந்தது.

அவ்வாறு தான் ஒரு நாள் , அவன் சித்தி ஓயாமல் இவனுக்காக முடி வெட்டும் கடைக்கு செல்ல வேண்டிருந்த கோபத்தினால் ஒரு கத்திரிகோளை எடுத்து இவளே அவன் தலை மட்டை ஆகுமாறு வெட்டி விட்டாள். டட்லி ஹாரி தலையை பார்த்து சிரித்தான். ஹாரி அலுத்து கொண்டே அவன் படுக்கைக்கு சென்றான். காலையில் எழுந்து பார்த்தால் அவன் முடி பழைய அளவுக்கு வளர்ந்து இருந்தது.

இவ்வாறு பல சம்பவங்கள் நடந்தது. ஆனால் இன்று அவாறு ஒன்றும் நடக்காது என்று அவன் நினைத்தான். அவன் தன் சித்தப்பாவை நோக்கி, "இன்று என் கனவில் பறக்கும் மோட்டர் சைக்கிளை பார்த்தேன்", என்றான். அதற்கு அவர் " மோட்டர் சைக்கிள் பறக்காது", என்று கோபமாக கூறினார்.

எனக்கும் தெரியும். ஆன இது கனவு தான் என்றான். ஆனால் இந்த மாறி பேசுவர்த்கே ஹாரியை அனுமதிக வில்லை. அது கனவாக இருந்தாலும் அல்லது கார்டூனாக இருந்தாலும் இந்த மாதிரியான சித்தனை வந்தாள் அவனும் தன் தங்கை மாதிரி ஆயிடுவனோ, என்று பயந்தனர்.

அது ஒரு சனிக்கிழமை காலை நேரம், மிருககாட்சி சாலை முழுவதும் பலதரப்பட்ட குடும்பங்களினால் நிரந்து இருந்தது. டட்லி ஐஸ்கிரீமும், சாக்லட்டும் வாங்கினான். ஹாரிக்கு ஒரு விலை குறைந்த ஐஸ்கிரீமை வாங்கி கொடுத்தார்கள். அது ஒன்று மிக மோசமாக இல்லை. அது அவனுக்கு பிடித்து தான் இருந்தது.

அவன் வாழ்க்கையிலே மகிழ்ச்சியான காலை பொழுதைகளித்து கொண்டு இருந்தான். அவர்கள் எல்லா இடமும் சுற்றி விட்டு மதியம் அந்த மிருகசலை உணவகத்தில் மதிய உணவை முடித்து கொண்டனர்.

பின்னர், அவர்கள் பாம்பு, பல்லி, ஆமை போன்றவைகள் அடைக்கபட்ட இடத்திற்கு சென்றனர். டட்லிக்கு கோப்ராவை பார்க்க ஆசை. மிக விரைவில் டட்லி அந்த இடத்திலே மிகபெரிய பாம்பை பார்த்தான். அது முழு உடம்பையும் அவர்கள் வந்த காரை இரு முறை சுற்றி, அது நொறுக்கிற அளவுக்கு பெரியது. ஆனால் இப்பொழுது அமைதியாக அசைவற்று இருந்தது.

டட்லி அது வைக்க பட்டிருந்த கண்ணாடி கூண்டின் மேல் மூக்கை வைத்து அழுத்தி அதை பார்த்து கொண்டு இருந்தான். அது நகராமல் இருப்பதை பார்த்து, " ம்ம் இங்கே வா... நகரு " என்று கத்தினான். அவன் தந்தையும் கண்ணாடியை தட்டினார் ஆனால் அது நகராமல் மெதுவாக உஸ் என்று சத்தம மட்டும் போட்டது. இது போர் அடிக்கிறது என்று சொல்லி விட்டு டட்லி நகர்ந்தான்.

ஹாரி கண்ணாடி முன் வந்து நின்று, ஏன் இப்படி இதை கண்ணாடி கூண்டில் அடைத்து வைத்து இருக்கிறார்கள். இது இங்கயே செய்து போனாலும் யாரும் கவலை பட மாட்டார்கள். இது நான் இருக்கும் ஸ்டோர் ரூமை விட மோசமான நிலைமை. இதை எல்லாம் அறிந்து கொள்ளாமல் எல்லாரும் அதை தட்டி எழுபுவதையே குறிகோளாக கொண்டுள்ளனர், என்றான்.

உடனே, அந்த பாம்பு கண்ணை திறந்தது. அது எழுந்து அவன் முன் கண்ணாடியில் வந்து அவனை பார்த்து கண் சிமிட்டியது. ஹாரியும் அதை நோக்கினான். பின்னர் வேறு யாரும் அவத்தை பார்க்கவில்லை என்று உணர்ந்து கொண்டு அதை நோக்கி தானும் கண் சிமிட்டினான்.

அந்த பாம்பு, அவன் சித்தப்பாவும், டட்லியும் இருக்கும் திசையை தன் தலையால் காட்டி, இந்த மாதிரிதான் எப்போதும் நடக்கும். என்றது.

புரியுது, ரொம்ப தொந்தரவாக தான் இருக்கும், என்றான். அந்த பாம்பும் அதை ஆமோதிக்கும் விதமாக தலையாட்டியது.

சரி, நீ எங்க இருந்து வந்தே? என்று கேட்டான் ஹாரி. அதற்கு அந்த பாம்பு தன் வாலால் அந்த கண்ணாடி ஓரத்தில் இருந்த ஒரு பலகையை காட்டியது. அதில் BOA CONSTRICTOR[பாம்பின் வகை], பிரேசில் என்று போட்டு இருந்தது.

ஓ, பிரேசிலா... அந்த இடம் எப்படி இருந்தது? என்று கேட்டான், ஹாரி. அதற்கு அந்த பாம்பு மீண்டும் அந்த பலகையை தன் வாலால் தட்டியது. அதில் "இது மிருககாட்சி சாலை ஆரயிச்சிகூடத்தில் பிறந்தது", என்று போட்டு இருந்தது. ஓ, அப்பா நீ பிரேசிலுக்கே போனந்து இல்லையா, என்றான்.

அந்த பாம்பு அதற்கு தலையாட்டிய பொழுது, கதை கிளிக்கும் விதத்தில் டட்லி "அப்பா, அந்த பாம்பை பாருங்கள் என்று ஓடி வந்தான். வந்தவன் ஹாரியை இடுப்பில் குத்தி கீழே தள்ளிவிட்டு, அவன் கண்ணாடி அருக்கில் சென்று பாம்பை பார்த்தான்.

அப்போது என்ன நடந்தது என்று அறிவதற்குள், மிருககாட்சி சாலை முழுவதும் ஒரே அலறல். அந்த பாம்பை அடைத்து வைத்து இருந்த அந்த கண்ணாடி மாயமாய் மறைந்து போனது. பாம்பு, அந்த கூண்டை விடு வெளியே வந்து கொண்டு இருந்தது.

எல்லாரும் வாசலை நோக்கி ஓடி கொண்டு இருந்தார்கள். அந்த பாம்பு, "பிரேசில், இதோ நான் வரேன்", என்றது. பின்னர் ஹாரியை நோக்கி நன்றி என்றது.

யார்க்கும் ஒன்றும் புரியவில்லை எவ்வாறு அந்த கண்ணாடி மாயமாக மறைந்தது என்று. ஹாரியின் சித்தப்பா மட்டும் அவனை முறைத்து பார்த்தார்.

பின்னர் எல்லோரும் தங்கள் வீட்டுக்கு சென்றனர். அவன் சித்தப்பா அவனை நோக்கி உனக்கு இன்று சாப்பாடு கிடையாது. உன் அறைக்கு போ என்றார்.

இங்கு அவன் வந்து பத்து வருடம் ஆகிறது. அவன் சித்தி அவனுடைய பெற்றோர் ஒரு கார் விபத்தில் இறந்தனர் என்று கூறியது மட்டுமே அவனுக்கு நினைவில் இருக்கிறது . அவர்கள் எவ்வாறு இருந்தார்கள் என்ற ஞாபகம் கோடா அவனுக்கு இல்லை. அவன் பெற்றோர் புகைப்படம் கூட ஒன்றும் இல்லை. அவனுக்கு ஞாபகம் இருந்த ஒரே விஷயம் ஒரு பச்சை நிற ஒளியை பார்த்த ஞாபகம் அதை நினைக்கும் போது அவன் நெற்றி எரிவது போல இருக்கும் அவனுக்கு. ஆனால் இது கார் விபத்தின் போது நடந்தது என்றாள் பச்சை நிற ஒளி எங்கிருந்து வந்தது என்பதை அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை .

மிக சிறிய வயதில் ஹாரி தன் சித்தியுடன் கடைக்கு சென்ற போது ஒரு ஊதா நிற உடை உடுத்திய ஒருவன் இவனை பார்த்து மரியாதையை செலுத்தியதை இவனால் மறக்க முடியவில்லை . இந்த மாதிரி பல வர்ண உடை உடுதியர்வகள் இவன் வெளியே செலும் போது இவனை பார்த்து மரியாதையை செலுத்தினர். இவன் அவர்கள் அருகில் சென்று பார்க்கலாம் என்று போகும் போது அவர்கள் திடிரென்று மறைந்து விடுவார்கள் . இந்த மாதிரி பல வித்தியாசமான நிகழ்ச்சிகள் அவனை சுற்றி நடந்து கொண்டு இருந்தது.

பள்ளியிலும் அவன்னுக்கு நண்பர்கள் என்று யாரும் கிடையாது. இந்த தொளதொள உடையும், உடைந்த கண்ணாடியும் அணிந்த ஹாரியை, டட்லி கேங்குக்கு பிடிக்காது , என்று எல்லோருக்கும் தெரியும். யாரும் டட்லி கேங்கை எதிர்க்க விரும்பவில்லை.

[தொடரும்]

1 comment:

  1. படிச்சுட்டேன்...விறுவிறுப்பா இருக்கு இனிமே நேரா ப்ளாக்கிற்கே வந்து படிச்சுடுறேன்..

    ReplyDelete

Visitors